Search This Blog

Sunday, September 23, 2012

யூதர்கள் வரலாறு

யூதர்கள் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த இனங்களில் இவர்களது இனமும் நிச்சயமாய் அடங்கும். ரத்தம் தோய்ந்த வரலாற்றை தமதாக்கி கொண்ட இனங்களில் இவர்களும் முக்கியம் வாய்ந்தவர்கள். யூதர்களை குறித்த வரலாற்றை முடிந்த அளவில் [என்னறிவுக்கு எட்டிய வரையில்] தருவதே இத்தொடர் கட்டுரையின் நோக்கம்.யூதர்கள் குறித்து அறியமுதல் அவர்களின் தொடக்கம் குறித்து ஆராய்வது தகும்.

பைபிள் காலத்துக்கு முந்தைய யூதர்கள்தோற்றமும் பரம்பலும்


கிறிஸ்தவர்களுக்கு முதல் தோன்றிய யூதர்களின் தோற்றம் குறித்து நாம் அறிய யூதர்களின் வேதநூலான தோரா,கிறிஸ்தவர்களின் வேதநூலான பைபிள்,இஸ்லாமியர்களின் வேதநூலான குர்ஆன் போன்ற நூல்கள் உதவுகின்றன. இம்மூன்று நூல்களிலும் பொதுவாக சொல்லப்படும் யூதர்களின் தோற்றம் குறித்த கதையொன்றை சுருக்கமாக பார்க்கலாம்.

"ஆதாம் ஏவாளின் 19 ஆம் தலைமுறைப் பேரனாக பிறந்த ஆபிரஹாமின் மனைவி சாரா என்பவளுக்கு நீண்ட காலமாக பிள்ளைபேறு கிடைக்கவில்லை. இதனால் குழப்பமுற்ற சாரா தனது வேலைக்காரிகளில் ஒருத்தியான ஆகார் என்பவளை ஆபிரஹாமிர்க்கு இரண்டாம் தாரமாக மணம் முடித்து வைத்தாள். மணமான சிறிது நாட்களிலேயே ஆகார் கர்ப்பமாகி இஸ்மயீல் எனும் மகனை பெற்றெடுத்தாள் . சிறிது காலம் கழித்து சாராவிட்க்கும் ஈஸாக் எனும் மகன் கிமு 1712 ஆம் ஆண்டு பிறந்தான். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட வாரிசு பிரச்னை காரணமாக தன மகன் இஸ்மயிலை அழைத்துக்கொண்டு வேலைகாரப்பெண் ஆகார் வீட்டை விட்டு வெளியேறி பாரான் என்ற பாலை நிலத்தில் குடியேறி தன மகனுக்கு எகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணை மணம் செய்து வைத்தாள்.இதே நேரம் சாராவின் மகனான ஈசாக்கிட்க்கும் ரெபேக்காவிட்க்கும் திருமணம் நடக்கிறது. ஈஸாக்கை தொடர்ந்து வந்த அவன் சந்ததியினரே யூதர்கள் என்றும் இஸ்மயிலை தொடர்ந்து வந்த அவனது சந்ததியினர் அரேபியர்கள் என்றும் கூறப்படுகிறது" [ஆபிரஹாமின் வம்சத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் அத்தனை பேருக்கும் சுன்னத் எனப்படும் விருத்த சேனம் செய்து வைக்கப்பட்டதுடன் அது அவர்களின் மரபு . இம்மரபை யூதர்களும் இஸ்லாமியர்களும் இன்றுவரை கடைபிடிப்பது கவனிக்கத்தக்கது.]

இக்கதை பொதுவாக மேற் கூறப்பட்ட மூன்று நூல்களிலும் கூறப்பட்டவை.. இனி ஈஸாக்கின் சந்ததியை குறித்து சிறிது சுருக்கமாக நோக்கலாம். ஈசாக்கிட்க்கும் , ரெபேக்காவிட்க்கும் பிறந்த மூத்த மகன் ஏசா, அடுத்த மகன் யாக்கோபு இதன் பிறகு யாக்கோபுவின் மகனான ஜோசப் எகிப்து மன்னனின் கீழ் முக்கியமான பதவியிலிருந்த போது தன் சகோதரர்களையும் தந்தையையும் அழைத்து தன்னுடன் தங்க வைத்து கொண்டான். இவ்வாறு எகிப்தில் குடியமர்ந்த யாக்கோபுவின் சந்ததியினர் காலப்போக்கில் எகிப்தியர்களை விட பல்கி பெருகியதுடன் இஸ்ரவேலர்கள் என்று அழைக்கபட்டனர். [யாக்கோபு இஸ்ரயேல் என்றும் அழைக்கபட்டான்]. பெருகிப்போன இஸ்ரவேலர்களை கண்டு பயந்த எகிப்தியர்களும் எகிப்திய மன்னனும் அவர்களுக்கு பல துன்பங்களை விளைவித்தனர்.


