Search This Blog

Monday, July 4, 2011

A Human Brilliance : எந்திரன் படத்தினால் இணையம் மூலம் பண மழையில் நனைந்த வலைப்பதிவர்



அன்புள்ள வாசக அன்பர்களுக்கும் , என்னை தொடர்ந்து இந்த கட்டுரை எழுத ஊக்குவித்து வரும் என் நண்பர்களுக்கும் , என் பணிவான வணக்கம். 

ஓய்வு நேரத்தில் பணம்  சம்பாதிப்பது எப்படி ? என்ற முதல் இரண்டு கட்டுரைகளைத் தொடர்ந்து வரும் மூன்றாவது கட்டுரை இது. 

இணையம் மூலம் பணம் பண்ணும் பிஸ்தாக்களுக்கும், இந்த தொடர் கட்டுரைகளில் வரும் சில தகவல்கள் , அவர்களும் கேள்விப்படாதவை யாக இருக்கும். மொத்தத்தில் , இதைப் படிக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ள தகவலாக இருக்கும் என்று நம்புகிறேன். சரி, இன்றைய கட்டுரையைப் பார்க்கலாம். 
========================================

இப்போது ஓரளவுக்கு ஒரு சின்ன அவுட் லைன் உங்களுக்கு கிடைச்சு இருக்கும். 
ஒரு வலைப்பூங்கிறது ஒரு உதாரணத்திற்கு நம்ம தமிழ் வாரப் பத்திரிக்கை - ஆனந்த விகடன் மாதிரி வைச்சுக்கோங்களேன். விகடன் பார்த்தீங்கன்னா , ஒரு மூணு பக்கத்துக்கு ஒரு பக்கமாவது ஒரு விளம்பரம் கண்ணிலே மாட்டும். இந்த விளம்பரங்களுக்கு செமயா காசு வசூலிக்கிறாங்க . கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் 8 லட்சம் புத்தகம், ஒரு புத்தகத்தை 5 பேரு பார்க்கிறாங்கன்னா  கூட சுமார் 40 லட்சம் , மக்கள் பார்ப்பாங்கனு கணிப்பு. ஆனா, நிஜத்திலே எத்தனை பேரு விளம்பரம்  பார்ப்பாங்கன்னு நமக்குத் தெரியாதா என்ன? நமக்குப் பிடிச்ச சினிமா நடிகை படம் போட்டாக் கூட, அடுத்த நொடியிலேயே , நாம அடுத்த பக்கத்திற்குப் போயிடுறோம்.. ஆனா, இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா , முன் அட்டையோட பின் பக்கம், பின் அட்டை யில்  முன்னும் , பின்னும் இந்த விளம்பரங்கள் - நம்ம  மனசுலே கொஞ்சம் பதியும். இதுக்கெல்லாம் , ரொம்பவே காசு அதிகம். நல்ல கலர்லே இருக்கிறது ஒரு காரணம் . குடும்பத்துலே பெண்கள் அதிகமா இதைப் பார்க்கிறதும் ஒரு காரணம்.  போத்தீஸ் கம்பெனியோட சாமுத்திரிகா பட்டு விளம்பரம் எப்பவும் பின் பக்க அட்டைலே இருக்கும். இல்லையா?  அந்த விகடன் பக்கத்தை எடுத்து வந்து , புடவை வாங்குனவங்க அதிகம். நேர்த்தியான வடிவமைப்பு  மட்டும் காரணம் இல்லை , அதுக்கு விளம்பரப்படுத்துற  இடமும் முக்கியம்.

ஹிந்து பத்திரிக்கையிலே , முதல் பக்கத்திலே ரைட் சைடு கீழே அரைப் பக்கத்துக்கு ஒரு விளம்பரம் வரும் தெரியுமா? அதுக்கு சுமார் அஞ்சு லிருந்து ஏழு லட்சம் செலவு ஆகும்...ஆனாலும்,  ஆறு மாசம் waiting பண்ணனும். பாதி அமவுண்ட் அட்வான்ஸ் கட்டனும். அவ்வளவு புக்கிங் எப்பவுமே இருக்கு. 

ஆனா , எத்தனைப் பேர் விளம்பரம் பார்க்கிறாங்கன்னு தெரியாது இல்லையா? இணையத்தில் அந்த பிரச்னை இல்லை. விளம்பரம் டிஸ்ப்ளே ஆகும். அதை உள்ளே க்ளிக் பண்ணிப் போகிறவங்க , அதைப் படிச்சதா கணக்கு.
அதனாலே உங்க ஆட்சென்ஸ் விளம்பரத்தை எத்தனை பேர் க்ளிக் செஞ்சு  பார்க்கிறாங்களோ  , அந்த அளவுக்கு உங்களுக்கு காசு அதிகமா வரும். வெறுமனே வந்து போறவங்க  , டிஸ்ப்ளே பண்ணினதை மட்டும் பார்க்கிறாங்க இல்லையா? அதனாலே அந்த பேஜ் இம்ப்ரேசன் எவ்வளவோ , அவ்வளவு காசு. 
1000 impression - இருந்தா - 1 டாலர்  வரலாம். ( உங்கள் site - இங்கிலீஷ் site ஆ இருந்தா)
ஆனா, க்ளிக் பண்ணிப்  பார்த்தா , ஒரு க்ளிக்குக்கு - 0 .1 டாலரிலிருந்து  , 1 டாலரோ , 2 டாலரோ - உங்க கன்டென்ட் பொறுத்து வர்ற விளம்பரத்தை பொறுத்து , மாறுபடும். ஒரு சில புதிய மருந்து , மாத்திரை , கார் , டெக்னாலஜி சம்பந்தப்பட்ட விளம்பரங்களுக்கு - per க்ளிக் காசு அதிகம். வர்ற விளம்பரம் எப்படி வேணும்னாலும் வரும், அது உங்கள் கையிலே கிடையாது. உங்கள் தலைப்பு , பதிவு அதிலே வர்ற விஷயங்கள் சம்பந்தமா , போஸ்டிங் க்கு ஏற்ப தானே விளம்பரம் வரும். 

உதாரணத்துக்கு , உங்க பதிவுலே ஒரு காமிரா சம்பந்தமா ஏதாவது எழுதினா, எதாவது ஒரு காமிரா விளம்பரமோ, லென்ஸ் கம்பெனி விளம்பரமோ , காமிரா சம்பந்தமா படிக்க வர்றவங்களை கவருவது மாதிரி விளம்பரங்கள் வரும். 

சரி, ஆனந்த விகடன் , ஹிந்து க்கு எல்லாம் எதனாலே இவ்வளவு விளம்பரங்கள் வருது ? அவங்களுக்கு உள்ள வாசகர் எண்ணிக்கை அதிகம் . இல்லையா?  அதனாலே அவங்களுக்கு விளம்பரங்கள் லைன் கட்டி நிக்குது. 

ஆனா, உங்க வலைப்பூவுக்கு - கூகுள்ளே முதல் ல இருந்தே விளம்பரம் வரும். ஆனா, உங்கள் வலைப்பூவின் தரம் உயர்ந்து , வாசகர் எண்ணிக்கை பெருகும்போது , நீங்களும் ஒரு விகடன் ரேஞ்சுக்கு உயர்ந்து  விடுவீங்க.  
எந்த ஒரு சூழ் நிலையிலேயும் உங்க விளம்பரத்தை நீங்களே க்ளிக் பண்ணிடாதேங்க. உங்க ஆட்சென்ஸ் அக்கௌன்டையே காலி பண்ணிடுவாங்க. எப்படி கண்டு பிடிப்பாங்கனு கேட்காதீங்க? அதுதான் அவங்க தொழிலே..!

ஆட்சென்ஸ் அக்கௌன்ட் - கட் ஆகாம காப்பாத்துறது , உங்க கையிலே தான் இருக்கு. 

கடமையை செய், பலனை எதிர் பாராதே ! ன்னு சொல்ற மாதிரி - நல்லா , வளர்ந்து இருக்கிற பெரிய பெரிய - இணைய தளமோ , வலைப்பூவோ - ஆட்சென்ஸ் க்ளிக் பத்தி கவலைப் படுறதே இல்லை. பேஜ் impression - கூட்டனும். அதுலே வர்ற காசே டார்கெட். க்ளிக் பண்ணி வந்தா அது போனஸ். அவ்வளவுதான். போகப் போக , நீங்களும் இந்த மன நிலைக்கு வருவீங்க.!!

