Search This Blog

Tuesday, June 12, 2012

மனித பிறவி எடுத்த மகான்களுடைய உள்ளத்திலும் கடவுள் இருக்கின்றாரா ?

தெள்ளத்தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் !மனித பிறவி எடுத்த மகான்களுடைய உள்ளத்திலும் கடவுள் இருக்கின்றாரா என்ற கேள்வி நிற்சயமாக ஒரு முறையாவது உணரப்பட்டு இருக்கும். மகா பாரத குருவம்சத்தின் கடைசி அரசன் ஜனமேஜயன் இவன் அஸ்வ மேத யாகம் ,இராஜ சூய யாகம் ,சர்ப்ப யாகம் ,என பல யாகங்களை செய்தவன் .இவன் தந்தை பரீட்சித்து நாகம் தீண்டி இறந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போகவே முழு நாகங்களையும் அழிக்கும் முயற்சியில் இறங்கினான் கொடிய நாகங்கள் பலவற்றை அழித்தான் .வாசுகி என்ற நாகத்தின் பெரு முயற்சியால் ஆஸ்திகர் என்ற முனிவனின் உபதேசத்தால் ஜனமேஜெயன் இடம் இருந்து நாக இனம் காப்பாற்ற பட்டது. நாகங்கள் இட்ட சாபத்தினாலேயே இறுதியில் குரு வம்சமும் யது வம்சமும் நாகர்களால் முழுமையாக அழிக்க பட்டது என்று வரலாறு சொல்கின்றது .
அபிமன்யு உடைய பேரன் ஜனமேஜெயனுக்கு தன் தந்தையின் துர் மரணம் இறை நம்பிக்கையில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது .இவனே முதல் முதலில் கடவுள் என்றால் யார் அவர் எம்மை போல் இரத்தமும் சதையும் கொண்ட ஊன் உடம்பால் ஆனவரா அவருக்கும் பிறப்பு இறப்பு நன்மை தீமை என்பன எல்லாம் இருக்கின்றதா என வியாசருடைய சீடரான வைசம்பாயனர் முனிவரிடம் விளக்கம் கேட்டார் என் அறிவுக்கு எட்டியவகையில் இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னம் முதல் முதலாக கடவுள் பற்றிய சந்தேக விளக்கத்தை கேட்டவர் இவரே ஆனால் அன்றைய திறன் வாய்ந்த பார்பன முனிவர்கள் இவருக்கு தொழு நோய் போன்ற ஒரு நோயை வரவழைத்து அதற்க்கு இறைவனை வழிபட்டாலே பூரண சுகம் கிடைக்கும் என்று இவரை பயம் காட்டி இறை நம்பிக்கை வரவைத்து நோயை குணப்படுத்தி இவரது கேள்வியை தங்களுக்கு சாதகமாக உருவாக்கினார்கள் ,ஆனால் இவர் தனது சந்தேகங்களை அவர்களிடம் விளக்கமாக கேட்டதாலேயே வைசம்பாயனர் மகா பாரத கதையையும் பகவத் கீதையையும் இவருக்கு சொல்கின்றார் .
இவற்றை எல்லாம் கேட்ட ஜனமேஜெயன் திருப்தி அடியவில்லை தனக்கு இன்னும் சந்தேகங்கள் இருப்பதாக மேலும் கேள்விகளை கேட்டார் படைத்தல் காத்தல் அழித்தல்எனப்படும் முத்தொழிலுக்கும் ஆதாரமாக இருப்பவர்களும்,உலக இயக்கத்துக்கு ஆதாரம் என்று மனிதனால் நம்பப்படும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவரும் தேவர்களில் சிறந்தவர்கள் என்றும் சச்சிதானந்த ஸ்வரூபிகள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவர்களுக்கும் மரணம், சுக-துக்கம் போன்றவை உண்டா?, நித்திரை போன்ற அவஸ்தைகள் உண்டா?, இவர்களுக்கு உதிரம் போன்ற சப்த தாதுக்களுடன் கூடிய தேகம் உண்டா?, அவர்களது குணங்கள் என்ன?. அவர்களது வசிப்பிடம் எப்படி இருக்கும், அவர்களது லீலாவினோதங்கள் போன்றவை பற்றி எல்லாம் கூறுங்கள்" என்று பணிவுடன் கேட்கிறான்.