அவர்களை மீட்டெடுத்து எகிப்தை விட்டு அழைத்து வந்த மோசஸ் அவர்களின் தலைவராயும் ஆனார் வரும் வழியில் சீனாய் பாலை நிலத்தில் தங்கியிருந்த போது தான் இவர்களின் மதக் கொள்கைகளும் ,தோரா எனப்படும் யூதர்களின் வேத நூலும் பிறந்தன.

------------------------------------------------------------

இஸ்ரேலில் ஜோஷுவா தலைமையில் யூதர்கள் முதல் நுழைவுதொடர்ந்து மோசஸ் தன் நம்பிக்கைக்கு உரிய தளபதி ஜோஷுவா விடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தபின் சீனாய் பகுதிகளிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர்கள் எரிக்கோ எனப்பட்ட சுற்று மதில்களால் சூழப்பட்ட இன்றைய இஸ்ரேலை அடைந்தனர். அவர்கள் உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சுவர்களை தகர்த்து உள்நுழைந்த அவர்கள் சகலரையும் கொன்று [ஒரு தேவதாசியின் குடும்பம் விதிவிலக்கு] ஜோஷுவா தலைமையில் கிமு 1272 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கேயே வாழத்தொடங்கினர்.


மன்னராட்சியின் ஆரம்பம்


இவ்வாறு இஸ்ரேலில் வாழத்தொடங்கி பல ஆண்டுகளின் பின்னர் தமக்கென்று ஒரு மன்னர் இலாத காரணத்தினால் சீலோ எனும் இடத்திலிருந்த ஆலய நிர்வாகியான சாமுவேலிடம் தமக்கு மன்னர் வேண்டும் என முறையிட்ட மக்களின் வேண்டுதலுக்கு இணங்க பெயர் குழுக்கள் முறை மூலம் தெரியபட்டவனே யூதர்களின் முதல் மன்னனான சவுல் இவனின் பின்னர் தாவிதும் அவனுக்கு அடுத்து சாலமோனும் மன்னரானார்கள்.


இவனது காலத்தில் தான் சாலமோன்தேவாலயம் கட்டப்பட்டது.அதன் பின்னர் ரெஹோபோம் ஆட்சிக்கு வந்தான் இவனது திறமையின்மையால் இஸ்ரேல் இரண்டாக பிரிந்ததுடன் வட பகுதியை பத்து பழங்குடியினத்தவர் சேர்ந்து தனி ஆட்சி புரிய ஆரம்பித்தனர் இது ஜிதேயா எனப்பட்டது. தெற்கு பகுதி இஸ்ரேலாகவே நீடித்தது இதன் பின்னர் இஸ்ரேலை கைப்பற்றிய பாபிலோனியர்கள் அதாவது கிரேக்கர்கள் அண்ணளவாக 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்தனர். இதன் போது இடிக்கப்பட்ட சாலமோன் தேவாலயம் இவர்கள் காலத்திலேயே மீண்டும் இரண்டாம் முறையாய் கட்டப்பட்டது.

