Search This Blog

Tuesday, July 12, 2011

சர்ப்ப தோஷம் , திருமண தடை நீங்க அற்புதமான பரிகார ஸ்தலம்



ஹர ஹர மஹா தேவ்....!! கொஞ்சம் நீங்க வாய் விட்டு சொல்லும்போது , உங்க உடம்புக்குள்ளே சிவ்வுனு புது ரத்தம் பாயும்.. உடம்பு கொஞ்சம் அதிரும்.. சொல்லிப் பாருங்க...!

கிட்டத்தட்ட இந்து மதம் முழுவதுமா அழிஞ்சுக்கிட்டு இருந்த நேரத்திலே , கடவுளால் அனுப்பப்பட்ட தூதன் போலே , மராட்டிய மாநிலத்தில் தோன்றி , அவுரங்கசீப்பை கதிகலங்க வைத்த " வீர சிவாஜி " தனது வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்க சொல்லிய மந்திர வார்த்தைகள் தான் இந்த " ஹர ஹர மஹா தேவ் !"
அந்த காலத்து படையெடுப்புகளால் மிரண்டு கிடு கிடுத்து , லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டுப் பக்கம் ஓடோடி வந்து இருக்கிறாங்க. ராஜா வலுவிழந்தா , இன்னொரு ராஜா படையெடுப்பான். தலைமை சரி இல்லேன்னா, குடி மக்கள் கதி கலங்க வேண்டி வரும். அப்படியே கட்டாய மத மாற்றம் நடந்து இருக்குது. மதம் என்கிற ஒரு விஷயம் , அதை பெரிசா எடுத்துக்கிட்டு - இந்த நூற்றாண்டுலேயும்  உயிரையே பறிக்கிறதுன்னு , உலகத்திலே இன்னும் சண்டை நடந்துக்கிட்டு தான் இருக்குது. அந்த காலத்திலே இன்னும் எப்படி இருந்து இருக்கும் ? 

ஒரு இந்து வீட்டில் பிறக்கிறதும், முஸ்லீம் வீட்டில் பிறக்கிறதும் நம்ம கையிலேயா இருக்குது ?  இந்தியாலே பிறக்குறதும் ,  உகாண்டாலே பிறக்குறதும் உங்க கையிலேயா இருக்குது? ஒரு ஐயர் வீட்டிலே பிறக்குறதும், ஹரிஜன் வீட்டிலே பிறக்குறதும் நிச்சயமா நம்ம கையிலே இல்லையே. அப்படி இருக்கிறப்போ, மனுஷனுக்குள்ளே  ஏன் இந்த துவேஷம்?


 ராஜா வலுவிழந்தா , இன்னொரு ராஜா படையெடுப்பான். வீட்டுலேயும் அதே கதை தான். கட்டுக்கோப்பான தலைவன், பாசமுள்ள கணவன் - மனைவி , ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கிற குடும்பத்துலே ... கள்ளத் தொடர்பு எங்கே இருந்து வரும். ஒரு குடும்பம் நல்லா இருந்தா, ஒரு சமூகமே நல்லா இருக்கும். முடிந்த அளவு தனிமையை குறைச்சு இருக்கிறப்போ , மனசுக்கு உள்ளே சபலப்படுற எண்ணங்கள் குறையும். நம்ம மனசை ஜெயிச்சுட்டோம்னா ,  அது போதும். அதுக்கு உங்களுக்கு இறை வழிபாடும் உதவும்.



அந்த மாதிரி மொகலாய ராஜ்ஜியம், நவாப்புகள் ராஜ்ஜியம் நடந்துக்கிட்டு இருந்தப்போ - எத்தனையோ ஆலயங்கள் சூறையாடப் பட்டு இருந்து இருக்குது. ஒரு சில இடங்கள்லே - வெறும் கோவில் மட்டும் இருக்குது. சுத்தி ரொம்ப தூரத்துக்கு வீடுகளே இல்லை. கேட்டா, நவாப் அங்கே ஒரு ஊரை நிர்மாணம் பண்ணினாரு. அதனாலே ஊரையே காலி பண்ணி அந்த ஊருக்குப் போயிட்டாங்க. நாளடைவிலே கோவில் தவிர மீதி இடம் எல்லாம் , புல் பூண்டு முளைக்க ஆரம்பிச்சு - கோவில் ஊரை விட்டு ஒதுங்க ஆரம்பிச்சு , பாழடைந்து -- பல வருஷங்களுக்கு அப்புறம் புதுப்பிச்சு , திரும்ப பொலிவோட இப்போ திரும்புது.

