Search This Blog

Tuesday, June 21, 2011

முதல் முறையாக தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சூகி

முதல் முறையாக தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சூகி

பல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக தனது பிறந்த நாளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சுதந்திரமாக கொண்டாடினார் ஆங்சான் சூகி.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், மியான்மர் அரசியல் தலைவருமான ஆங்சாங் சூகி 1945ம் ஆண்டு ஜூன் 19ல் பிறந்தார்.
இவர் மியான்மரில் 1962க்குப்பின் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வந்தார். இவரின் போராட்டத்துக்கு மக்களிடையே ஆதரவு அதிகரிப்பதை உணர்ந்த ராணுவ அதிகாரிகள் சூகியை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.
இடையில் விடுதலை செய்யப்பட்ட சூகியை மீண்டும் 2003ல் வீட்டுக் காவலில் வைத்தது ராணுவம். இதையடுத்து கடந்த ஆண்டு பெயரளவில் அங்கு நடந்த தேர்தலுக்குப்பின் சூகி விடுதலை செய்யப்பட்டார்.
பல ஆண்டுகளாக வீட்டு சிறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதால் பிறந்த நாளை கூட கொண்டாட முடியாமல் இருந்தார். இந்நிலையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேற்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடினார் சூகி. மேலும் லண்டனில் வசிக்கும் சூகியின் இளைய மகன் கிம் அரிஸ் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment