Search This Blog

Friday, August 12, 2011

தமிழ்நாட்டு பழமொழிகள்-1



  *   அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  *   அச்சாணி இல்லாத தேர்,முச்சானும் ஓடாது.
  *   அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
  *   அசையாத மணி அடிக்காது
  *   அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
  *   அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
  *   அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
  *   அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
  *   அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
  *   அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
  *   அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
  *   அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
  *   அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
  *   அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
  *   அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
  *   அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
  *   அழகும் மடமையும் பழையகூட்டாளிகள்.
  *   அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
  *   அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
  *   அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
  *   அன்பே கடவுள்.
  *   அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
  *   அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
  *   அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
  *   அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
  *   அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
  *   அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
  *   அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
  *   அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
  *   அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
  *   அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
  *   அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
  *   அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
  *   அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
  *   அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
  *   அதிக ஓய்வு அதிக வேதனை.
  *   அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
  *   அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
  *   அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
  *   அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
  *   அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
  *   அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
  *   அதிகமாக உண்பவனுக்கு அறிவுமட்டு.
  *   அழுதாலும் பிள்ளை அவள்தான்பெற வேண்டும்.
  *   அறுக்கத் தெரியாதவன் கையில்ஐம்பது அரிவாள்.
  *   அளவிற்கு மிஞ்சினால்அமிர்தமும் நஞ்சு.
  *   அறவால் உணரும்போது அனுமானம்எதற்கு?
  *   அன்பாக் பேசுபவருக்குஅந்நியர் இல்லை.
  *   அன்னை செத்தால் அப்பன்சித்தப்பன்.
  *   அன்பு இருந்தால் புளிய மரஇலையில்கூட இருவர்படுக்கலாம்.
  *   அரசனும் அன்னைக்கு மகனே.
  *   அரண்டவன் கண்ணுக்குஇருண்டதெல்லாம் பேய்.
  *   அறிவுடை ஒருவனை, அரசனும்விரும்பும்.
  *   அழுத்த நெஞ்சன் யாருக்கும்உதவான், இளகிய நெஞ்சன்எவருக்கும் உதவுவான்
  *   அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
  *   அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
  *   அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கிவளர்க்காத மீசையும்உருப்படாது.
  *   அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
  *   அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.



No comments:

Post a Comment