சரி, அடுத்து நாம பார்க்கப் போறது .. எந்திரன் சம்பந்தப்பட்ட நம்ம தலைப்பு சம்பந்தமா !!

 ஒரு தனி மனிதன் தன்னோட மூளையை எவ்வளவு உபயோகப்படுத்தலாம்ங்கிறதுக்கு உதாரணம் இந்த Event . சாண்டில்யன்  - "யவன ராணி" எழுதுறப்போ கூட இவ்வளவு யோசிச்சு இருப்பாரான்னு தெரியலை. 
எந்திரன் படம் ரஜினி சார் நடிக்கிறார் , ஷங்கர் இயக்கம் - இவர் தயாரிக்கிறார்னு நியூஸ் கேள்விப் பட்டதுமே - தன்னோட முதல் படி எடுத்து வைக்கிறார்.
நாம வலைப்பூ ஆரம்பிச்சா , என்ன பேரு வைக்கிறமோ  - அதுலே blogspot சேர்ந்து  வரும். எந்திரன் அப்படின்னு வைச்சா , www .Enthiranblogspot .com அப்படின்னு வரும். முதல் லே , இந்த படம் அனௌன்ஸ் பண்ணினதுமே , இது சம்பந்தப்பட்ட தகவல்களை எத்தனயோ வலைப்பூவில் பதிவுகள் வரும். 
உதாரணத்துக்கு சினிமா நியூஸ் னு ஒரு வலைப்பூ இருக்குதுனே வைச்சுப்போம். அவங்களும், இதே எந்திரன் பதிவை போட்டா.. அவங்க சைட் டும் கூகுள் சர்ச் என்ஜின் வரும். இல்லையா... ?

செர்ச் என்ஜின் னோட hierarchy எப்படினா  ..  முதல்லே சைட் நேம் , அதுக்கடுத்து போஸ்டிங் ஓட தலைப்பு  , அதுக்கு அப்புறம் கன்டென்ட்... அவ்வளவுதான் . பிளாக்கர் - label லாம் அது கண்டுக்குறதே இல்லை.
இப்போ சொல்லுங்க .. எந்திரன் னு செர்ச் பண்ணினா , முதல்லே எந்திரன் பேருலே உள்ள வெப்சைட் / ப்ளாக் ஸ்பாட் பார்த்ததுமே , வர்ற விசிட்டர்ஸ் திமு திமுன்னு இங்கே தான் வருவாங்க. இது  ஒரு டார்கெட் செட் பண்ணி அடிக்கிறது.
இவர் என்ன பண்ணினாருணா.. எடுத்ததுமே ஒரு domain register பண்ணிட்டார். www .enthiran .org  ...... னு பேரு.இப்போ தேடுனா , enthiran .org   னு ஒரு சைட் டே  இருக்காது. ஒரு டொமைன் வாங்குறது எப்படி.. ? எவ்வளவு செலவு எல்லாம் அப்புறமா சொல்றேன்.

 நம்ம சைட் எடுத்துக்கோங்களேன்... livingextra .blogspot .com னு இருக்கிறதுக்குப் பதிலா, livingextra .com னு இருக்கிறப்போ, வர்ற விசிட்டர்ஸ் என்ன நினைப்பாங்க.. ? அடேங்கப்பா.. .com னா , பெரிய சைட் போலே னு நினைப்பாங்கள்லே  ?    

நீங்க கூகுல் லே எந்திரன் போட்டு எதையோ தேடுறீங்க ? முதல் லே இந்த சைட் தான் நிக்கும். ஏன்னா..? ஆரம்பிச்ச நாள் லே இருந்து , குருவி மாதிரி - எந்திரன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சின்ன செய்தியா இருந்தாலும் , பதிய ஆரம்பிச்சாரு. ஒரு இரண்டு வருஷம் இருக்குமா..? ஆரம்பத்திலே ஒன்னும் பெரிய அளவுலே யாரும் எந்திரன் பத்தி தேடலை. ... இவர் மனசு தளர விடலை.  

ENTHIRAN IMAGES , ENTHIRAN NEWS , ENTHIRAN PRESS COVERAGE , ENTHIRAN SONGS DOWNLOAD , ENTHIRAN VIDEO DOWNLOAD - ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ... இப்படி எல்லாமே இருக்கும் இங்கே.
அதுக்கு அப்புறம் தான் நடந்தது அந்த ஜாக்பாட்.. .. எப்போ எந்திரன் ஆடியோ லாஞ்ச் பண்ணினாங்களோ அப்போ இருந்து படம் ரிலீஸ் ஆகி ஒரு இருபது  நாள் வரைக்கும், உலகம் முழுக்க அத்தனை தமிழ் ரசிகர்களும் கண்ணா , பின்னானு எந்திரன் பத்திதான் கூகுள் லே தேடுனாங்க.. அத்தனை பெரும் இந்த சைட் க் குள்ளே  போகாமே இருந்ததே இல்லை. இவருக்கு இந்த .org  சைட் தவிர, எல்லா போஸ்டிங் கும் ஒரு பத்து ப்ளாக் வேற வைச்சு போஸ்ட் பண்ணினார். இந்த எல்லா சைட் டும் சேர்த்து கரெக்டா , ஒரு நாலு மாசத்திலே - இவருக்கு வந்த பேஜ் impression எவ்வளவு தெரியுமா? 30 மில்லியன் .  கிட்டத்தட்ட மூணு கோடி பக்கங்கள் .....
மட்டமா , ஆயிரம் பக்கத்துக்கு - ஒரு டாலர்னு வைச்சாக் கூட, பேஜ் imperssion க்கு மட்டும், எவ்வளவு பைசா வந்து இருக்கும். அப்புறம் ஆட் க்ளிக் பண்ணினது எவ்வளவு இருக்கும்.

சந்தேகமே இல்லாம , ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யா , AR ரெஹ்மான் தவிர , டோடல் எந்திரன் crew லே - யாருக்கு அதிகம் சம்பளமோ, அந்த ரேஞ்சுக்கு இவரும் சம்பாதிச்சுட்டார். ஒரு ரெண்டு வருஷ அடித்தளம், சீரியசான முயற்சி... பக்காவா திட்டமிட்டு , கொஞ்சம் கொஞ்சமா மலையை நகர்த்தின முயற்சி. 

இது எல்லாத்துக்கும் மேல - தன்னம்பிக்கை ,  மூளையோட பலம்.. !! 

ஆனா, இன்னும் ஒரு கம்பெனிலே வேலை பார்க்கிறார். ஒய்வு நேரத்திலே தான் , அதிகமா  போனா ஒரு நாளைக்கு ரெண்டு மணிநேரம் இதுலே வேலை பார்க்கிறார். ஏன்னு கேட்டா.. ? எதுவுமே நிரந்தரம் இல்லை பாஸ்.. ஓட்டுற வரைக்கும் ஓட்டுவோம்.. நானா கம்பெனி வேலையை விட மாட்டேன்.. விட்டாக் கூட ஒரு மாசத்துக்கு ரெண்டு லட்சம் சம்பாதிக்க எனக்கு வழி இருக்கு.. அது போதும்ங்கிறார்.

He is driving a BMW just because of that enthiran endeavour ! 

What a   brilliant man ! இவர் கிட்டே இருந்து .. இன்னும் எவ்வளவோ கத்துக்க வேண்டி இருக்கு... நாம எல்லோருமே!

நாம இன்னும் எத்தனை நாளைக்குத் தான், ஜெயிக்கிறவங்களை வேடிக்கை பார்த்துக் கிட்டே இருக்கிறது.. ?  நாமளும் கொஞ்சம் வித்தியாசமா செய்ய ஆரம்பிப்போம்... இன்னும் நிறைய கத்துக்கிடுவோம்..!!

ஓகே... இன்னைக்குப் போதும்..!!  மீண்டும் சிந்திப்போம்...!!


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_7325.html#ixzz1R89qcqMV

No comments:

Post a Comment