Search This Blog

Monday, October 8, 2012

சிங்கங்கள் புலிகள் மிகவும் அருகிவருகின்றன


ஆபிரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரை மில்லியன் அளவில் அதாவது 450,000 ஆக காணப்பட்ட சிங்கங்கள் இன்று 16000-23000க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலேயே மிஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை யானைகள், சிங்கங்கள் உட்பட அதிகளவான உயிரினங்கள் சர்வதேச ரீதியாக குறிப்பிட்ட சில காரணங்களினால் பாதுகாப்பின்மைகளை எதிர் நோக்கியுள்ளன.

புலிகளும் பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளன. புலிகளின் எண்ணிக்கை 3000க்கும் குறைவாகவே காணப்படுகின்றனவாம். புலிகள் மிகவும் அருகிவருகின்றன. புலிகளின் எலும்புகள் கிழக்குலகில் மருத்துவ தேவைகளுக்காகவும், ஆயுர்வேத முறையில் வியாதிகளினைக் குணமாக்குவதற்கும் பயன்படுத்துவதனலால் இதற்கான கேள்வி அதிகமாகக் காணப்படுகின்றதாம். வளர்ச்சியடைந்த கேள்வி, அத்துடன் சுருங்குகின்ற விநியோகம் இந்த அபாயத்துக்கான சூத்திரமாகும்.

இதன் காரணமாக புலிகளின் எலும்புகளிலிருந்து, சிங்கங்களின் என்புகளுக்கு மாற்றீடு பெற்றுள்ளது. இவை புலிகளின் எலும்புகளுக்குப் பதிலாக இலகுவாக விற்கப்படுகின்றதாம்.
சிங்கங்கள் ஆபிரிக்காவில் மிகவும் பிரபலமான விலங்காகும். அதேவேளை உலகிலும் பிரபலமானது எனலாம். கடந்த 20ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறைவடைந்துள்ளனவாம்.

இவை பெரியளவிலான அச்சுறுத்தல்களை வேட்டைக்காரர்களிடமிருந்தும், சட்டவிரோத கும்பல்களிடமிருந்தும் எதிர் நோக்குகின்றன. கொலைகாரர்கள் மிருகங்களினைக் கொல்ல பூச்சிகொல்லிகளையும் பயன்படுத்துகின்றார்களாம்.

அழிவு அல்லது கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக 2020ம் ஆண்டுக்குப் பின்னர் வேட்டையாடுவதற்கோ அல்லது பாதுகாப்பதற்காகவோ சிங்கங்களே காணப்படமாட்டாதாம் என அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 15 வருடங்களில் காண்டா மிருகங்கள் வேட்டையாடப்படும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் காண்டா மிருகங்களின் வேட்டை அதிகரித்துள்ளனவாம். இதற்கான காரணம் காண்டா மிருகக் கொம்புகளுக்கு நிலவும் அதிகரித்த கேள்வியாகும். ஏனெனில் இவை அதிகமான மருத்துவக் குணங்கள் பொருந்தியதாகக் காணப்படுவதேயாகும். முழு ஆபிரிக்காவிலும் 18000 காண்டா மிருகங்கள் உள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதிகரித்த வேகத்தில் இவை கொல்லப்படுவதன் காரணமாக இவற்றின் குடித்தொகை வெகுவாகக் குறைய காரணியாகி விடும் என அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

வேட்டைக்காரர்களிடமிருந்தும், சட்டவிரோத கும்பல்களிடமிருந்தும் உயிரினங்களினை பாதுகாக்க நாம் தவறிவிட்டோம் அத்துடன் அதிக காலம் தாமதித்துவிட்டோம்.
விஞ்ஞானிகள், சுற்றாடல் பாதுகாவலர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் தற்சமயம் உணரப்படுகின்றமை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

No comments:

Post a Comment