இயேசுவின் காலத்திலேயே ரோமின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது ஜிதேயா. இப்படியே ரோமின் ஆட்சியில் ஜிதேயாவின் காலம் நடந்த காலம் தான் கிபி 66 ஆம் ஆண்டு. ஜிதேயாவின் கவர்னராயிருந்த ஆக்ரிப்பா-1 என்பவர் ரோமானியர்கள் போன்று மன்னனை வழிபடும் முறையை யூதர்களால் மேற்கொள்ள முடியாது என்றும் யூதர்களை அவர்களின் மதத்தை தொடர்ந்து பின்பற்ற அனுமதிக்கும் படியும் ரோமானிய மன்னனிடம் கேட்டதிட்க்கு இணங்க அவனும் அனுமதித்தான். ஆனால் எவ்வளவு காலம் தான் தொடர்ந்து அந்நியனின் ஆட்சியில் தங்களின் புனிதநகரான ஜெருசலேமை விட்டு வைக்க விரும்புவார்கள் யூதர்கள் விளைவு ரோமானியர்களுக்கு எதிரான புரட்சி படையான ஸிலாட்[ZEALOTS] என்ற ஒரு போராடும் அமைப்பை உருவாக்கிவிட்டார்கள். பிறகென்ன ரோமானியர்கள் எதிர்பார்க்காத ஒரு நாளில் தம் போரை ஆரம்பித்து ஜெருசலேமை கைப்பற்றியும் விட்டார்கள். ரோமானியப் பேரரசா..??? யூதர்களா....???? ரோமானியப் பேரரசுதானே...... பிறகென்ன டைட்டஸ்[TITUS] என்பவன் கடல் என ரோமானிய படையை திரட்டி ஜெருசலேம் மீது பாய்ந்து விட்டான் பிறகென்ன கண்கண்ட இடமெல்லாம் யூதர்களின் இரத்தம் தான். ஸிலாட்டா...?? தாங்குமா ரோமானியர்களின் பெரும் படையின் முன்னால் அவ்வியக்கத்திலிருந்த அனைவரையும் விண்ணுலகிட்க்கு இலவசமாகவே அனுப்பிவிட்டனர் ரோமானியர்கள். அது மட்டுமா எங்கள் மன்னரையா வழிபட மறுத்தீர்கள் அதற்க்கு காரணமானது இந்த சாலமன் தேவாலயம் தானே..??? இஜேசுவின் தீர்க்க தரிசனம் பலித்தது "சாலமன் தேவாலயம் இடிக்கப்படும்................" முடிவு தெரிந்ததுதான் சாலமன் தேவாலயம் சுற்று சுவர்களுடன் கிபி 70 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.ஆம் அதன் பின்னர் எஞ்சியது ஒரே ஒரு சுவர் மட்டும் தான் இன்றுவரை யூதர்கள் அந்த சுவரை தான் வணங்கி வருகிறார்கள் (படத்தில் ) என்றாவது ஒரு தேவதூதர் வருவார் சாலமன் தேவாலயத்தை மீண்டும் கட்டிக்கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன்........ கிறிஸ்தவர்கள், ரோமானியர்கள்... இரண்டு எதிரிகளையும் எப்படி சமாளிப்பது...........??? இதோ வழி மீண்டும் ஸிலாட் புரட்சிப் படையை அமைத்து விடலாம் சிந்தித்த யூதர்கள் ரகசியமாக செயற்படவும் ஆரம்பித்துவிட்டார்கள்........ பலஸ்தீனத்திட்க்கு [பாலஸ்தீன் என்று பின்னாளில் அழைக்கப்பட்டது பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பின் ஒரு பகுதிதான் இஸ்ரேல் ஆக்கப்பட்டது.] வெளியே இருந்த யூதர்களும் புரட்சிப் படையை அமைக்க உதவினார்கள். "நாம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இனம் ஜெருசலேம் கடவுள் எங்களுக்கு அளித்த புனித பூமி.........." இவை தான் யூதர்களின் மனதில் கனற்று கொண்டிருந்தன . விளைவு தெரிந்ததுதான்.... ஆங்காங்கே யூதர்களுக்கும் ரோமானியர்களுக்கும் சிறு சிறு கலவரங்கள் நடந்து கொண்டே இருந்தன.


