Search This Blog

Wednesday, July 13, 2011

மாயமான நிலப்பகுதிகள் அட்லாண்டிக் கடல்படுகையில் கண்டுபிடிப்பு



5 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான மலைகள், நிலப்பகுதிகள் வடக்கு அட்லாண்டிக் கடல்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாய உலகம் ஓர்க்னே – ஷெட்லேண்ட் தீவுப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பழைய நிலபரப்பு 1.2 மைல் ஆழம் உடையது. மலைகளையும் 8 பெரும் நதிகளையும் கொண்டதாக இருந்துள்ளது.
இந்த பகுதி தற்போதைய ஸ்காட்லாந்து பகுதிக்கு அருகாமையில் அமைந்து உள்ளது. இந்த மறைந்த நிலபரப்பு குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைகழக ஆய்வாளர் நிக்கிவொயிட் ஆய்வு செய்து உள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பகுதி பழங்கால படிவம் உடைய நிலப்பகுதியாக 1.2 மைல் அளவு கடல்படுகைக்கு அருகே பாதுகாக்கப்பட்டு உள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பரப்பில் சிறு படிவங்கள் இருப்பதால் அந்த பகுதி கடல்சார் சுற்றுச்சூழலுடன் அமைந்து இருக்கும் என ஆய்வாளர்கள் கூறினர்.
பல கோடி ஆண்டுகளுக்கு முந்தய மிக அபூர்வமான நிலப்பகுதி கண்டுபிடிப்பு குறித்து நேச்சர்ஜியோ சயின்ஸ் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது.
கடலுக்கு அடியே உள்ளே கற்களில் இருந்து சேகரிக்கப்பட்ட முக்கிய ஆதாரங்கள் மூலம் அந்த பழைய பூமியில் குடியிருப்புகளும் இருந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

No comments:

Post a Comment