Search This Blog

Friday, August 12, 2011

ஒரு உயிர் போகிறது பட்டினியால்...


 

உலகின் மக்கள்தொகையில் 500 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ்வசிக்கிறார்களாம் .
ஒரு வருடத்தில் பட்டினியால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை
 
15 மில்லியன்
 .
 Join Only-for-tamil

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , உலகின் மூன்றில் ஒருபங்குமக்கள் மிதமிஞ்சிய ஊட்டமுள்ளவர்கள் என்றும் , மற்றுமோர் பிரிவினர் நிறைவு பெற்றவர்கள் என்றும் மூன்றாம் பிரிவினர் பட்டினியால் உயிரிழந்து கொண்டிருப்பவர்கள் என்றும் தெரிவிக்கிறது.
நீங்கள் இதைப்படித்து முடிப்பதற்குள்
 200 பேர் பட்டினியால் செத்திருப்பர்.

 Join Only-for-tamil
மில்லியன் இது இந்த வருட முடிவிற்குள் நிகழப்போகும் பட்டினிச்சாவுகளின் எண்ணிக்கை .இதில் கொடுமையான விஷயம் இவர்களில் மூன்றில் ஒன்று 5 வயதிற்குட்பட்ட  குழந்தை .. 
உலகின் உணவுப்பற்றாக்குறை சதவீதத்தில் 50 % பேர் இந்திய துணைக்கண்டத்தில் வசிப்பவர்கள்.40%பேர்  ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் மற்ற பகுதிகளிலும் வசிப்பவர்கள். 
 
ஒவ்வொரு 3.5 வினாடிக்கும் ஒரு உயிர் போகிறது பட்டினியால் . 
உலகின் ஆபத்தான பணிகளிலும் மனிதன் ஈடுபடுவது ..ஒருவேளை சோற்றுக்காக.
 கதிர்வீச்சு அபாயமிக்க சுரங்கப்பணிகளிலும் , உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழ்நிலைகளிலும்  பணியாற்றுவது சோற்றுக்காக.
முன் சொன்னது போல் , கரைக்கு வந்தால் மீன் பிணம் , வராவிட்டால் மீனவன் பிணம்..தெரிந்தும் போகிறானே எதற்கு ?
எல்லாம் ஒருவேளை சோற்றுக்கு.
இதில் வரும் அனைத்தும் வெறும்எண்கள் மட்டுமா ? எண்ணிப்பாருங்கள் ..அத்தனையும் உயிர்கள்.!!
 
"தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் " என்றான் பாரதி .
நாங்கள் அழிக்கக்கேட்கவில்லை ...ஆக்கம் வேண்டுகிறோம்.
 
"இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு ..ஆயினும் பட்டினிச்சாவுகள் அதிகம் ஏன் ?
உள்ளவர்களுக்கு ஒன்றும்  , இல்லாதவர்களுக்கு வேறொன்றும் என இரண்டு இந்தியாவா ?"
இதை நான் கேட்கவில்லை..இந்திய உயர்நீதிமன்றம் அரசைப்பார்த்துக்கேட்டது.
 
பணம் படைத்தவன் கொலைகாரனோ..கொள்ளைக்காரனோ..சிறையிலடைபட்டாலும் ..சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும் !!
இல்லாதவன் பாடு..எப்போதும் போல..அம்மா தாயே..
இதையெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுச் செல்வோருக்கு ஒரு வேண்டுகோள்..
தினமும் நீங்கள் உண்டதுபோக மீதமாக்கிக் குப்பையிலழிக்கும் உணவு பசியால் வாடும் ஒரு உயிரைப் பிடித்து நிறுத்தும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா ?
 
ஒரு கவளம் சோற்றைக் கையிலெடுத்ததும் இதயமுள்ள எந்த மனிதனுக்கும் இந்த நினைவு வராமலா போய்விடும் ? 
 
கொடுப்பது அடுத்த விடயம் , அதற்கு முன்
வீணாதலைத் தடுப்போம் என்பதே என் கருத்து.
 
Join Only-for-tamil

 
"அளவறிந்து சமைத்து அளவோடு உண்போம் " என உறுதிகொள்வோம் .   ஒவ்வொரு பருக்கையிலும் அது போய்ச் சேரவேண்டியவனது   பேர் எழுதப்பட்டிருக்கும் என்று சொல்வார்கள்  , அத்தோடு இதையும் சொல்லலாம்..  " நீ வீணாக்கிய சோற்றில் எழுதப்பட்டிருந்தது 
அது கிடைக்காமல் பட்டினியால் செத்தவனின் பேர் "


 
 
                நட்புடன்..யாழினி...

No comments:

Post a Comment