கிபி 73 ஆம் ஆண்டு மஸதா[MASADA] என்ற இடத்தில் யூதர்கள் இருந்த இடத்தில் ரோமானியர்கள் மேற்கொண்ட கொடூரமான போர் யூதர்களின் வரலாற்றை மேலும் ரத்தமாக்கி விட்டது........ கண்ட இடமெல்லாம் யூதர்களின் பிணம் தான்...... யூதர்களா...???? யார் அவர்கள்...?? என்று பின்னால் வரலாற்றை கேட்க வைப்பது தான் ஒரே நோக்கம் போலிருந்ததாம் அந்த தாக்குதல்...... பெண்கள் பலாத்காரப் படுத்தப் பட்டார்கள்.....பின் கொல்லப்பட்டார்கள் ......ஆண்கள் எம்மாத்திரம் அவர்கள் முதலிலேயே விண்ணுலகம் விஜயம் செய்துவிட்டனர்....... குழந்தைகளின் தலைகளை சீவியதன் மூலம் தான் தங்கள் வாள்களை கூர்மை படுத்திக் கொண்டார்கள். யூதர்கள் வாழ்ந்ததிட்க்கு அவர்கள் வளர்த்த கால்நடைகள் சாட்சியாய் அமைந்து விடக் கூடாதல்லவா..??? கால்நடைகளும் மரணித்தன. அவ்வளவுதான் மஸதா முடிவுற்றது. ஆனால் யூதர்கள் ரோமானியர்களின் விளையடுப் பொருள்தானே........... ஆம் ஜெருசலேம் தான் யூதர்களின் புனித பூமியாயிற்றே........... அங்கிருந்தே அவர்களை அகற்றி விட்டால்.......... பிறகென்ன சிந்தனை செயற்பாடுதான். புனித பூமியிலிருந்து அதன் சொந்தக்காரர்கள் விரட்டப் பட்டார்கள் மறுத்த யூதர்கள் கொல்லப்பட்டார்கள் . யூதர்களின் பிணம் கூட ஜெருசலேமில் இருக்கவில்லை. யூதர்கள் ஓடினார்கள் ஜெருசலேமை சுற்றியுள்ள கடற்கரையோரக் கிராமங்களில் வாழ்ந்த அராபியர்களிடம் தஞ்சம் புகுந்தார்கள்;பாதை மாறுகிறது.......


இனியும் ரோமானியர்களுடன் மோதினால் அழிவே எஞ்சும் என்றறிந்துவிட்டனர் யூதர்கள். பாதையை மாற்றி விடுவோம் .... ஆம் போராட்ட பாதையிலிருந்து அறிவியல் பாதை.... தீர்மானித்து விட்டார்கள் . அழிந்து செல்லும் தங்கள் இனப் பெருமையை தக்க வைக்க அது ஓன்று தான் வழி எவ்வளவு புனிதமான இனத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்.....அறிவியல் நோக்கிய பயணம் ஆரம்பமாகிவிட்டது. இதற்க்கு வித்திட்டவர் ஜோஹனன் வென்சகாய்[JOHANAN BENZAKKAI] என்னும் யூதத் துறவி. ரோமானிய மன்னனிடம் சென்று யூதர்கள் நாங்கள் எம் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டி கல்வி புகட்ட விரும்புகிறோம் அதற்கு தங்களால் எதுவித இடையூறும் வரக்கூடாது என கூற மன்னனும் சம்மதித்து விட்டான். பிறகென்ன கல்வி புரட்சி ஆரம்பமாயிற்று தோரா எனும் வேதநூலிலிருந்து.......ரபி[RABI] என்றழைக்கப் பட்ட யூதக் கல்வியியலாளர்கள் தங்கள் கடமையை செவ்வனே ஆரம்பித்து விட்டனர். கிபி 70 தொடக்கம் கிபி 115 வரை யூதர்கள் வசித்த எந்த ஒரு பிரதேசத்திலும் புரட்சிகள் பெரிதாக வெடிக்கவில்லை. 

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது.
 உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. 
அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.

ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி பண்ணிக் கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகள் எனது 2 ஆம் ஆண்டில் அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.
எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.
suran

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். அப்போது அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?” என்று கேட்பேன். “ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?” என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.
கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை  (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.
மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு  நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.
மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்..
உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.
suran
சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.
இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர்……..யார் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.
முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிரார்கள்.
என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் -  ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு  கட்டாயம்
இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை  படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்..
suran

யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம்  சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும்  மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.
உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.
போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு  முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்;  10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.
இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு  மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.
இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை  (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை  தற்செயல் என்று சொல்லலாமா?
நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.
யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.
2005 இல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். 
இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. 
ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான். 
சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.
இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். 
 எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள்.
 பலன்? 
suran
லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.
சற்று சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆய்வறிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.
நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க முடியுமா?

No comments:

Post a Comment