Search This Blog

Monday, July 18, 2011

இரும்பிலே இருதயம் முளைத்ததோ ? உலோகங்களைக் கவர்ந்திழுக்கும் காந்தச் சிறுவன் ( படங்கள் இணைப்பு )



article-2013028-0CF0FA1C00000578-396_634x421
பிரேசிலை சேர்ந்த 11 வயது சிறுவன் பாலே டேவிட் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளான். இந்த சிறுவன் அதி பயங்கர காந்த சக்தி சிறுவனாக உள்ளான்.
அந்த சிறுவனுக்கு இந்த விடயம் தான் பிரச்சனையாக உள்ளது. அவன் நடந்து செல்லும் பாதையில் உள்ள இரும்பு பொருட்கள் தானாக ஒடி வந்து ஒட்டிக் கொள்கின்றன.
கத்திகள், இடுக்கிகள், கத்திரிக்கோல் மற்றும் உலோக பொருட்கள் அனைத்தும் அவரை தேடி வந்து ஒட்டிக்கொள்கின்றன என்று தந்தை ஜீனியர் கூறுகிறார். இதே போன்ற சாதனையை குரோஷியாவை சேர்ந்த சிறுவன் இவான் ஸ்டோஜிகோவிக் நிகழ்த்துவது குறித்தும் ஆச்சரியம் ஏற்பட்டு உள்ளது.
குரோஷியா சிறுவன் ஏறக்குறை 25 கிலோ எடையுள்ள உலோக பொருளை சுமக்கும் திறன் பெற்றவனாக உள்ளான். சிறுவன் பாலே செல்லும் பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் உடலில் அதிக பொருட்களை சுமக்க வலியுறுத்துகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று பார்த்தது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment