Search This Blog

Wednesday, January 25, 2012

பூமியை இன்று தாக்குகிறது சூரியப்புயல்: நாசா எச்சரிக்கை




சூரியனிலிருந்து வரும் அதிசக்தி வாய்ந்த காந்தப் புயல் பூமியை இன்று தாக்கும் என்று அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி கடந்த 6 வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது.
இந்த சூரிய புயல் இன்று நொடிக்கு 2000 கிலோ மீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி வரும் என நாசா தெரிவித்துள்ளது.
சூரிய புயலின் தாக்கம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் இருக்கும் என்றும் உயர் ரக அலைவரிசை ரேடியோவை பயன்படுத்தும் விமானங்களில் தொடர்பு துண்டிக்கப்படும் என்றும் விண்வெளியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் மையங்களில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு சென்று விடும்படியும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூரிய புயல் தாக்கும் போது மின் தடை ஏற்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment