Search This Blog

Friday, August 19, 2011

பழமொழிகள் "ஆ" - பாகம் இரண்டுThursday, 18 August, 2011 15:26


பழமொழிகள் "ஆ"


  *   ஆடிப்பட்டம் தேடி விதை.

  *   ஆழம் தெரியாமல் காலை விடாதே!

  *   ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
 
  *   ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
  
  *   ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
  
  *   ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல்,ஆவணி முழுசாரல்.
  
  *   ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
  
  *   ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
  
  *   ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
  
  *   ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
  
  *   ஆறுவது சினம்.
  
  *   ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
  
  *   ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
  
  *   ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
  
  *   ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
  
  *   ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
   
  *   ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
  
  *   ஆலை விழுது தாங்கியது போல.
  
  *   ஆடு பகை குட்டி உறவா?
 
  *   ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
  
  *   ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
  
  *   ஆரம்பத்தில் சூரத்துவம்.
  
  *   ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
  
  *   ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
  
  *   ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
  
  *   ஆற்றுநீர் பித்தம் போக்கும், குளத்து நீர் வாதம் போக்கும்,சோற்றுநீர் எல்லாம் போக்கும்
  
  *   ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.

  நட்புடன்
  தியாகராஜன் 

No comments:

Post a Comment