Search This Blog

Tuesday, September 25, 2012

சில நோய்களுக்கான மூலிகை மருந்துகள்உடல் நலம் சரியில்லை என்றால் நிறைய பேர் உடனே மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் ஒருசிலர் நமது பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுவார்கள். ஏனெனில் நமது பாரம்பரிய வீட்டு மருந்துகளின் அருமை அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதே ஆகும்.
ஆனால் சிலருக்கு அதன் அருமை, அதனைப் பற்றிய ஒரு நன்மைகள் சரியாக தெரியவில்லை. மேலும் நிறைய மக்கள் கெமிக்கல் உள்ள மருந்துகளை பயன்படுத்துதைவிட, மூலிகை மருத்துவமான ஆயுர்வேதத்தை தான் பின்பற்றுகிறார்கள்.
கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது.
அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.
இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும்.
மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள்.
இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.
இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.
ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்.


மூலிகைகளை பயன்படுத்தும் விதம்
மூலிகைகளை பல விதங்களில் மருந்தாக பயன்படுத்தலாம்; டீ, கஷாயம், சாராயக்கரைசல் (tincture), பத்து (poultice) போன்ற வடிவில் உபயோகிக்கலாம். ‘மூலிகை டீ’ தயாரிக்க மூலிகை மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்ற வேண்டும், ஆனால் மூலிகையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். கஷாயம், மூலிகை வேர்களையும் பட்டைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது; மருத்துவ குணமுள்ள பொருட்களின் சாறை இறக்குவதற்கு அவை இவ்வாறு கொதிக்க வைக்கப்படுகின்றன.
சாராயக்கரைசல்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? அவை “சுத்தமான அல்லது நீர்கலந்த மது, பிராந்தி, வோட்கா போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை சாறுகள்” என ஒரு புத்தகம் சொல்கிறது. பத்துகளோ பல விதங்களில் தயாரிக்கப்படலாம். பொதுவாக அவை நோய்ப்பட்ட அல்லது வலியுள்ள உடல் உறுப்புகளின்மீது தடவப்படுகின்றன.
அநேக வைட்டமின்களையும் மருந்துகளையும் போலல்லாமல், பெரும்பாலான மூலிகைகள் உணவுப்பொருட்களாகவே கருதப்படுகின்றன; அவை பெரும்பாலும் வெறும் வயிற்றில் உட்கொள்ளப்படுகின்றன. மாத்திரை வடிவில்கூட அவை உட்கொள்ளப்படலாம்; அதிக சௌகரியமாகவும் சுவை தெரியாமலும் விழுங்கிவிட மாத்திரைகள் வசதியானவை. மூலிகை மருந்துகளை பயன்படுத்த நீங்கள் முடிவு செய்தால், மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
காலங்காலமாக, ஜலதோஷம், அஜீரணம், மலச்சிக்கல், தூக்கமின்மை, குமட்டல் போன்றவற்றிற்கு மூலிகைகளே பரிந்துரைக்கப்படுகின்றன. இருந்தாலும், அதைவிட பெரிய கோளாறுகளுக்கும் அவை சிலசமயங்களில் உபயோகிக்கப்படுகின்றன; அதுவும் குணப்படுத்தும் மருந்தாக மட்டுமல்ல, தடுப்புமருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும், சா பால்மெட்டோ (Serenoa repensஎன்ற மூலிகை, புற்றுநோயல்லாத விந்துச்சுரப்பி வீக்கத்திற்கு (benign prostatic hyperplasia) ஆரம்ப சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. சில நாடுகளில் இந்த வியாதி 50 முதல் 60 சதவீத ஆண்களுக்கு வருகிறது. இருந்தாலும் அந்த வீக்கத்தின் காரணத்தை மருத்துவர் கண்டுபிடிப்பது முக்கியம்; அப்போதுதான் புற்றுநோயைப் போல் இதற்கு தீவிர சிகிச்சை தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.
சில எச்சரிக்கைகள்
ஒரு மூலிகை தீங்கற்றதென பரவலாக கருதப்பட்டாலும் எச்சரிக்கையாயிருப்பது அவசியம். “இயற்கை மருந்து” என்ற லேபிளைப் பார்த்தவுடனேயே பயப்பட தேவையில்லை என ஒருபோதும் நினைக்காதீர்கள். மூலிகைகள் சம்பந்தமாக ஒரு என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “சில மூலிகைகள் மிக ஆபத்தானவை என்பதே கசப்பான உண்மை. [வருத்தகரமாகசிலர் எவ்வித மூலிகைக்கும், அது ஆபத்தானதோ இல்லையோ, தகுந்த கவனம் செலுத்துவதில்லை.” மூலிகைகளில் உள்ள ரசாயனப் பொருட்கள் இதயத்துடிப்பை, இரத்த அழுத்தத்தை, க்ளூகோஸ் அளவை மாற்றலாம். ஆகவே இதயக் கோளாறு, உயர் இரத்த அழுத்தம், அல்லது சர்க்கரை நோய் போன்ற கோளாறுகள் உள்ளவர்கள் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
