Search This Blog

Thursday, July 28, 2011

ஹவ் கேன் ஐ டாலரேட் ? பிரச்னைகளை நீங்கள் எதிர்கொள்ள ஒரு சூத்திரம்




பிரச்னைகளின் தொகுப்புதான் வாழ்க்கை. எந்த ஒரு மனிதனுக்கும் , பிரச்னைகள் உண்டு. கடலில் அலைகள் எப்படி வந்து கொண்டு இருக்குமோ, அதைப் போல பிரச்னைகளும் வந்து கொண்டு தான் இருக்கும். பிரச்சினை வருமே என்று , எந்த முயற்சியும் எடுக்காமல் ஒதுங்கி நிற்பதால் , உங்களுக்குத் தான் நஷ்டம்.
இல்லை சார், நானும் எவ்வளோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன்.. ஒண்ணுமே திறமை இல்லாதவன்லாம், முன்னுக்கு வர்றான், அதிர்ஷ்டம் தான் சார் முக்கியம் , நமக்கு அது இல்லை போலனு , விரக்தியாகிற எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறோம்.. இந்த நிலைமையை எப்படி சமாளிக்கலாம்?
எனக்குத் தெரிஞ்ச ஒரு சில விஷயங்களை உங்க கிட்டே பகிர்ந்துக்கப் போறேன்.. இந்த விஷயத்தில் , அனைத்தையும் துல்லியமாக அறியக்கூடிய அதி மேதாவி, இந்த உலகத்தில் யாருமே  இல்லை. பொதுவாக பொருந்தக்கூடிய விஷயங்களை வைத்து ஜோதிட விதி முறைகள்  இருந்தாலும், அனுபவத்தில் சில் உண்மைகளையும் வைத்தே எந்த ஒரு ஜோதிடரும் பலன் சொல்கிறார்கள். 

நமது ஜோதிட பதிவு படிக்கும் மாணவர்களுக்கு  - இது 22 ஆவது பாடம். இருந்தாலும், நமது ஒவ்வொரு வாசகர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருப்பதால், இதை ஒரு பொதுக் கட்டுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம்..
சரி, விஷயத்திற்குப் போவோம்.. !

=========================================

எந்த ஒரு மனிதனும் , பிறந்தால் - ஒரு நாள் இறந்தே தீரவேண்டும். அவன் பிறக்கும்போதே இறக்கும் தேதியும் நிர்ணயிக்கபடுகிறது. அது மட்டுமில்லாமல் , அவன் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் பிறக்கும்போதே தீர்மானிக்கப் படுகிறது , என்பது ஜோதிட விதி. 

பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் , ஒன்பது மூலாதார சக்கரங்கள் இருக்கின்றனவாம். ஒன்பது கோள்களின் கிரக நிலை நிற்கும் நிலைக்கேற்ப , வரும் கிரக கதிர் வீச்சுக்கேற்ப -  இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பிக்கும். கோட்சார ரீதியில் , இந்த கிரகங்கள் வரும்போது , அந்த சுழற்ச்சிக்கேற்ப - உங்கள் உடல் , மனம் , ஆத்மா மூன்றும் தூண்டப்படுகிறது. அதற்கேற்ப நீங்கள் செயல்பட ஆரம்பிக்கிறீர்கள் .... அந்த செயல்களின் விளைவே உங்கள் வெற்றி , தோல்வி, புகழ், அவமானம் , இப்படி சகலமும்.. 

குழந்தை பிறந்த நேரத்தை வைத்து லக்கினம், சந்திரன் நின்ற நட்சத்திரத்தை வைத்து - ராசி - அதன் பிறகு மற்ற கிரகங்கள், இருக்கும் வீடுகளை வைத்து - உங்களுக்கு கிடைக்கும் கதிர்வீச்சு தீர்மானிக்கப் படுகிறது.

