Search This Blog

Tuesday, June 21, 2011

தளபதியின் கலைப்பொருள்


 
தளபதியின் கலைப்பொருள்
Join Only-for-tamil
 
தளபதி ஒருவர் தன் வீட்டில் தான் சேகரித்து வைத்திருந்த விலை மதிப்பற்ற பண்டைய கலைப்பொருட்கள் சிலவற்றை ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
 
கலை நுணுக்கம் நிறைந்த ஒரு கோப்பையை அவர் எடுத்தபோது அது கைநழுவிக் கீழே விழுந்தது.
 
பதறிப்போன தளபதி கோப்பை தரையில் விழுந்து நொறுங்குவதற்குள் சட்டெனக் குனிந்து அதைப் பிடித்தார்.
 
மனம் படபடக்க, "நல்லவேளை! பிடிக்கவில்லையென்றால் கோப்பை நொறுங்கியிருக்கும்" என தனக்குள் நினைத்துக் கொண்டார். ஆனால் அடுத்தகணமே அவர் மனதில் கடந்தகால போர்க்களக் காட்சிகள் நிழலாட...
"யுத்தத்தில் ஆயிரக்கணக்கான வீரர்களை தலைமையேற்று நடத்திச் சென்றிருக்கிறேன். ஆனால் சாவைக் கண்டபோதும் நான் அஞ்சியதில்லை. இந்த ஒரு சிறு கோப்பைக்காக இன்று ஏன் இவ்வளவு பயந்தேன்?" என அவர் மனம் வியந்து கேட்டது.
 
கடைசியில் விருப்பம், வெறுப்பு என தன் மனதில் தான் ஏற்படுத்திக்கொண்ட பாகுபாடே தன்னை பயப்படவைத்தது என்பதை தளபதி உணர்ந்தார். இந்த உணர்வு வந்ததுமே அவர் அந்த கோப்பையைத் தூக்கி வீச அது சுக்குசுக்காய் நொறுங்கியது.
 
 
லாப நஷ்டக் கணக்குப் பார்ப்பதுதான் நம்மை மகிழ்ச்சிக்கும் துயரத்துக்கும் இட்டுச் செல்கிறது.
லாபம் நஷ்டம், நன்மை தீமை என்ற கருத்தாக்கங்களை நாம் கடந்து செல்லவேண்டும். மகிழ்ச்சி என்பது நமது சூழலைப் பொறுத்துத்தான்,அது எப்படி இருந்தாலும்.   
 

No comments:

Post a Comment