Search This Blog

Thursday, August 11, 2011

அம்பாளை நேரடியாக தரிசித்து , அமெரிக்காவில் ஆலயம் எழுப்பிய ஒரு தமிழரின் சுவாரஸ்யமான உண்மை அனுபவம்




நாடி ஜோதிடம் உண்மையா? பொய்யா? என்னுடைய அனுபவத்தில் , பெரும்பாலானோருக்கு இந்த விஷயம் உண்மை என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், நாடி படிப்பவர்கள் எல்லோரும் , நல்ல உண்மையான நாடி ஜோதிடர்கள் இல்லை என்கிற கருத்துதான் நிலவுகிறது. கலி முற்றும்போது , உலகில் போலிகளும் மலிந்து விடுகின்றனர்.  ஓரளவுக்கு கடந்த காலத்தை சரியாக கணிப்பவர்கள் கூட, எதிர் காலம் பற்றி கூறுவது நடக்காமல் இருக்கும்போது , சற்று நெருடுகிறது. 

ஜீவ நாடி மூலம் நூற்றுக்கணக்கில் தம்மை தேடிவந்த அன்பர்களின் துயர் தீர்த்த , அகத்தியரின் ஆசி பெற்ற  தெய்வத்திரு. ஹனுமத்தாசன் ஐயா இருந்த காலத்தில் , அவர் பெயரிலேயே  சில போலிகளும் இருந்தனர். அவர் மறைந்தபிறகு , ஜீவ நாடி படிக்கும் தரமான நாடி ஜோதிடர்கள் யாராவது இருக்கின்றனரா என்று நானும் உங்களைப்போலவே விசாரித்துக் கொண்டு இருக்கிறேன். வெகு சமீபத்தில் , நமது வாசகர் ஒருவர் ஒரு தகவலை கூறி இருக்கிறார். அவரை விரைவில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். இறை எனக்கு வழிகாட்டும் என்று நம்புகிறேன். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரை தொடர்பு கொள்ளும் தகவல்களை வெளிப்படையாக சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறேன். 
வெறும் வியாபார நோக்கில் அவர் இதை செய்யவில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது. அவர் கூறும் பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வர, உங்கள் பாவ வினைகள் முற்றிலும் தீரும்.

உண்மையிலேயே , ஜீவ நாடி பார்ப்பதில் ஆர்வம் இருக்கும் அன்பர்கள்,  அந்த இறைவனின் கருணை மட்டுமே உங்களை காக்க முடியும் என்று நினைப்பவர்கள் , ஐயா அவர்கள் கூறும் பரிகாரங்களை முழு நம்பிக்கையுடன் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் மட்டும் - என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். ஐயா அவர்களின் அனுமதி பெற்று, உங்களுக்கு மேலும் தகவல்களை தருகிறேன். 

இன்று நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளவிருப்பது , நாடி ஜோதிடம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை. தியானம் மூலம், முறையான பயிற்சி மூலம் தனது குண்டலினி சக்தியை எழுப்பி - அம்பாளையே நேரில் தரிசித்த ஒரு புண்ணிய ஆத்மாவின் அனுபவம். 

 இது ஒரு நடக்க சாத்தியமே இல்லாத சம்பவம் அல்ல. வேலூருக்கு அருகில் ரத்தினகிரி முருகன் கோவிலில் - முருகனை நேரில் தரிசித்து பின் முருகன் அடிமையாகவே மாறிவிட்ட , அந்த சுவாமிகளை நம் கண்முன்னே இன்றும் காண்கிறோமே.. வாய்ப்பு கிடைக்கும்போது , நீங்களும் ஒரு முறை ரத்தினகிரி வந்து அந்த முருகன் அருளையும், அந்த பெரியவர் அருளையும் பெற்றுச் செல்லுங்கள். முருகன் அவருக்கு காட்சி கொடுத்த இடம் அந்த கோவில்.  வேலூரிலிருந்து , ஆற்காட்டிலிருந்து - ஒவ்வொரு பத்து  நிமிடத்திற்கும் ரத்தினகிரி செல்ல பேருந்து வசதி உள்ளது. கீழ்மின்னல் என்கிற ஒரு சாதாரண கிராமம் , ரத்தினகிரியாக மாறிய அற்புதம் எப்படி என்று , நீங்களும் உணர முடியும்.

உங்கள் குறைகளை தீர்க்க , அந்த இறைவன் சந்நிதியில் மனமுருக வேண்டினால் , உங்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். ரத்தினகிரியில் இன்றும் முருகனை நேரடியாக தரிசித்துக் கொண்டிருக்கிறது, ஒரு புண்ணிய ஆத்மா. வெறும் கற்பூரத்துக்கே வழியில்லாமல் இருந்த குமரன், இன்று தங்க கூரை வேயப்பட்ட கோபுரம் கொண்டு - பக்தர்களின் துயர் தீர்த்து வருகிறான். முருகன் தனது பக்தர் மூலம் நடத்திய, அந்த திருவிளையாடலை இன்னொரு கட்டுரையில் விவரிக்கிறேன்..

சரி, இது இருக்கட்டும். அம்பாள் தனது பக்தர் ஒருவர் மூலம், அமெரிக்காவில் தனக்கு ஒரு கோவில் உருவாக்கிக்கொண்ட அந்த சுவாரஸ்யமான அனுபவம் இதோ...திரு. ரமணன் அவர்கள் கட்டுரையிலிருந்து.. 

குண்டலினி என்பது நம் சுய உணர்வு. நம் மூலாதாரத்தில் பொதிந்து கிடக்கிறது. இதனை நாம்தான் தியானம் மூலம் தட்டியெழுப்ப வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் குண்டலினி உண்டு. சொல்லப் போனால் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் இந்தச் சக்தி உள்ளது. இதற்கு சென்ஷயன்ஸ் (sentience) என்று பெயர். ஜடப் பொருட்களுள்ளும் இந்த சக்தி உண்டு. இதுவே உலகத்தில் இயங்கும் சக்தியாக மாறுகிறது.

இது எந்த அளவுக்கு சாத்தியம் ? 

நான் குண்டலினி தியானம் செய்யும் போது அம்பாள் தோன்றி தனக்கு ஒரு ஆலயம் கட்டுமாறு என்னைப் பணித்தாள். சென்னை மயிலாப்பூரிலுள்ள ஒரு நாடி ஜோதிடரிடம் என் ஏட்டைப் பார்த்தபோது அவர் நான் ஆலயம் கட்டுவதை நாடியில் படித்து விளக்கினார். மேலும் ஆலயத்தின் பூமி அமைப்பு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் பூமி அமைப்பைப் போலவே இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் பாண்டியாக் நகரத்தில் தேவி பராசக்தி கருமாரியம்மனுக்கு எடர்னல் மதர் டெம்பிள்’ என்ற பெயரில் ஆலயத்தைக் கட்டினேன்.
- டாக்டர் G.கிருஷ்ணகுமார்

 

ஆதாரம் : தென்றல் ஜூன், 2008 மற்றும் பராசக்தி ஆலயம், அமெரிக்
கா


Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_10.html#ixzz1UiGN0jCC

No comments:

Post a Comment