தினப்படி , நாம் செய்யும் செயல்களை ஜாதகம் சொல்லிவிடுமா ? நான் இன்னைக்கு காலைலே எத்தனை தோசை சாப்பிட்டேன்னு சொல்ல முடியுமான்னு பைத்தியகாரத் தனமா , விதண்டாவாதம் பண்றவங்களுக்கு இந்த கட்டுரை கிடையாது . அவர்கள் மேலே படிக்காமல் , வேறு வேலை பார்க்க செல்லலாம். 
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTHLTWIHQOEfePqiaQ3IpR3JsIO6cJ8dPVkeOVjF56u3sMswprO
ஆனால், ஒன்று - உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? காலையில் எவ்வளவு சீக்கிரம் எழுந்து இருக்க முடியும்? நீங்கள் அன்றாடம் பூஜை , ஸ்லோகம் , அல்லது அடிக்கடி முக்கிய கோவில்களில் வழிபாடு செய்வதன் மூலம் , உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழி உண்டா? என்பதை இந்த கிரக கதிர்வீச்சு நிர்ணயம் செய்கிறது.

எப்படி ஒரு இயந்திரத்திற்கு - operating manual  - Do 's and Don 'ts இருக்கிறதோ - அதைப் போல மனிதனுக்கு ஜாதகம். அந்த பன்னிரண்டு கட்டத்தையும், ஒன்பது வீடுகளையும் வைத்து - உங்கள் தலை விதியை ஓரளவுக்கு ஒரு நல்ல ஜோதிடரால் படிக்க முடியும்.  ஒரு சில மனிதர்கள் சில விஷயங்களை  செய்யவே கூடாது என்பது இருக்கும். அந்த மாதிரி விஷயங்களில் நீங்கள் என்னதான் தலையிட்டு , பிரம்ம பிரயத்தனப் பட்டாலும், உங்களுக்கு வெற்றி கிடைக்காது. 

ஒரு விஷயம் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கும் வாழ்வு , தாழ்வு அவனது சொந்த முயற்சியால் மட்டுமே இருக்க வேண்டும். நான் ஜோதிட பாடங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தது அந்த காரணத்திற்க்காகத்தான். சில அடிப்படை விஷயங்களை சொல்லி விட்டால், அதன் பிறகு - நீங்கள் ஆராய்ந்து முடிவெடுக்கலாம். படிக்க கத்துக் கொடுத்தாச்சுன்னா , நீங்க படிக்க ஆரம்பிச்சுட மாட்டீங்களா என்ன! 

லக்கினம் எதுவென்று பாருங்கள். இலக்கின அதிபதி எந்த வீட்டில் இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? பகை  / நட்பு , நீசம், ஆட்சி , உச்சம் , தீய கிரக சேர்க்கை, பார்வை , சுப கிரக பார்வை ...  இப்படி பல விஷயங்களையும் ஆராய்ந்து - நீங்கள் அதன் பலம் கண்டு பிடிக்கலாம்.  ராசிக் கட்டம் இல்லாமல் , அம்சத்திலும் அந்த கிரக நிலைமை என்னவென்று பாருங்கள்..

இப்போது அந்த கிரகம் வலிமையுடன் இருக்கிறதா? இல்லை பலம் இழந்து இருக்கிறதா என்று முடிவெடுங்கள்.. 

சரி, பலம் இழந்த கிரகத்திற்கு - பலம் அளிக்கணும். என்ன பண்றது?

அதற்க்கு தான் , சில கிரக வீச்சு , வலிமை அதிகமாக இருக்கும் இடங்களை - ஒரு சில குறிப்பிட்ட பரிகார ஸ்தலங்களாக , நம் முன்னோர்கள் வகுத்து இருக்கிறார்கள். ஸ்ரீ சக்கரம், இயந்திரம் என்று ஸ்தாபிக்கப்பட்டு , சிற்ப சாஸ்திரப்படி , அந்த குறிப்பிட்ட கிரக கதிர் வீச்சு அதிகம் கிரகிக்கப்ப்படும்படி அந்த ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.  நீங்கள் அந்த கோவிலுக்கு சென்று , அபிசேக ஆராதனை செய்யும்பொழுது - அந்த கதிர்வீச்சைப் பெற்ற உங்கள் மூலாதார சுழற்ச்சி,  அதற்கேற்ப  தூண்டப்பட்டு - உங்களை வழிப்படுத்தும் .

