Search This Blog

Sunday, January 22, 2012

மன்னிக்கப்பட முடியாத மா பாவிகள்........



 
நெருப்புக்  
கட்டிகளை 
விழுங்கிய
நெஞ்சமாக
கொதித்துக்கிடக்கிறது
 என்
கோபம்.
 
எத்தனைமுறை
 தூக்கிஎறிந்தாலும்
மீண்டும்
மீண்டும்
வந்துவிழுகின்றது
உங்கள் 
நினைவுகள்.
 
உயிரின்
விலைதெரியா
ஊனப்பிறவிகளா
நீங்கள். 
 
தொண்டைக்குளிக்குள்
இருக்கும்
உங்கள்
நினைவுகளை 
காறி
துப்பவும்
முடியாமல்
விழுங்கவும்
முடியாமல்
உபத்திரவம் கொள்கின்றது
உள்ளம் .
 
ஆயிரம்
வாசல்கள்
திறந்திருக்க
ஏனிந்த
அவல
முடிவுகள். 
 
உயிர்தரவும்
உயிர்விடவும்
ஏது
உரிமை 
உங்களுக்கு ?
 
இயற்கையின்
சிருஷ்ட்டிப்பில்
நீங்கள்
வெறும்
சடம்
மட்டுமே,
 
உங்களுக்கென்ன 
அரைநொடியில்
ஆவி
துறப்பீர்கள்
நீங்கள்.
ஆயுள் வரை  
அனுபவிக்கப்போவது
நாங்கள்
அன்றோ! 
**********
இந்த
பிரபஞ்சம்
மிகமிக
விசாலமானது .
 
அதன்
விசுவருபத்தில்
நீங்கள்
ஒரு 
சிறு
துரும்பு. 
 
எல்லாவற்றையும்
எமக்களித்த
அந்த
அண்டசராசரம்
உங்கள் 
மன அழுத்தங்களுக்கும்
மாற்றுவழிகளை
மறைத்துவைத்திருக்கும்.
 
அவல
முடிவுகளை
எடுக்கும் 
முன்னால்
அறிந்துகொள்ளுங்கள்
அவற்றை. 
 
விடைகள் 
இல்லாத 
விடுகதைகளே
இல்லை
இங்கு.
 
யாரையோ
பழிவாங்குவதாக
நினைத்துகொண்டு
உங்களையே 
பழிவாங்குகின்றீர்கள் 
நீங்கள்.  
 
அவர்கள்
அழப்போவதெல்லாம்  
ஆகக்குறைந்தது   
ஆறேழு
நாட்களுத்தான் .
 
அதற்குப்பிறகு
அவ்வப்போது
நினைதுக்கொள்வதுடன்
சரி.
 
உங்கள்
பழிவாங்கல்
பலவீனமடைந்துவிடும்
பையப்பைய .
 
உங்கள்
தற்பலி
எதையும்
தரப்போவதில்லை
எவர்க்கும் .
*****************
தற்பலிகள்தான்
ஒரேஒரு 
தீர்வென்றால்
பாதிப்பேருக்குமேல்
 பரலோகம் தான்
போகவேண்டும் .
 
யாருக்குத்தான் 
இங்கு
பிரச்சனைகள்
இல்லை. 
பிரச்சனைகளின்
கோர்வையே
வாழ்வின்
நிதர்சனம் .
 
அவற்றின்
மீதான
தேடலே
வாழ்வின்
இயக்கம். 
 
நிச்சயமாக
உங்களால்
முடியும்.
 
தேடுங்கள்
நிச்சயமாக
உங்களுக்காக
திறக்கப்படும்.
 
தேடத்தேட
தீர்வுகள்
உங்களை
தேடிவரும்.
 
பிரச்சனைளின்
தேடல்தான்
விஞ்ஞானமும்
மெய்ஞானமும்
.
தேடுங்கள்
நிச்சயமாக
உங்களுக்காக
திறக்கப்படும்.
******************
இந்த
உலகம் 
பரந்தது 
 
அதில்
உங்களின்
இருப்பு
இலக்கணப்படுத்தப்பட்டுள்ளது,
 
அந்த
இலக்கணங்களை
மீறுதல்
பாவாமாகிறது.
 
பாவிகள்
ஆவீரோ
நீர்.
 
வானம்
வாழ்த்துப்பாட,
காற்று
கைகூப்ப,
மண்
மலர்தூவ
காலம்
உங்களுக்காக
காத்துக்கிடக்கின்றது. 
 
உங்கள்
மீதான 
மனஅழுத்தங்களை
அடித்து
நொருக்குங்கள்.
 
வீறுகொண்ட
நெஞ்சுடன்
வீரியம்
கொள்ளுங்கள்.
 
கோடிக்கணக்கான
விந்தணுக்களை 
வெற்றிகொண்டு
பிறந்த
வீரர்கள்
நீங்கள்.
 
உங்கள்மீது
அன்பு செலுத்த,
அரவணைக்க, 
ஆறுதல் சொல்ல
கண்டிப்பாக
ஒரு
கூட்டம்
காத்திருக்கிறது
இங்கு.
*********************
தற்ற்கொலை
செய்யும்
அந்த
கணத்திற்கு
சற்று
முன்னர்
ஐந்து
நிமிடங்கள்
உங்கள்
கண்களை   
மூடிக்கொள்ளுங்கள் .
 
மூச்சை
உள்ளிழுத்து
நிதானமாய்
சிந்தியுங்கள்.
 
உங்கள்  
மனவெளியில்
இயற்கை
உங்களுக்கான
தீர்வைச்
சொல்லும் .
****************
மறந்துவிடுங்கள் 
சுய 
 மரணத்தை.
***************
மன்னிக்கப்பட
முடியாத 
மாபாவியாகாதீர்கள்
நீங்கள்.  
  

     



 
  
Thanks+Best Regards
 
S.NAVATHARAN  Bsc(Eng), Bgas(gr-2)
Senior Engineer(Inspection)
Approved Coating Inspector
Eram Engineering
Saudi Arabia
00966552916239(KSA)
00966564368007(KSA)
0094775130092 (SRILANKA-ROAMING)

No comments:

Post a Comment