Search This Blog

Tuesday, April 24, 2012

நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வை இழப்பை சரிசெய்வதற்கு




நீரிழிவு நோயால் கண்பார்வை அதிகளவு பாதிக்கப்படும், இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை குணமாக்குவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கின்றனர் விழித்திரை நிபுணர்கள்.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு நோய் மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப் படி உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.
உலகிலேயே அளவுக்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான். இதனால் தான் இந்தியாவை நீரிழிவு நோயாளிகளின் தலைநகரம் என்று வர்ணிக்கிறார்கள்.
நீரிழிவு நோயை டைப்-1, டைப்-2 என்று 2 வகையான பிரித்துள்ளனர். 30 வயதுக்குள் நீரிழிவு நோய் வருவதை டைப்-1 என்றும், 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் வருவதை டைப்-2 என்றும் பிரித்துள்ளனர்.
டைப்-1ன் வகையை சேர்ந்த நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு இருந்தால் அவர்களது கண்பார்வை 100 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
டைப்-2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால் 30 சதவீதம் பேரின் கண்பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தால், இந்நோயாளிகள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
அதிலும் விழித்திரை நிபுணரிடம்(ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று `செக்-அப்' செய் வது மிகவும் நல்லது. சிலருக்கு விழித்திரையில் வலி அதிகமாக இருக்கும். அப்போதே அவர்கள் விழித்திரை நிபுணரிடம் பரிசோதனை செய்து கொண்டால் கண் பார்வை இழப்பில் இருந்து தப்பி விடலாம்.
நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல 40 வயதை கடந்த அனைவரும் கண் மருத்துவரிடம் சென்று கண் பிரஷ்ஷரை பரிசோதித்து கொள்ள வேண்டும். இந்த கண் பிரஷ்ஷர் அதிகமானால் கண்பார்வை குறைபாடு ஏற்படும். பரிசோதனை எப்.எப்.ஏ. என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால் ஏற்படும் ரத்த நாள கோளாறுகளை கண்டறிய முடியும்.
இப் பரிசோதனைக்கு பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம். கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாள கோளாறு குணமாகும்.
விழித்திரையில் ஏற்படும் கோளாறை தடுக்க சிலிகான் ஆயில் ஊசி மூலம் செலுத்தப்படும். இந்த ஆயிலானது விழித்திரையை பலப்படுத்தும்.

No comments:

Post a Comment