இந்த கேள்விகளுக்கு முற்றும் அறிந்த முனிவர்கள் என்றும் எம்மால் கருதப்படும் முனிவர்களே சொல்வது அதாவது வைசம்பாயனர் சொல்வது அரசே உனக்கு எழுந்த இந்த கேள்வி என்னுள்ளும் ஒருகாலத்தில் இருந்தது நான் என் குருவான வியாசரிடம் அது பற்றி கேட்டேன் வியாசருக்கும் இந்த கேள்வி இருந்ததால் அவர் குருவழியில் அவருக்கு முற்காலத்தில் நாரதர் சொன்னதாக கூறப்பட்ட பதிலை நான் உங்களுக்கு சொல்கின்றேன் என்று வைசம்பாயனர் சொல்ல தொடங்கினார்
உலகில் மனித குலம் தோன்றிய பின்னர் ஏற்பட்ட பிரளய வெள்ளம் (அதாவது பூமி அதிர்வுடனான மிகப்பெரும் கடல்கோள் என்று நினைக்கின்றேன்) ஒன்றின் முடிவில் அதில் தப்பியவர்களில் ஒருவராக பிரம்மா தனித்து ஒரு இடத்தில் இருந்தார் .அவர் அந்த நிலையில் பலவழிகளில் சிந்திக்க தொடங்கினார் .தன்னை போல் வேறு யாராவது தப்பி இருக்கின்றார்களா என்று தேட தொடங்குகிறார் அந்த வேளையில் தான் வெள்ளத்தில் நாகப்பாம்பின் (ஆதிசேடன் )மேல் சயனித்த நிலையில் விஸ்ணு உறக்கம் போன்ற மயக்க நிலையில் மிதந்து வருவதை காண்கின்றார் .
அந்த வேளையில் பிரம்மா ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது என்றும் அந்த சக்தியே அவர்கள் மிதந்து வரும் கடலையும் தாங்குகிறது என்ற முடிவுக்கு வருகின்றார் . அப்போது வானத்தில் ஏதோ ஒரு பேரொளி மற்றும் சப்தம் தோன்றி மறைகிறது.(திடீர் என்று வானில் மின்னலுடன் பெரும் சத்தத்துடன் இடிமுழக்கம் ஏற்பட)விஸ்ணு திடீர் என்று மயக்கம் தெளிந்து எழும்புகின்றார் தம்மை இயக்கும் சக்தியே அந்த சப்தமாகவும், பேரொளியாகவும் வந்ததாக உணர்ந்து, அச்சக்தியை தரிசிக்க பிரம்மாவும் விஷ்ணுவும் எண்ணினர். பேரொளியுடன் வந்த சப்தத்தையே ஆதாரமாகக் கொண்டு அதை தியானித்து புலன்களை அடக்கி தியானம் செய்தனர்.
சில நிமிடங்களில் சிவன் உமை மற்றும் அவர்களோடு சிலரும் வந்து இவர்களுடன் சேர்கின்றார்கள் பிரம்மாவும் விஷ்ணுவும் நினைக்கின்றார்கள் இயற்கையால் ஏற்பட்ட மின்னலுக்கும் இடிக்கும் சிவன் தான் காரணம் என்று நினைத்து அவர்தான் உலகை இயக்குகின்றார் என்று பயந்து அவரிடம் பணிகின்றார்கள் ,.அன்றில் இருந்து சிவன் முக்கியத்துவம் பெறுகின்றார் ,,,,,,,என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ,,,,,,,,
இது கதையா கற்பனையா உண்மையா என்பதை எந்த ஒரு புராண இதிகாசவாதிகளோ இலக்கிய பண்டிதர்களோ உசாத்துணை நூல்களை ஆதாரம் காட்டி நூல் எழுதும் வரலாற்று ஆசிரியர்களோ எளிதில் சொல்லிவிட முடியாது என்பது உண்மையான விடயம் ஆனால் பெளத்தறிவு ரீதியாக பகுப்பாய்வு செய்பவர்கள் சில விடயங்களை மட்டும் உணர்ந்து கொள்ள முடியும் ,,,,ஆனால் அந்த அர்ச்சுனன் கொள்ளு பேரனும் அபிமன்யுவின் பேரனும் பரீட்சித்திவின் மகனும் குருவம்சத்தின் கடைசி அரசனும் ஆகிய ஜெனமேஜெயன் மட்டும் இந்த வைசம்பாயனர் விளக்கத்தின் பின்னரும் என்னை போல தெளிவு பெறவே இல்லை ,,,,,,,,,,நன்றி ,,

சிவ மேனகை

No comments:

Post a Comment