Search This Blog

Wednesday, May 4, 2011

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை


தாவரங்களுக்கும் நுண்ணறிவு உண்டு என்று பல ஆய்வுகள் மூலம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.அமெரிக்காவில் கிளி பாக்ஸ்டர் என்பவர் தற்செயலாக தாவரங்களின் மர்மங்களை அறிந்து கொள்ள நேரிட்டது. ஒருசமயம் அவர் காவல் துறையினருக்கும், பாதுகாப்புப் பணிபுரிபவர்களுக்கும் பொய்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் குறித்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு விந்தை நிகழ்வை அவர் கண்டார். பொய்யைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் "பாலி கிராப்" என்னும் கருவி இணைக்கப்பட்ட தாவரத்தைப் பற்றி பாக்ஸ்டர் எண்ணியபோதெல்லாம் அந்தக் கருவியில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. அவருடைய எண்ணங்களை தாவரம் பெற்றுக் கொண்டு தனது உணர்ச்சிகளைக் கருவிக்கு அனுப்பியிருக்கிறது.
அவருடைய எண்ணங்களைத் தாவரம் நன்கு புரிந்து கொண்டு கருவி மூலமே சரியான முறையில் விளக்கமும் அளிக்க ஆரம்பித்தது. தாவரத்தின் உணர்ச்சியை அறிவதற்கு பாக்ஸ்டர் மற்றொரு சோதனையை நடத்தினார். அந்தத் தாவரத்தைக் கொளுத்தி விடலாம் என்று அவர் நினைத்த போதெல்லாம் கருவியில் உள்ள ஊசி நடுங்க ஆரம்பித்தது.
தாவரம் தனது பயத்தைத் தெரிவிப்பது போலத் தெரியும் அதன் உணர்ச்சியைக் கருவியின் ஊசியிலே காண முடிந்தது. ஆகவே எண்ணங்களைக் கண்டுபிடிக்கும் திறன் தாவரத்திடம் அமைந்திருந்ததை பாக்ஸ்டர் கண்டுபிடித்தார்.

No comments:

Post a Comment