அந்த மாதிரி ஒரு கோவிலைப் பத்தி தான் நாம இன்னைக்கு பார்க்கப்போறோம். கோவில் இருக்கிற இடம் வன்னிவேடு. வேலூர் மாவட்டம், வாலாஜாவுக்கு ஒரு இரண்டு / மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்குது. மூலவர் - அகத்தீஸ்வரர். அம்பாள்  : ஸ்ரீ புவனேஸ்வரி
 

ராணிப்பேட்டை , ஆற்காடு , வாலாஜா என மூன்று நகரங்கள் அருகில் இருந்தும் - அங்கு இருப்பவர்களுக்கே அதிகம் தெரியாத ஆலயம். ஆனால், இங்கு ஒரு முறை வந்து பாருங்கள். உங்களுக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் ஆலயம் இது. வன்னி மரத்தடியில் சுயம்பாக தோன்றி - அகத்திய முனிவரால் நிறுவப்பட்டு வணங்கப்பட்டவர் அகஸ்தீஸ்வரர்.

அந்த கால சிற்ப சாஸ்திரம் , துளியும் பிசகாது - அற்புதமாக கட்டி இருக்கிறார்கள். மதில் சுவர் , மற்றும் ஆலயத்தின் உள்ளே சில வேலைகள் செய்ய ஒருமுறை  ஸ்தபதி ஒருவரை அழைத்து வந்து காட்ட , அவர் இந்த ஆலயத்தைப் பார்த்து வியந்து போய் , சில தகவல்களை கூறி இருக்கிறார்.
ஆலயத்தில் நீங்கள் எந்த தெய்வத்தின் முன் நின்று வணங்கினாலும், உங்கள் தலைக்கு மேல் - ராகு , கேது உருவங்கள் - உங்கள் தலைக்கு மேல் உள்ள தூணில் இருக்கிறது. கோவில் அமைக்கும் போதே - சர்ப்ப தோஷ பரிகாரம் முழுவதும் கிடக்கும்படி அமைத்து இருக்கிறார்கள். அம்மன் - பீடமும், ஆவுடையார் மேல் அமைக்கப்பட்டு உள்ளது.


அஷ்ட திக் பாலகர்களும் - கோவிலை சுற்றி நிறுவப்பட்டு இருக்கிறார்கள். பிரகாரத்தில் ஹனுமான், ஹயக்கிரீவர் , கால பைரவர் , பெருமாள் ஆகியோரும் , அன்ன பூரணியும், காம தேனுவும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். வன்னி மரத்தடியில் - சனீஸ்வரர் அமர்ந்து இருக்கிறார். இதெற்கெல்லாம் சிகரம் போலே - சரபேஸ்வரர் ஆலயத்தினுள் கம்பீரமாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

வன்னி மரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கும் சனி பகவான் - உங்களுக்கு கஷ்டங்களை தாங்கும் முழு வலிமை தருவார். ஏழரை, அஷ்டம சனி இருப்பவர்கள் , ஜாதகத்தில் சனி பகவான்  வலிமை இல்லாமல் இருப்பவர்கள் - அவசியம் வர வேண்டிய ஆலயம். நவ கிரகங்களில் , சனி பகவான் - ஒரு காலை உயர்த்தியபடி இருப்பது , இங்கு விசேஷமான ஒரு அமைப்பு. உனக்கு அபயம் அளிக்க நானிருக்கிறேன். கவலைப்படாதே ! என்று ஓடோடி வந்து உங்களுக்கு வரம் அளிப்பதற்கு தயாராக இருக்கிறாராம்.

