Search This Blog

Tuesday, July 5, 2011

அறிவோமா ஆன்மிகம் !!! ஆன்மீகத்தை விரிக்கலாமா? பதிவு -001



அறிவோமா ஆன்மிகம் !!!
ஆன்மீகத்தை விரிக்கலாமா?


இந்த உலகில் ஒரு பன்றி தன் வாழ்னாளில் 100குட்டிகளை போட்டுவிட்டுப் போகத்துடிக்கிறது. மிகச்சிறிய கொசு கூட பல்லாயிரம் சந்ததியைப் பெருக்கி விட்டுப் போகிறது. இப்படி இயற்கையின் தூண்டுதலால் அனைத்து உயிர்களும் எப்படியோ ஒரு வகையில் சந்ததியையோ, பணத்தையோ, புகழையோ விரிவாக்கம் செய்துவிட்டு மறைகின்றன. ஆனால்ஆன்மீக உலகம் இதற்கு என்ன விடை கூறுகிறது?
ஒரு சராசரி மனிதன் தன் சந்ததியை விரிவாக்கம் செய்கிறான். நன்கு உழைப்பவன் தன் வீட்டை விரிவாக்கம் செய்கிறான். இன்னும் பொய்யை வியாபாரம் ஆக்குபவன் ஊழல் செய்தோ, லஞ்சம் பெற்றோ, வஞ்சக வழியில் பிறர் பொருளை அபகரித்தோ, தனது செல்வத்தை விரிவாக்கம் செய்கிறான். இன்னும் வாய் சமர்த்து உள்ள அறிவார்ந்த சடாமுடிகள் அல்லது மொட்டையர்கள் அறக்கட்டளை, ஆசிரமம் இப்படி விரிவாக்கம் செய்கிறார்கள். இவை ஆன்மீகம் ஆதரிக்கின்ற அறிவுடைமையா என்றால் சர்வ நிச்சயமாக இது மாபெரும் குற்றம் என்கிறது ஆன்மீகம்! ஆன்மீகம் விரிவாக்கத்தை விரும்பவில்லை.
நாமே மக்களைக் கூட்டுகின்ற விரிவாக்கப் பணியில் ஈடுபட்டாலும் மாபெரும் குற்றவாளி என்பதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தயங்கவும் மாட்டோம். அதே சமயம் எமது விரிவாக்கத்திற்காகச் சப்பைக் கட்டுப்போட்டு சமாதானம் கூறவும் மாட்டோம். யார் தவறு செய்தாலும் தவறு,தவறுதான்!
மாணிக்கவாசகர் அழகாகக் கூறுவார், ' நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே!என்று! நமது நோக்கம் அணுவிற்குள் ஓர் அணுவாகச் சுருங்கி ஆற்றலை வெளிப்படுத்துவதே தவிரப் பெருக்குவது அல்ல. தனக்குள் பயன் உள்ள குழந்தை தாய்தந்தை அருகிலேயே வாழ விரும்புகிறது. பயன் உள்ள பணக்காரன்வங்கிக் கணக்கு வைப்புத்தொகை அருகில் வாழ விரும்புகிறான். ஆதரவு இல்லாத வாழ்வைக் கண்டு பயப்படும் ஆன்மீகவாதிகள் ஆசிரம சொத்தின் அருகில் வாழத்துடிக்கிறர்கள். அனைத்தையும் உணர்ந்த சாகாக் கல்வி அறிந்த சாது, 'அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை என்று ஆன்மாவிலேயே லயமாகவாழ்வார்கள்.
போனாலும் பேறு, இருந்தாலும் பேறு. ஆனால் இந்த உடம்போடு வாழ்வது அருவருப்பே! என்று கூறிய பட்டினத்தாரின் ஆன்மீகம் எங்கே!ஆயிரக்கணக்கில் கூட்டத்தை அழைத்து அற்புதம் என்ற பெயரில் அற்பப் பணத்தைக் குவிக்கும் குருமார்களின் ஆன்மீகம் எங்கே! இந்த குருமார்கள் பட்டினத்தாரின் துறவைத் தொடப் பல லட்சம் பிறவி எடுக்க வேண்டும்.
பட்டினத்தாரைப் போலத் தினம் தினம் கையிலே பிச்சை எடுத்துச் சாப்பிடத் துணிவில்லையே! எனத் தினம் தினமும் நெஞ்சு புண்ணாகிறோம். என்றாலும் பட்டினத்தாரின் துறவு வேட்கை,வைராக்கிய முயற்சி, இறைதாகம், ஆன்மதரிசனம்இவற்றில் ஓரளவு அவரோடு ஒட்டி உறவாடுவதில் சலிக்காது முயன்று வருகிறோம்.
தனக்குள் வாழும் பயம் அகலதாம் சார்ந்து நிற்கிற உபயோகம் விலகிக் கொண்டே வரும். சாகாக்கல்வி என்பது உபயோகத்தை உதறுவது என்றே பொருள். முதலில் பெற்றோர்,அடுத்து செல்வம்அதற்கு அடுத்து அறிவார்ந்த கல்விஉணவுஉடைஉறையுள் என்கிற உபயோகம் கூட அறுக்கப்படும். இதையே அருணகிரியார், 'உரை அவிழ,உளம் அவிழஉயிர் அவிழஉளபடியை அறியும் அவர் அனுபூதி என்பார்.
மகாவீரர் என்று யாரைப் போற்றுகிறோம்உடம்பை மறைக்கும் ஆடை உபயோகத்தை கூட அகற்றியவர் என்பதால் தான் மகாவீரர் ஆனார். மக்கள் துதி பாடாவிட்டால் மண்டையைச் சைத்துவிடும் மண்ணாங்கட்டிகளை மகான் என்று மடத்தனமாக உளறும் மடையர்களின் மதிமயக்கம் என்றுதான் ஒழியப்போகிறதோ?
தனி மனிதனுக்குள் ஆத்ம சக்தி பெருகப் பெருக அவன் யாரையும் சார்ந்து துதி பாடமாட்டான். தனக்குள் தானே பிரகாசிப்பான். ஆனால்ஒவ்வொரு மனித மனமும் பயத்தோடுதான் பயணம் செய்கிறது. பயந்த மனம் எதையோ சார்ந்து பிடித்துக்கொள்கிறது. அதுபோல பயந்த குருமார்கள் பல லட்சம் பேரைத் த்ணைக்குப் பிடித்துக்கொள்கின்றனர். இந்த குருமார்களுக்கும் சீடர்கள் மனத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆட்டுக்கூட்டத்தில் முதலில் போகிற ஆடு தைரியமான ஆடு என கூற முடியாது. அது பின்னால் வரும் ஆடுகளின் பலத்தில் முதலில் நடைபோடுகிறது.இதுபோலவே குருமார்களின் தலைமைத்துவம் சீடர்களின் பலத்தால்நடக்கிறது. ஆத்ம சக்தி வீரியம் உண்டாகிவிட்டால் தனித்து வாழும் சிங்கமாகமாறிவிடுவார்கள். தனித்து வாழப் பயிலாதவர்கள்பயப்படுபவர்கள் அழுகிப்போன பிணமாவது உறுதி.

ஒரு மனிதனின் பாவ வினையை அடுத்த மனிதன்வாங்கிக்கொள்ள முடியும். ஆனால்புண்ணிய வினையை யாருக்கும் கொடுக்க முடியாது. கடவுளிடம் மட்டுமே கொடுக்க முடியும். இதற்கு உதாரணம்பாரதக் கதையில் வரும் கர்ணன். கர்ணன் புண்ணியத்தால் அவன் உயிர் பிரியாமல்தர்மதேவதை காப்பாற்றுகிறது. கடவுள் ஸ்ரீ கண்ணனே மாறுவேடத்தில் சென்று கர்ணனிடம் புண்ணியத்தைத் தானமாகப் பெற்று முத்தி அளித்தான் என்று கதை முடியும்.
எனவேபாவ வினையைக் கொடுப்பதற்குத்தான் தான தர்மம் செய்கிறார்கள். அந்தக் காலத்தில் பாவ வினையைப் பெற வேண்டும் என்பதற்காகவே வறுமையாளர்பிணியாளர்களை இறைவன் படைத்தார். இப்படிப்பட்டவர்களைத் தேடிபுண்ணியவான்கள் தங்களது பாவத்தை குறைக்கச் சென்றனர். இதனால் அந்தக்காலத்தில் ஓடி இட்ட பிட்சையும் உகந்து செய்த தர்மமும் இருந்தன. இப்போது அந்தக் கவலையே வேண்டாம். அசந்தால் அத்தனையும் அபகரித்து வாழும் பல கோடிப்பாவிகள் அரசு ஊழியராக லஞ்சம் வாங்கியும்அரசியல் தலைவராகி ஊழல் செய்தும்வாழ்கிறார்கள். பலரது பாவங்களைக் கூசாமல் ஏற்கும் பாவிகள் நிறைந்தபூமியில் கடவுளின் பெயரிலும் சித்தர்கள் பெயரிலும் கட்டணம் வாங்கும்கூட்டம் எராளம். உழைப்பு மட்டும் இருந்தால் போதும். நமது உழைப்பின்ஊதியத்தை இந்தப் பாவிகளிடம் ஒப்படைத்துவிட்டுப் பரமனை அடைந்து விடலாம்.  



மிகச்சிறந்த ஞானிகளாகப் போற்றப்படும் ரமண மகரிஷியின் தொழுநோய்,யோகிராமகிருஷ்ண பரமஹம்சரின் புற்றுநோய் மரணங்கள் மறக்கமுடியாத கசப்புணர்வைத்தருகின்றன. எமக்குத் தெரிந்த பெரிய மகான் சிவகங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மௌனம்இருந்தார். ஒரு எறும்புக்குக் கூடத் தீங்கு  செய்யாத உத்தமர். ஆனால் அவருக்கும் புற்றுநோய் வந்து அருகில் சென்று பணிவிடை செய்ய முடியாத துர்னாற்றம் எற்பட்டதால் தாமாகவே இறந்து கிடந்தார். இதுவும் தாங்க முடியாத வேதனை.

காலம் முழுக்கக் கடவுளை வேண்டிய இவருக்கே இந்த கதி என்று பாமரனும் முகம் சுழிக்கும் விகல்பம். இதற்குச் சமாதன வார்த்தையாக மக்களின் கர்மவினைப் பாவங்களை இந்த ஞானிகள் சுமந்ததால் இந்த வினையை அனுபவிக்க நேரிட்டது என்ற பதில் சற்று ஆறுதல் தந்தாலும் போதிய நியாயம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால்எங்கேயோ முரண்பாடுஎற்பட்டுவிட்டது என்பது மட்டும் புரிகிறது.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யண்டும் இடும்பை இலஎன்ற வள்ளுவரின் வாக்கு சத்தியமான உண்மை. அப்படியிருக்கஎப்படி இடும்பை வந்ததுமக்களின் பாவங்கள்தான் புற்றுநோயாக வந்தது என்பது உண்மைதான். அதேசமயம் நாம் பிறக்கும்போது ஒருஅடி நீள அழகான ஆரோக்கியமான குழந்தையாகப் பிறந்தவர்கள் இறக்கும்போது சுமார் ஐந்தரை அடி நீள அழுகிப்போன பிணமாக உடலை உலகத்தில் போட்டுவிட்டுப் போனால் அது எந்தவகையில் நியாயம்ஆரோக்கியமாகப் பிறந்துவிட்டு அழுகிப்போய்ச் சாவது மனிதப் பிறவியாகிவிட்டால் எதற்காகக் கடவுள் பக்திஎதற்காக யோக சாதனைஇந்த முரண்பாட்டைக் களைவதே சாகாக்கல்வியின் ரகசியம்.

