Search This Blog

Monday, May 28, 2012

முதலாம் பீமதேவரின் நினைவாக அவர் மனைவி உதயமதி கட்டிய நினைவகம்




மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய காதல் சின்னத்தைப் போலவே, (அதை விட அழகாகவும் , கிணற்றைப் போல தரைக்கு அடியில் இருந்தும் )முதலாம் பீமதேவரின் நினைவாக அவர் மனைவி உதயமதி கட்டிய நினைவகம் குஜராத்தில் உள்ளது. உதயமதி இதைக்கட்ட ஆரம்பித்தாலும் 1050 -இல் கட்டிமுடித்தவர் அவள் மகன் முதலாம் கரன்தேவ்.இந்தக் கிணற்றில் இருந்து கிட்டத்தட்ட 30 கிமீ தூரத்துக்கு ஒரு சுரங்கவழி உள்ளது. கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு அருகே உள்ள சித்பூர் என்ற நகர் வரை சென்றிருக்கிறது. இது தண்ணீர் செல்லும் வழியா, தப்பிச்செல்லும் வழியா என்று சொல்லமுடியவில்லை. இந்தியாவின் மிக நீளமான சுரங்க வழியும் இதுவே.படிகளாக இறங்கிச்செல்லும் இந்த நிலத்தடி மாளிகை ஒரு ஆழமான கிணற்றில் சென்று முடிகிறது. பாதிக்குமேல் செல்ல இன்று அனுமதி இல்லை. உள்ளே எல்லா இடங்களிலும் இடைவெளி இல்லாமல் சிற்பங்கள். இந்த நிலத்தடிக் கிணறு 64 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இந்தக் குளத்தின் வடிவ நேர்த்தியை எந்தக் கோணத்தில் நின்று நோக்கினாலும் பரவசத்துடன் அல்லாது உணர முடியாது. 1998 முதல் இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. (ஜலாலுதீன் கில்ஜியின் தளபதியாக இருந்த அலாவுதீன் கில்ஜி எல்லாக் கோட்டைகளையும் கோயில்களையும் இடித்தழித்தார். கிட்டத்தட்ட முந்நூறு இந்து சமண ஆலயங்களை இப்பகுதியில் அவர் அழித்ததாக அவரது வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.) அதில் கொஞ்சம் சிதிலம் அடையாமல் இருப்பதில் இந்த ராணி கி வாவ் முக்கியமான ஒன்று.

No comments:

Post a Comment