Search This Blog

Thursday, June 16, 2011

அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்வதால் இதய நோய்கள் ஏற்படும்: ஆய்வில் தகவல்

அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்வதால் இதய நோய்கள் ஏற்படும்: ஆய்வில் தகவல்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதால் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளில் கூடுதல் 2 மணி நேரம் தொலைக்காட்சி முன்பாக உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்திருக்கும் நபர்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும், 15 சதவீதம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த புதிய ஆய்வு விபரம் ஐமா என்ற இதழில் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்தால் டைப்-2 எனப்படும் நீரிழிவு நோயை குறிப்பிடத்தக்க அளவு தவிர்க்க முடியும். அதே போன்று இதய நோய்கள், முன்கூட்டிய மரணம் போன்றவற்றையும் தவிர்க்க முடியும்.
தொலைக்காட்சி பார்க்கும் போது அசையாமல் இருப்பதை போல கணணி நிகழ்வுகளில் பல மணி நேரம் ஈடுபடும் போதும் இதே நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் நோய் நிலையை உறுதி செய்ய 8 பெரும் ஆய்வுகள் 1 லட்சத்து 75 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டன.
2 மணி நேரத்திற்கு மேல் தினமும் தொலைக்காட்சியைப் பார்ப்பதால் நீரிழிவு நோய், இதய நோய் பிரச்சனைகள் வருகின்றன. 3 மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சியை தினமும் உட்கார்ந்து பார்ப்பவர்களுக்கு முன்கூட்டியே மரணம் நிகழலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
உடல் உழைப்பு இல்லாததால் பிரச்சினைகள் மோசமாக இருக்கும் என நீரிழிவு நோய் ஆய்வாளரான பிரிட்டனின் டொக்டர் லெய்ம் பிரேம் கூறினார். தொலைக்காட்சியைப் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொது சுகாதாரத்திற்கான கர்வர்டு பள்ளியின் பேராசிரியர் பிராங்ஷீ கூறினார்.
தொலைக்காட்சியை பல மணி நேரம் பார்ப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது. ஆய்வாளர்கள் கருத்துப்படி ஐரோப்பிய நாடுகளில் வாழும் நபர்கள் தினமும் 3 மணி நேரம் தொலைக்காட்சியை பார்க்கிறார்கள். தொலைக்காட்சி முன்பாக அதிக நேரம் அமரும் நபர்கள் வரிசையில் அமெரிக்கர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். அவர்கன் தினமும் 5 மணி நேரம் வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment