Search This Blog

Monday, August 1, 2011

பூனைகளால் மனிதர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்படலாம்: விஞ்ஞானிகள் தகவல்



பூனையின் வயிற்றில் வளரும் ஓர் ஒட்டுண்ணியானது மனிதர்களுக்கு மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த ஒட்டுண்ணி மோசமான நோயை மனிதர்களுக்கு ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கையை விஞ்ஞானிகள் விடுத்துள்ளார்கள். பிரித்தானியாவில் வருடத்திற்கு 3500 இறப்புக்கள் இந்த மூளைப் புற்றுநோயால் ஏற்படுகின்றன என தெரியவந்துள்ளது.
ரொக்சோபிளாஸ்மா கொன்டி(Toxoplasma gondii) எனும் இந்த ஒட்டுண்ணியானது உலகத்தில் உள்ள மனிதர்களில் மூன்று பங்கினரால் மூளைகளின் ஆழத்திலே காவிச்செல்லப்படுகின்றன. இதுவே மனிதர்களுக்கு மட்டுமல்லாது மிருகங்களிலும் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
பிரித்தானிய மக்களில் 34 வீதத்தினரை இது தாக்குவதுடன் வாழ்க்கைமுறையையும் சிக்கலானதாக்குகின்றது. ஆனால் இது பூனைகளுக்குள்ளேயே வாழ்கின்றதுடன் தமது நுண்ணிய முட்டைகள் மூலம் கிருமித்தொற்றையும் ஏற்படுத்துகின்றது.
கர்ப்பமாயுள்ள பெண்கள் பூனைகள் உண்ட தட்டைத் துப்புரவு செய்யக்கூடாதென்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இப்போது ஏனையவர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஆண்களிலும் பெண்களிலும் உள்ள மூளைப் புற்றுநோயின் தரவுகளைச் சேமித்தனர். அதனைப் பின்னர் T.dondii கிருமித்தாக்க வீதத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தனர்.  ஒட்டுண்ணிகள் கூடுதலாகக் காணப்படும் நாடுகளில் இந்த மூளைப் புற்றுநோய் அதிகளவில் காணப்பட்டதாக இந்தத் தரவு குறிப்பிட்டது.
இந்த ஒட்டுண்ணியால் ஒருவரது செயற்பாடும் மாற்றமடையலாம். எலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் போது இவை பூனைக்குப் பயப்படும் தன்மையிலிருந்து மாறியிருந்தன.
இதுபோலவே மனிதர்களுக்கும் ஏற்படலாம். அவை ஆண்களை மூர்க்கமானவர்களாகவும் பொறாமை மிக்கவர்களாகவும் மாற்றுவதோடு பெண்களைப் பாலியல் ரீதியில் அதிக ஆர்வங்கொள்ள வைப்பதாகவும் மாற்றிவிடுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்களில் ஏற்படும் கிருமித்தொற்றுக்கள் கூடுதலாக நன்றாகச் சமைக்காத ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி, மானிறைச்சி போன்றவற்றாலும் பூனையின் கழிவினால் தொற்றாக்கப்பட்ட நீரை, மண்ணை அல்லது எந்த உணவினையும் உட்கொள்வதாலும் ஏற்படுத்தப்படலாம்.
மூளைப் புற்றுநோயைப் பூனைகள் பரப்புகின்றனவெனத் தாங்கள் இன்னும் நிரூபிக்கவில்லை என்றும் இந்த ஆய்வில் கூறியுள்ளனர். இதற்கு மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
T.dondii ஒட்டுண்ணிக்கும் மூளைப் புற்றுநோய்க்குமிடையிலுள்ள தொடர்பை அறிவதன் மூலம் புற்றுநோய்க்கான ஆபத்தைக் குறைப்பதற்கான முக்கிய வழிகளைக் கண்டுபிடிக்கும் வழி கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment