Search This Blog

Friday, June 15, 2012

VLC Player-ன் சிறப்பம்சங்கள்



VLC Player மென்பொருள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெரும்பாலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோக்களை காண்போம்.
இதுமட்டுமல்லாமல் பல்வேறு வசதிகளும் இதில் அடங்கி உள்ளது.
Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி?
சில சமயம் வீடியோவை Play செய்தால் அதில் உள்ளவர் பேசி முடித்த சில நொடிகள் கழித்தே ஓடியோ வரும்.
அதே போலவே சப்டைட்டிலும். இந்த பிரச்சினையை VLC மூலம் நீங்கள் சரி செய்யலாம்.
VLC Player-இல் Tools -> Track Synchronization என்பதில் சென்று எத்தனை நொடிகள் மாற வேண்டும் என்று கொடுத்தால் போதும்.
Watermark ஆக நமது பெயர்/படம் கொடுப்பது எப்படி?
சில நேரங்களில் நாம் வீடியோ எடிட் செய்யும் போது ஏதேனும் வாட்டர் மார்க் போட நினைத்து மறந்து இருப்போம், அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அதை Play செய்யும் போது நமது பெயர் வரவேண்டும் என்று நினைத்தால், முறையில் VLC Player-இல் அதை செய்து விடலாம்.
Tools -> Effects and Filters -> Video Effects tab-> Vout/Overlay என்பதில் இது இருக்கும். ஏற்கனவே லோகோ இருந்தால் அதை பயன்படுத்தலாம், அல்லது வெறும் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தலாம், ஏற்கனவே உள்ள லோகோவையும் அழிக்கலாம்.
Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி?
நிறைய பேர் இதற்கு வித விதமான மென்பொருட்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவை எதுவுமே தேவை இல்லை. VLC Player ஒன்றே அதை செய்து விடும்.
Media-> Convert/Save இதில் Add File என்பதை கிளிக் செய்து Convert ஆக வேண்டிய வீடியோவை தெரிவு செய்து Convert/Save என்பதை கிளிக் செய்யுங்கள்.
வரும் பகுதியில் Destination File என்பதில் Output பெயர் கொடுக்கவும். இது .PS என்று முடியும். இதற்கு அடுத்து, செட்டிங்க்ஸ் icon மீது கிளிக் செய்தால் என்ன Format என்று தெரிவு செய்யலாம். (வீடியோ கோடெக், ஆடியோ கோடெக், சப்-டைட்டில் சேர்த்தல் என பலவும் உள்ளது) படத்தை பெரிதாக காண அதன் மீதி கிளிக் செய்யவும்.
Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி?
இது நிறைய பேருக்கு தெரிந்த வசதி என்றாலும் தெரியாதவர்களுக்கு. Video --> Crop என்பதில் உங்களுக்கு வசதியான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment