Search This Blog

Friday, June 15, 2012

கி.வா.ஜா


புடவையின் சிறப்பு...

ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜா . சென்றார். நண்பர்
அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்குவெய்யில் படுகிற வகையில் வசதியான இடம் அந்தவீட்டில் இருக்கவில்லை.

வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக்
கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத்திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தகி.வா.ஜா 

'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.

'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.

'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு.
இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜா 

உள்ளே வெளியே
கி.வா.ஜா  தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா.ஜா எவ்வளவு சொல்லியும் அவர்கள்கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜா கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார் "உள்ளேயும் தூற்றல்
வெளியேயும் தூற்றல்".வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்சென்னையில் குமரி அனந்தனும்,கி.வா.ஜா .வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்துபேச வந்தார் கி.வா.ஜா .

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று 
பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே 
சொன்னார் கி.வா.ஜா 

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில்
கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!

உப்புமா குத்துகிறதா''


குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் 
கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜா .

'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் 
தொண்டையைக் குத்துகிறதா'' எனக குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் 
போட்டுக்கொண்டு பார்த்தார். பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார். 'ஊசி இருக்கிறது' என்று 
கூறிச் சிரித்தார் கி.வா.ஜா .!

தொண்டை 

கட்டு
தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாத ஐயரிடம் கி.வா.ஜகந்நாதன்மாணவராக இருந்த நேரம்.. ஒருமுறை கி.வா.ஜா .வை ஒருபாட்டுப் பாடு என்றார் உ.வே.சா.

அப்போது 
கி.வா.ஜா .வுக்குத் தொண்டை கட்டியிருந்தது. கி.வா.ஜா . செய்த தமிழ்த் தொண்டைப் பாராட்டலாமே தவிர அவரது தொண்டை அன்று பாராட்டும்படியாக இருக்கவில்லை.

'என் தொண்டை கம்மலாக இருக்கிறது. இன்று போய் 
என்னைப் பாடச் சொல்கிறீர்களே' என்று தயங்கினார் கி.வா.ஜ. 'அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே கேட்கப் போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு'என்றார் உ.வே.சா!

முரளி

No comments:

Post a Comment