Search This Blog

Tuesday, June 14, 2011

தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு

தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு

பொதுவாக எறும்புகள் உள்ளிட்ட சில பூச்சி வகைகள் தண்ணீருக்குள் விழுந்தால் சில நிமிடங்கள் வரை தாக்குப்பிடிக்கும். பின் சுவாசத்திற்குப் போதுமான காற்றுக் கிடைக்காமல் இறந்து விடும்.
ஆனால் சில வகை சிலந்திகள் தண்ணீருக்கடியில் ஒருநாள் வரை தாக்குப்பிடிக்கும் என்பதை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஜேர்மனியின் ஹம்போல்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான செய்மூர் மற்றும் ஸ்டீபன் ஹெட்ஸ் இருவரும் நீருக்கடியில் 30 மீ ஆழத்தில் கூட சுவாசிக்கும் சிலந்திகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சில வகைச் சிலந்திகள் தண்ணீருக்கடியில் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் வாழ்வதைக் கண்ட அவர்கள் சில சிலந்திகளை குளங்களில் இருந்து தங்கள் ஆய்வகத்துக்கு எடுத்து வந்தனர்.
அங்குள்ள பெரிய பெரிய தொட்டிகளில் அவற்றை விட்டனர். இவை சிறிது நேரத்தில் தொட்டியின் சுவருக்கும் தொட்டியில் உள்ள செடிகளுக்கும் இடையில் வலைகளைப் பின்னின.
சிலந்திகளின் பின்னங்கால்களுக்கும், அடிவயிற்றுக்கும் இடையில் சில முடிகள் உள்ளன. இந்த முடிகளின் மீது மெழுகுப் பூச்சுப் போல ஒருவகை திரவம் படிந்துள்ளது. இந்த முடிகளின் முனைகளில் நுண்மையான துளைகள் உள்ளன. துளைகளுக்குள் நீர் புகாமல் மெழுகுப் பூச்சுத் தடுத்து விடுகிறது. இந்தத் துளைகள் மூலம் சிலந்தி நீருக்குள் காற்றுக் குமிழிகளை உருவாக்குகிறது.
இந்தக் குமிழியில் நைதரசன் மற்றும் ஒக்சிசன் வாயுக்கள் உள்ளன. இவற்றில் ஒக்சிசனை மட்டும் சிலந்தி எடுத்துக் கொள்ளும். ஒரு குமிழி உடைந்தபின் மறு குமிழியை விரைவில் உருவாக்கி அதற்குள் உட்கார்ந்து கொள்ளும். இப்படி ஒரு நாள் வரை தாக்குப் பிடிக்கும்.

No comments:

Post a Comment