Search This Blog

Friday, June 17, 2011

இந்திய சீனப்போரை நிறுத்திய மகரிஷி மகேஷ்யோகி.

இந்திய சீனப்போரை நிறுத்திய மகரிஷி மகேஷ்யோகி.

இந்திய சீனப்போரை நிறுத்திய மகரிஷி மகேஷ்யோகி

1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது.சீனப்படையினர் இந்திய வீரர்களையும்,ஆயுதங்களையும் கைப்பற்றி முன்னேறிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் இங்கிலாந்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.அங்குள்ள மக்களிடம், “போரின் காரணமாக என் நாடு சண்டையில் ஈடுபட்டுள்ளது.உடனடியாக நான் இந்தியா போக வேண்டும்” என்று சொல்ல,அங்குள்ள மக்கள் மகரிஷியிடம்,

“உங்கள் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும்” என்று கேட்டனர்.உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டேப் ரெக்கார்டரை எடுத்து வருமாறு பணித்தார். Science of being and art of Living என்ற தலைப்பின் கீழ் ஆன்மீக சொற்பொழிவாற்றி அவர்களுக்கு அளித்தார். பின்னர் அச்சொற்பொழிவைப் புத்தக வடிவில் Penguin என்ற நிறுவனத்தினர் வெளியிட்டனர்.அது அவர்களுக்குக் கோடிக்கணக்கில் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது.

இந்தியா வந்த மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,இந்திய ஜனாதிபதியைச் சந்தித்து,
“இப்போரை என்னால் தடுத்து நிறுத்த முடியும்.ஆனால்,நான் சொல்கிறபடி சில செயல்களை போர் நடக்கும் இடத்தில் செய்ய உங்களால் முடியுமா?” எனக் கேட்டார்.

அதற்கு இந்திய ஜனாதிபதி, “முடியாது.எங்கள் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு கூறுவார்கள்.ஆகவே,அரசு சம்பந்தப்படாமல் தாங்களே தனியாக எதுவும் செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என தனது இயலாமையை வெளியிட்டார்.
உடனே,மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,தனது செயலாளர் தேவேந்திராவுடன் போர் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்றார். சென்று, “இந்தப் போர் நடப்பதற்கு சீனாவில் உள்ள ஒரு மனித மூளையே காரணம். அவர் மனதை மாற்றிவிட்டால் போதும். அதை தியானம் செய்து மாற்றப் போகிறேன். நான் வெளியில் வரும்வரை காவலாக இரு. யாரையும் உள்ளே விடாதே” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்.

பின், 24 மணி நேரம் கழித்து வெளியே வந்த மகரிஷி மகேஷ்யோகி பக்கத்திருந்த ஊருக்குச் சென்று தினசரிப் பத்திரிகை வாங்கி வா என்று அனுப்பி வைத்தார். பத்திரிகை வங்கிப்படித்த மகரிஷியின் செயலாளருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆம்,சீனா சண்டையை நிறுத்தி விட்டது. தன் படைகளை இந்தியாவின் எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டது.

 இதைப் படித்ததும் அவரால் நம்ப முடியவில்லை; ‘இப்படியும் நடக்குமா?’ என்று ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார்.

நன்றி:மகரிஷியின் ஆழ்நிலை தியானம்,பக்கம்71,72.வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,சென்னை 4.விலை:ரூ.80/-

No comments:

Post a Comment