Search This Blog

Wednesday, May 4, 2011

ஏனைய செய்தி ஒசாமா கொல்லப்பட்டதை நேரடியாக பார்த்த ஒபாமா


[ செவ்வாய்க்கிழமை, 03 மே 2011, 05:12.05 பி.ப GMT ] அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தவாரு நேரடியாகப் பார்வையிட்டுள்ளார்.இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பங்கேற்ற அமெரிக்க கடற்படை அதிரடி வீரர் ஒருவரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெரா ஒன்றின் மூலம் இந்தக் காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. முதலில் பின்லேடனின் தலையில் சுடப்பட்டுள்ளது.
அதுவே அவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டது. இருந்தாலும் அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் அவரின் மார்பிலும் சுடப்பட்டுள்ளது.
தலைக்கவசத்தில் கமெரா பொருத்தப்பட்ட படை வீரரே இரண்டாவது தடவையாக பின்லேடனைச் சுட்டுள்ளார். எனவே பின்லேடன் சுடப்படுவதை ஒபாமா நேரடியாகக் காணக் கூடியதாகவும் இருந்தது.
செய்மதி வழியாகவே இந்தக் காட்சிகள் வெள்ளை மாளிகைக்கு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன. பின்லேடனை பாதுகாக்க அவரின் மனைவியருள் ஒருவர் மனிதக் கேடயமாகச் செயற்பட்டுள்ள போதிலும் அது முடியவில்லை.
அவரும் அமெரிக்கப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இந்தப் பெண் தவிர லேடனின் மகன் ஒருவர் உட்பட மூவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோய் பிடன், வெளியுறவுச் செயலாளர் ஹிலரி கிளின்டன் உட்பட முக்கியப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தக் காட்சிகளை வெள்ளை மாளிகையில் இருந்தவாரு நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
முதல் தரப் பயங்கரவாதத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதன் மூலம் உலகம் பாதுகாப்பான ஒரு இடமாக மாறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும் பயங்கரவாதத்தின் ஒரு அத்தியாயம் மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாகவும், தமது தலைவர் கொல்லப்பட்டமைக்காக நிச்சயம் பயங்கரவாதிகள் பழிவாங்கக் கூடும் என்றும் அமெரிக்கப் புலனாய்வுப் பணிப்பாளர் உட்பட இராணுவ ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் பின்லேடன் என்பதை அவரின் பல மனைவியருள் ஒருவரும் ஊர்ஜிதம் செய்துள்ளார்.

No comments:

Post a Comment