என்றாலும் பொதுவாக, மூலிகைகளின் பக்க பாதிப்புகள் அலர்ஜியைப் போலத்தான் இருக்கின்றன. அதாவது, தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், தோல் தடிப்பு போன்ற பாதிப்புகள்தான் ஏற்படுகின்றன. மூலிகைகள் ஃப்ளூ காய்ச்சலை அல்லது மற்ற அறிகுறிகளை உண்டாக்குவதன் மூலம் “குணப்படுத்தும் சீரழிவை” தூண்டுவதாகக்கூட சொல்லப்படுகிறது. அதாவது மூலிகைகளை சாப்பிடும் ஒருவரின் உடல்நிலை முதலில் மிகவும் மோசமாகும், பிறகுதான் தேறும். மூலிகை வேலை செய்ய ஆரம்பிக்கும் சமயத்தில் உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதால் அவ்வாறு நடப்பதாக சொல்லப்படுகிறது.
அவ்வப்போது, குறிப்பிட்ட சில மூலிகைகளால் சிலர் உயிரையே இழந்திருக்கிறார்கள்; ஆகவே உஷாராக இருப்பதும், விஷயமறிந்தவர்களின் உதவியைப் பெறுவதும் எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. உதாரணத்திற்கு, உடல் எடையைக் குறைப்பதற்காக பொதுவாக உட்கொள்ளப்படும் எஃபிடிரா என்ற மூலிகை, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஐக்கிய மாகாணங்களில் அறிக்கை செய்யப்பட்டிருக்கும் 100-⁠க்கும் அதிகமான சாவுக்குக் காரணம் எஃபிடிரா என்று சொல்லப்படுகிறது; இருந்தாலும் சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த நோயியல் மருத்துவரான ஸ்டீவன் கார்ச் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எனக்குத் தெரிந்தவரை [எஃபிடிராவை சாப்பிட்டதால்இறந்தவர்களுக்கு கடும் இதயத்தமனி நோய் இருந்தது அல்லது அவர்கள் எஃபிடிராவை அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிட்டார்கள்.”
மூலிகை மருந்துகள் பற்றிய ஒரு புத்தக ஆசிரியரான டாக்டர் லோகன் சேம்பர்லின் இவ்வாறு சொல்கிறார்: “சமீப வருடங்களில், மூலிகைகளால் தீய பாதிப்புகள் ஏற்பட்டதாக காட்டும் ஒவ்வொரு அறிக்கையை எடுத்துக்கொண்டாலும், ஆலோசனைகளை பின்பற்றாததால் வந்த வினையே அது என்பது தெளிவாகிறது. . . . நம்பத்தகுந்த மருந்துபொருட்களின் லேபிளில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் பாதுகாப்பானவை, மிதமானவைகூட. ஆகவே, பயிற்சி பெற்ற மூலிகை நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அதன் அளவை கூட்டிக் குறைக்கலாம்.”
மூலிகை நிபுணரான லின்டா பேஜ் இந்த எச்சரிக்கையை தருகிறார்: “உடல்நிலை மிக மோசமாக இருந்தால்கூட, மிதமாகத்தான் மருந்துகளை சாப்பிட வேண்டும், அளவுக்கதிகமாக அல்ல. சிறந்த பலனைப் பெறுவதற்கு உங்களுக்கு தேவை அதிக நேரமும் மிதமான சிகிச்சையும்தான். ஆரோக்கியத்தை மீண்டும் பெற காலம் எடுக்கும்.”
சில மூலிகைகள், அளவுக்கு மீறி உட்கொள்ளப்பட்டால் உடனே எதிர்விளைவை உண்டாக்குகின்றன; இவ்வாறு அதன் அளவு அதிகமாகிவிடாதபடி பாதுகாக்கும் இயல்பை இயற்கையாகவே பெற்றிருக்கின்றன என்று மூலிகையியல் புத்தகம் ஒன்று கூறுகிறது. உதாரணத்திற்கு, உடலை ரிலாக்ஸ் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை, அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படும்போது வாந்தியை உண்டுபண்ணுகிறது. இருந்தாலும், இந்த குணம் எல்லா மூலிகைகளுக்குமே இல்லை; ஆகவே உரிய அளவு மட்டுமே சாப்பிட வேண்டியது எப்போதும் அவசியம்.
இருந்தாலும், ஒரு மூலிகை திறம்பட வேலை செய்வதற்கு போதுமான அளவை தகுந்த வடிவில் சாப்பிடுவது அவசியம் என அநேகர் நினைக்கிறார்கள். சிலசமயங்களில் இவ்வாறு செய்வதற்கு ஒரே வழி சாரத்தை பிரித்தெடுப்பதாகும். ஞாபகசக்தியையும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிப்பதற்காக வெகு காலமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் ஜின்க்கோ பிலோபா என்ற மூலிகையைப் பொறுத்தவரை இதுதான் செய்யப்படுகிறது. ஏனென்றால், ஒருமுறை சாப்பிடுவதற்கு தேவையான அளவைத் தயாரிக்கவே பவுண்டு கணக்கில் இலைகள் தேவை; அப்போதுதான் மருந்து திறம்பட வேலை செய்யும்.
ஆபத்தான கலவை
மூலிகைகள் மற்ற மருந்து மாத்திரைகளோடு சேர்த்து சாப்பிடப்படும்போது பல வித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு, அவை மற்ற மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம், அம்மருந்துகளை சீக்கிரமாகவே உடலிலிருந்து வெளியேற்றலாம், அல்லது பக்க பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம். ஜெர்மனியில் லேசான அல்லது மிதமான மனச்சோர்வுக்கு பரிந்துரைக்கப்படும் வெட்டைப்பாக்கு (St. John’s wort), மற்ற மருந்துகளை உடலிலிருந்து இரு மடங்கு அதிக வேகமாக வெளியேற்றுகிறது; இவ்வாறு அவற்றின் வீரியத்தை குறைக்கிறது. ஆகவே கருத்தடை மாத்திரைகள் உட்பட வேறெந்த மருந்து மாத்திரைகளை நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், அவற்றோடு சேர்த்து மூலிகை மருந்துகளை சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேளுங்கள்.

No comments:

Post a Comment