Search This Blog

Wednesday, July 18, 2012

ஆடி அமாவாசையில் பித்ருக்களை நினைக்க வேண்டும்



*******************
ஜோதிட சாஸ்திரம்:
சந்திரனை மாதுர்காரகன் அதாவது தாயின் நிலை, மற்றும் தாய் வழி முன்னோர்களை அறிவது;
சூரியனை பிதுர்காரகன் அதாவது தந்தையின் நிலை, தந்தை வழி முன்னோர்களை அறிவது;

[இதமான குளிர்மையான அழகியசித்ராப் பௌர்ணமி அன்னைக்கு.
தெரியாத இருண்ட ஆடி அமாவாசை தந்தைக்கு.]

சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது.
*************************************
ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு.
*************************************
ஒரு குடும்பத்தை சார்ந்த இறந்து போன முன்னோர்கள், தம் குடும்பத்தினரின் வம்சம் செழிக்க அருள் தரட்டும் என்ற எண்ணத்தில் இறைவன், ஆடி மாதத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார் என்கிறது புராணம்.

ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.
*************************************
பித்ருபூஜைக்கு மிக பெரிய செலவு இல்லை.
*************************************
காய்கறிகளை தானம் தர வேண்டும். அதில் முக்கியமாக பூசணிக்காயை தானம் செய்தே ஆக வேண்டும். அப்படி செய்வதால் துஷ்டசக்திகள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடை பெற வழி பிறக்கும்.

படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
இறந்தவர்களின் புகைப்படம் இல்லாதவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து வணங்கலாம். நாம் பூஜையில் வைக்கும் முகம் பார்க்கம் கண்ணாடியில் பித்ருக்கள் தங்கள் முகத்தை பார்த்து மகிழ்சியடைவார்கள். தங்களின் புகைப்படத்தை வைத்துதான் வணங்குகிறார்கள் என்று எண்ணுவார்கள். அதனால்தான் முகம் பார்க்கும் கண்ணாடியை அமாவாசை, பித்ருக்கள் திதி அன்று வைத்து வணங்கலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.

அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.
முதியவர்களுக்கு உணவு தானம் செய்வது நல்லது.

அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.

முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம்.

அதனால்தான் பகீரதன் பெறும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற எளிய தர்பணம் செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.

No comments:

Post a Comment