ஒவ்வொரு ஞாயிறும், ராகு கால நேரத்தில் - சரபேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் , மிக சிறப்பாக நடை பெறுகின்றது. வாழ்வில் நீண்ட கால தடைகள் , பில்லி , ஏவல், சூன்யம் பிரச்னைகள் , கணவன் , மனைவி திருந்தி ஒற்றுமையுடன் வாழ்தல், நீங்கள் நேரடியாக மோதாமல் உங்கள் எதிரிகளை வலுவிழக்க செய்தல், உங்களுக்கு வர வேண்டிய சொத்து  உங்களுக்கு விரைவில் கிடைக்க செய்தல் , நீண்ட காலம் வாரா கடனை உங்களுக்கு விரைவில் திரும்ப கிடைக்க செய்தல், உங்கள் கடன் தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்தல், முக்கியமாக ஒழுக்கத்துடன் உங்களை வாழ வைத்து உங்கள் கம்பீரத்தை பறைசாற்றுதல் , - போன்ற பல அற்புதங்களை செய்பவர் சரபேஸ்வரர். முக்கியமாக இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு , திருமண தடை நீங்கியவர்கள் அநேகம்.

 சிவன் அவதாரங்களிலேயே - துடியான அவதாரம் சரபேஸ்வரர். எங்கெல்லாம் சரபேஸ்வரர் உருவம் தூணிலோ , அல்லது சிலையாகவோ இருக்கிறதோ - அங்கே ஜாலுவேச சித்தரின் ஆத்ம சரீரம் அடங்கி இருக்கிறது என்பது ஒரு பெரிய ரகசியம் .

உங்கள் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றுபவர் இந்த  சரபேஸ்வரர். மிக முக்கியமான விஷயம் - கூட்டம் கட்டுக் கடங்காமல் இல்லாமல் , மிக சொற்ப பேரே இருப்பதால் - நீங்கள் கண் குளிர அபிஷேக / ஆராதனை தரிசனம் செய்யலாம். உங்களுக்கு மூன்றடி / நான்கடி தூரத்தில் - ஒரு சக்தி வாய்ந்த கடவுளுக்கு அபிஷேகம் நடந்தால் எவ்வளவு சந்தோசம் தரும் என்பதை நீங்கள் உணர முடியும். ..

 அவருக்கு படைத்த விபூதி , சந்தனம் உங்களுக்கு பிரசாதம் தருகிறார்கள். வழிபாடு முடிந்ததும்  - புளி சாதம், பஞ்சாமிர்தம் , தயிர் சாதம் - பிரசாதமாக அன்ன தானம் செய்கிறார்கள். மாலை , மங்கி இருள் சூழும் நேரத்தில் - சரபேச தரிசனமும், சூழ் நிலையும் - மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது.

நீங்கள் ராகு காலம் ஆரம்பிக்கும் நேரத்தில் - கோவிலுக்கு வந்து விட்டு , மற்ற தெய்வங்களை தரிசித்து விட்டு சரபேசர் முன் அமர , அபிஷேகம் ஆரம்பிக்க சரியாக இருக்கும்.  அலங்காரம் செய்ய கிடைக்கும் இடைவேளை நேரத்தில் - வன்னி மரத்தடியில் அமர்ந்து - ஸ்ரீ ருத்ரமோ , லலிதா சஹஸ்ரநாமமோ மெதுவாக சத்தமின்றி சொல்லி முடிக்க , வழிபாடு தொடங்க சரியாக இருக்கும்.
ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை - பிரதோசமும் கூடி வந்தால், சரபேசரை வழிபடும்  இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். !


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_12.html#ixzz1Ru21uKao

1 comment:

  1. As we've observed more and more equivalently priced inkjet printers and all-in-ones are usually coming through with cheaper print costs compared to a lot of lasers, thus if print economy is particularly crucial to you, consider the new business inkjet models available from HP along with other makers.
    UV Flatbed prints

    ReplyDelete