Search This Blog

Monday, July 18, 2011

மனிதக் கழிவு ஒரு தங்கச் சுரங்கம்: புதிய கண்டுபிடிப்பிற்கு தயாராகிறார் பில்கேட்ஸ்



bill gates
உலகின் கொடைவள்ளல் என அறியப்பட்ட மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மனிதக் கழிவுகளைக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் மலசலகூட வசதிகளை மேம்படுத்த உதவி வழங்கவும் விரும்புகிறார்.
இவருடைய அடுத்த திட்டம் 10 மில்லியன் டொலர்கள் செலவில் அபிவிருத்தி அமைச்சர் டர்க் நைபல்லுடன் இணைந்து பில்ரூ மெலின்டா கேட்ஸ் அறநிறுவனத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 வருடங்களில் கென்யாவிலுள்ள 800,000 மக்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதையும் 200,000 பேருக்கு குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்காகக் கொண்டுள்ளது.
சுகாதாரம் மோசமான நிலையில் உள்ள நகர்ப்புறங்களில் புதுமையான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
பழமையான மலசலகூடங்களை விட்டு நகரவேண்டிய காலகட்டம் இது என பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். உலகின் சனத்தொகையில் 40 வீதமானவர்கள் அல்லது 2.5 பில்லியன் மக்கள் தமது கழிவுகளை உகந்த முறையில் வெளியேற்றும் வசதியற்றவர்களாய் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், நீர் பற்றாக்குறை காரணமாக இவர்கள் அனைவருக்குமே மேற்கத்திய முறையிலான மலசலக்கூடங்களை அமைத்துக் கொடுப்பது சாத்தியமற்றது.
ஆனால் இந்த விடயம் மிக அவசரமானது: குறைந்த சுகாதார வசதிகள் மற்றும் சுகாதாரமான முறையில் கழிவுகளை அகற்றாமை என்பன நோய்கள் பரவ வழிவகுக்கும்.
உலகில் 1.1 பில்லியன் மக்களுக்கு மலசலகூடம் அல்லது கழிவுகளை அகற்றும் வசதி இல்லை என UNICEF மதிப்பிட்டிருக்கிறது. அடுத்த பக்கம், சுகாதாரமற்ற குடிநீர் வயிற்றோட்ட நோயினை மிக விரைவாகப் பரப்பச் செய்கிறது.
UNICEF மதிப்பீட்டின்படி ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்கும் குறைவான கிட்டத்தட்ட 1.2 மில்லியன் குழந்தைகள் வயிற்றோட்டம் காரணமாக உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக அமைவது மனிதக் கழிவுகள் தான்.
ஜூன் மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் நாயகம் பான் கி-மூன் UNICEF  உடன் இணைந்து 5 ஆண்டுகால சுகாதாரத் திட்டம் ஒன்றினை அங்கீகரித்துள்ளார்.
2015ஆம் ஆண்டிற்குள் மலசலக்கூட வசதிகளற்ற மக்களுக்கு அந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை இந்தத் திட்டம் நோக்காகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் உலக வறுமையை ஒழிப்பதில் பெரும்பங்காற்றுவது மட்டுமல்ல மில்லேனிய அபிவிருத்தி இலக்கை எட்டுவதற்கும் உதவும் என பான் கி-மூன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு டச் பொறியியலாளர் பிரான்க் ரிச்ஸ்பர்மென் இனங்கியுள்ளார். பில்ரூமெலின்டா கேட்ஸ் அறநிறுவனத்தின் சுகாதாரப் பிரிவின் தலைவர் இவர் தான்.
இவர் தற்போது இரண்டு திட்டங்களில் பணியாற்றி வருகின்றார். முதலாவது திட்டம் சுகாதார வசதியற்ற கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மலசலக்கூட வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது. இரண்டாவது திட்டம் மனிதக் கழிவுகளைப் பயன்படுத்தும் வகையிலான புதிய திட்டங்களை முன் வைக்கும் விஞ்ஞானிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது.
மனிதக் கழிவுகளிலிருந்து மைக்ரோவேவ் போன்று சக்தி மூலத்தைப் பெறுவதற்கான பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் அதில் உள்ள உயிரியல் பேக்டீரியாக்களை உரமாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் சிறுநீரைக்கூட குடிக்கும் நீராக மாற்றும் சாத்தியம் உள்ளது, மனிதக் கழிவுகள் தங்கச் சுரங்கம் போன்றது என நகைச்சுவையுடன் ரிச்ஸ்பர்மென் குறிப்பிட்டார்.
உலகின் குறைவான நீர் மூலம் காரணமாக நீர் இல்லாமல் கழிவுகளை அகற்ற சாத்தியமான வழிவகைகளைக் கண்டுபிடிக்கும் திட்டத்திற்கு கேட்ஸ் அறநிறுவனமும் ஜெர்மன் அபிவிருத்திக் கொள்கையும் ஒத்துழைப்பு வழங்குகிறது.
கேட்ஸ் அறநிறுவனத்தினால் தென்னாபிரிக்காவில் 400,000 மக்களுடைய சிறுநீரைக் கொண்டு நைட்ரஜன் உரத்தைப் பவுடராகத் தயாரிக்கும் முறை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகளின் முக்கியத்துவத்தை விளக்குவது எப்பொழுதுமே கடினமானது என ரிச்ஸ்பர்மென் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பில்கேட்ஸ் ஜெர்மன் சான்சலர் அஞ்சலா மெக்கெல் மற்றும் அதிபர் கிறிஸ்டியன் வுல்ப் ஆகியோரை பெர்லினில் சந்தித்தார்.
அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்ஸ் தான் அரசியல் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் மலசலகூடம் பற்றியே கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment