Search This Blog

Friday, April 27, 2012

புற்று நோயைத் தடுக்கும் பீட்ஸா! ஆய்வில் அதிரடி



இன்றைய உலகில் எல்லா வயதினரையும் ஆட்டி வைக்கும் ஒரு கொடிய நோயாக புற்று நோய் காணப்படுகின்றது.
அதற்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிக்சை, ஹார்மோன் சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை உள்ளிட்ட பல வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு அதற்கும் தனியாக சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அதில் இருந்து தப்பிக்க தற்போது எளிதான புதிய வழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது பீசாவை அதிக அளவில் சாப்பிட்டால் சுரப்பி புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் பீசா மற்றும் இத்தாலி வகை உணவுகளில் ஒரீகானோ என்ற ரசாயன பொருள் சேர்க்கப்படுகிறது. அது சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்க கூடியது.
இந்த தகவலை இங்கிலாந்து வாழ் இந்திய ஆராய்ச்சியாளர் சுப்ரியா பவேத்கர் தெரிவித்துள்ளார். லாங் ஐலேண்டு பல்கலைக்கழக பேராசிரியர் சுப்ரியா பவேத்கரும் அவரது குழுவினரும் ஒரு ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்தனர்.
அப்போது ஒரீகானோ என்ற ரசாயன பொருள் சுரப்பி புற்றுநோயை குணப்படுத்துவைத அறிந்தனர்.

No comments:

Post a Comment