Search This Blog

Friday, June 15, 2012

நினைவுத் திறனை அதிகரிக்கும் பாசிப்பயறு



பாசிப்பயறில் அதிகளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும்.
குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும்.
பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

No comments:

Post a Comment