மனிதன் இன்பமாக வாழ்வதற்குத் திட்டமிட்ட மார்க்கங்கள் அனைத்தும் அழுகிப்போன உடலை உலகில் போட்டுச்செல்வது வாடிக்கை. அந்த நிக்ழ்வுக்கு சமாதானம் கூற இவருக்கு மறுபிறவி இல்லை என்றும் ....விதவிதமான சரடுகளைப் புனைந்து விதைப்பர். ஆனால்சித்தர்கள் மார்க்கம்அழுகிப்போன பிணம் ஆவதை ஏற்பதில்லை. திருமூலர் கூறுவார்.....

'காக்கை கவரில் ஏன்கண்டார் பழிக்கில் ஏன்?கூத்தன் புறப்பட்டுப் போன கூட்டிற்கே!என்று சாகாக் கல்வி உணர்த்தும் பாடம் மிக அற்புதமானது.
சாகாக்கால் மூலம் காற்றை உணவாக்கத் தெரிந்தும்வேகாத்தலை மூலம் நெருப்பை உணவாக்கத் தெரிந்தும்போகாப்புனல் மூலம் ஆகாய சக்தியை உணவாக்கத் தெரிந்தும் உள்ள யோகியால் மட்டுமே மரணத்தைத் தடுக்க முடியும்.அதாவது ஐந்து பூதத்தில் நிலமும் நீரும் அன்னமும் தண்ணீரும் ஆகிய இந்த உணவையே நம்பி வாழும் உயிர்கள் உடம்பை பெரிதக்க முடியுமே தவிரசுருக்க முடியாது. ஒரு மனிதன் நூறு கிலோ எடையைக் கூட்டுவதற்கு எந்தப் பயிற்சியோ,அறிவோ தேவை இல்லை. கண்டதை எல்லாம் சாப்பிட்டு செரிமானம் செய்யும் சக்தி மட்டும் தெரிந்தால் போதும்நூறு கிலோவை எட்டி விடலாம்.
ஆனால், 100 கிலோ மனிதன் 20 கிலோவாகக் குறைக்க சாகாக்கல்வி நுட்பம் தெரிந்தால் மட்டுமே முடியும். இந்த வகையில்தான் சாகாக்கல்வி நுட்பம் தெரியாமல் கடவுள் பக்திஞானம்இவற்றின் வழியே ஞானியாகத் தேறி விடுகிறர்கள். ஆனால்நோய் வரும்போது உடலைக் காப்பற்ற வழி தெரியாமல் பல ஞானிகள் மார்டைப்பு நோயாலும்சில ஞானிகள் புற்று நோயாலும் சாகின்றனர்.
காற்றுசூரிய ஒளிமூலக்கனல் இதில் வாழத்தெரிந்த உடம்புக்கு மட்டுமே பெருத்த தேகம் சுருங்கி வர இயலும். இப்படிப் ப்லயோக சாதனையாளர்கள் பிறந்த குழந்தையைப் போல ஒருஅடி உயரம் வரை தேய்ந்து வாழ்வார்கள். இன்றும் வாழ்கிறர்கள். இப்படிப்பட்ட யோகிகள் மூன்றடி உயரமாகத் தேயத் தொடங்கியதும் மனிதர் கண்களுக்குஅகப்படாமல் மலைகளில் ஒதுங்கி விடுவார்கள். ஒரு சாண் நீள யோகியை மனிதர் கண்களால் பார்க்க இயலாது. இது எல்லோருக்கும் சாத்தியமாகாது. அப்போது தனது மூலக்கனல் சாதனையால் பெரிய ஜோதியை உண்டாக்கி பிடி சாம்பல்கூட மிஞ்சாமல் மறைந்து விடுவார்கள். இப்படித்தான் மாணிக்கவாசகர்ஞானசம்பந்தர்திருமூலர் போன்ற எண்ணற்ற மகான்கள் மறைந்தார்கள்.

வளரத் தெரிந்த மனிதனுக்கு தேயத் தெரியவில்லை. வாழத் தெரிந்த மனிதனுக்கு மறையத் தெரியவில்லை. விரியத் தெரிந்தவனுக்கு சுருங்கத் தெரியவில்லை. சுருங்கத் தெரிந்தவனுக்கு சாவு இல்லை. சுருங்கச் சொன்னால் இதைவிட எளிய விளக்கம் எதுவும் இல்லை.
பாவத்தைக் கட்டி பண மூட்டையாய்ச் சுமக்கும் மடையர்களே! மடத்தனம்மடத்தின் தனம்உம்மை மட நாயாகப் பிறந்து காவல் காக்க வைக்கும். விரிந்தது போதும் அறிவே! குறுக முயற்சி செய். உனது தேவைகளைஉணவுகளைதூக்கங்களை,உறவினர்களைஅறிவுகளை குறுக்கிக் கொள். பிறகுசாகாக்கல்வி மூலம் காற்றை உணவாக்கிப் பழகிக் கொள்ளலாம்.

அழுகிப்போன உடலை அடக்கம் செய்ய ஆறடி நிலம் தேவையாஅந்த ஆறடி நிலத்தை சுற்றி வழிபாடு செய்யும் அறிவு கெட்ட கூட்டம் தேவையாபுதைத்த மேடைக்குபூக்கள் அலங்காரம் செய்துவிட்டால் புனிதர் ஆகிவிட முடியுமாஉயிருடன் இருந்தபோது ஏய்த்துப் பிழைத்தவர் செத்த பின்னரும் சவக்குழிக்குச் சடங்கு செய்யத் தூண்டிவிடுவதா குருபக்தி? என்னயா உலகம்! கசாப்புக் கடையில் நிறுத்தப்பட்ட அடி மாட்டுக்கு நேர்ந்த கதிபோல் உங்களது குருமார்களும் அடிமாட்டு மரணம் அடைந்த பிறகு புதைகுழியை வக்கணையாகச் சுற்றி வழிபாடு செய்கிற கூட்டம்திக்கற்ற பறவைக் கூட்டம்தானே!
சாகாக்கல்வியை அறிந்தால் மரணம் அடைந்த குருவையோ அவர் கூறிய தத்துவங்களையோ வணங்க மாட்டீர்கள். வனங்கவும் முடியாது. நமக்கு குரு இறைவனே! தனக்கு உவமை இல்லாதான்வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்மலர்மிசை ஆகியவன். அவனே குரு. அவன் உணர்த்தும் பாடமே சாகாக்கல்வி. இப்படித்தான் நாம் உய்வு அடைந்தோம். சந்தேகம் இருந்தால் காற்றைப் பிடித்துக் கட்டிக் காட்டுவோம். கடும் குளிரிலும் கனலைப் பிடித்து வியர்க்க வைப்போம். சாகாக்கல்வியின் நிதர்சன உன்மையை அனுபவப்பூர்வமாக உணர்த்த முடியும். என்றாலும் உமது சந்தேகம் தெளிய வைக்க மட்டுமே எம்மால் முடியும்.மற்ற சாதனைகளை மகேசன் மீது உள்ள விசுவாசம்அன்புஇறைதாகம் இவற்றால் பெற முடியும். 
உங்களுக்கு வேகமும் வைராக்கியமும் மட்டுமே மூலதனமாக இருக்க வேண்டும். உங்களை இறைவன் தேடுகிறான். உங்களால் உங்களுக்குள் ஞான ஒளி பரவட்டுமாக! சிவலயம் பெறுவோம்! சிவத்தை அடைவோம்! சிவமயம் ஆவோம்!

No comments:

Post a Comment