Search This Blog

Friday, May 20, 2011

இருதய மாற்று அறுவை சிகிச்சைகளின் போது பயன்படுத்தபடும் தேள் கொடுக்குகள்

தேள் கொடுக்களை இருதய மாற்று அறுவை சிகிச்சைகளின் போது பயன்படுத்த முடியும். தேள் கொடுக்ககளிலிருந்து பெறப்படும் பதார்த்தங்களை இருதய மாற்று அறுவை சிகிச்சைகளின் போது பயன்படுத்த முடியும் என ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.



இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் தோல்வியடையாமல் இருப்பதற்காக தேளின் கொடுக்குகளில் இருந்து பெறப்படும் ஒரு பொருளை மருத்துவர்கள் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய அமெரிக்க காடுகளில் உள்ள தேள் வகையொன்றின் தொடுக்கிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பதார்த்தம் இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகளின் போது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.



இருதய மாற்று அறுவை சிகிச்சைகளின் போது இரத்த கலன்கள் மற்றும் திசுக்களில் ஏற்படும் இழப்பு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும், குறித்த தேள் வகையிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் பதார்த்தம் இதற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



மத்திய அமெரிக்க காடுகளில் காணப்படும் இந்த தேள் வகைகள் 5 முதல் 8 சென்றி மீற்றர் வரையில் வளரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் குறித்த வகைத் தேளின் விசம் உயிர் ஆபத்தை ஏற்படுத்தாத போதிலும், ஆபத்தானதெனக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த வகை தேள் கொட்டினால் உடல் வீங்குவதுடன் வலி ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment