Search This Blog

Monday, May 28, 2012

Knowledge Graph: கூகுள் தேடலின் அடுத்த தலைமுறைக்கான புத்தம் புதிய வசதி




கூகுள் தேடுபொறி என்றும் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் அது எப்பொழுதும் தனது தேடல் முடிவுகளை மாற்றம் செய்துக் கொண்டே இருப்பது தான். தற்போது Knowledge Graph என்ற பெயரில் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது கூகுள்.
பொதுவாக தேடல் பொறிகளில் நாம் ஏதாவது வார்த்தைகளை தேடினால் அந்த வார்த்தைகளை குறியீடுகளாக(Keywords) எடுத்துக் கொண்டு அது தொடர்பான இணையப் பக்கங்களை நமக்கு காட்டும். இந்த முறையினை தான் கூகுளும் பின்பற்றி வந்தது.
தற்போது Knowledge Graph என்ற பெயரில் தேடும் வார்த்தைகள் பற்றிய தகவல்களை தேடல் முடிவு பக்கத்தில் பக்கப்பட்டியில்(Sidebar) காட்டப் போகிறது.
உதாரணத்திற்கு Taj Mahal என்று தேடினால் இந்த இரண்டு வார்த்தைகளைக் கொண்ட இணையப் பக்கங்களை தேடல் முடிவில் காட்டும். இனி இவற்றுடன் சேர்த்து பக்கப்பட்டியலில்(Sidebar) Taj Mahal பற்றிய தகவல்களையும், அது தொடர்பான வேறு தேடல்களையும் காட்டும்.
மேலும் Google Knowledge Graph மூலம் பிரபலங்கள், முக்கிய கட்டிடங்கள், முக்கிய அடையாளங்கள்(Landmarks), திரைப்படங்கள், விண்வெளிப் பொருட்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பற்றி உடனடித் தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நமது நேரம் மிச்சமாகும்.
கூகுளின் அறிவு வரைபடத்தில்(Knowledge Graph) இதுவரை 500 மில்லியன் பொருட்களும்(Objects) 3.5 மில்லியன் தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளன.
முதலில் அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் இந்த வசதியை தந்த கூகுள் இப்போது அனைவரும் பயன்படுத்துமாறு செய்துள்ளது.

No comments:

Post a Comment