அதிர்ஷ்டக் கற்கள் , ரத்தினக் கற்கள் - அணிந்து கொள்வதன் மூலமும், உங்கள் நாடியை தூண்ட முடியும். இயற்கையில் கிடைக்கும் அந்த கற்கள் , பல நூறு வருடங்களைத் தாண்டி, சில பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 

அதே நேரம், கண்ணை மூடிக்கொண்டு , அந்த ரத்தினங்களையும் அணிந்து விடாதீர்கள். மிக நன்றாக அலசிப்பார்த்து , ரத்தினங்களை தேர்ந்தெடுங்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் மீன லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். சூரிய தசை வரவிருக்கிறது , சூரியன் பலம் இழந்து இருக்கிறது என்று , நீங்கள் பாட்டுக்கு - மாணிக்க மோதிரம் அணிந்து கொள்ள வேண்டாம். மீனத்திற்க்கு - ஆறுக்கு உரியவனாக , சூரியன் வருகிறார். கடன் , நோய் , எதிரி என்று படுத்தி விடும். ஆறுக்கு உரியவன் , பலம் இழந்து தசை நடத்தினால் பரவா இல்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும். 

அதே நேரம் , உங்களுக்கு முழு யோகம் தரக்கூடிய கிரகம் -உதாரணத்திற்கு , கடக லக்கினம் , செவ்வாய் பலம் இல்லாமல் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் , உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் , வைத்தீஸ்வரன் கோவில், திருச்செந்தூர் சென்று வரலாம். அருகில் இருக்கும் முருகன் ஆலயம் செவ்வாய் கிழமைகளில் சென்று , பாலபிசேகம் செய்யலாம். செவ்வாய், அல்லது மாதா மாதம் உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் முருகனுக்கு விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கு உகந்த - பவளத்தில் மோதிரம் அணிந்து கொள்ளலாம். இதனால், உங்கள் ஒட்டு மொத்த பூர்வ, புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் குழந்தைகள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் திகழ முடியும். தொழில் , வியாபாரம் அமோகமாக இருக்கும். ரத்த சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்னைகளும் தீரும். விபத்துகள் ஏற்படாது.
மேஷம், விருச்சிக லக்கினங்களில் பிறந்தவருக்கும் இது பொருந்தும். எந்த வித பிரச்னைகளையும் நீங்கள் சமாளிக்க முடியும். 

எதனால் இப்படி சொல்கிறேன் என்று  உங்களுக்கே இப்போது புரியும். இல்லையெனில், நமது பழைய பாடங்களை திரும்ப படியுங்கள்... !
இன்னும் சில சூட்சுமங்களை - அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம். !

=========================================================
நமது வாசகர்கள் அனைவருக்கும், ஒரு வேண்டுகோள். சமீபத்தில் - நமது ஒவ்வொரு கட்டுரையும் , பலரையும் சென்றடைய வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் இன்ட்லி என்னும் இணையதளத்தில் பதியப்படுகிறது.  ஒவ்வொரு பதிவின் கீழும், அதற்குரிய  லிங்க் இருக்கிறது. உங்கள் கண்ணோட்டத்தில், அது சிறந்த கட்டுரை என்று நீங்கள் எண்ணினால் , அதைக் க்ளிக் செய்து - நீங்கள் வாக்கு அளியுங்கள். முதல் முறை , நீங்கள் register செய்ய வேண்டி வரும். அதன் பிறகு , ஒரு சில வினாடிகள் தான் ஆகும். 



எனக்குத் தெரிந்து , ஒரு இருபது கட்டுரைகளாவது - உங்களுக்கு மிகப் பிடித்தவை இருக்கும் என்று நினைக்கிறேன்.. எனக்கு மிகப் பிடித்தவை என்று பார்த்தால் , அது ஒரு இருநூறாவது இருக்கும். ஒரு பத்து பேர் அதிகம் பார்ப்பது , ஒரு படைப்பாளியாக எனக்கு மிகப் பெரிய சந்தோசமும் , உந்துதலும் தரும்.


உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, வாக்களியுங்கள்.. பலரையும் சென்றடைய அது வழி வகுக்கும். எனக்காக கொஞ்சம் சிரமப்படுவீர்கள் என்று நம்புகிறேன்..!


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_27.html#ixzz1TNE3Tjty

No comments:

Post a Comment