Search This Blog

Tuesday, May 3, 2011

திரையிசைப் பாடலில் இலக்கணம்.

திரையிசைப் பாடலில் இலக்கணம்.

திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம். தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...
  • அடுக்குத்தொடர்:  ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.
  • இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.
  • சினைப்பெயர்:  பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.
  • பொருட்பெயர்: கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல
  • இடப்பெயர்: வீடு வரை உறவு வீதி வரை மனைவி!
  • காலப்பெயர்: வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!
  • குணம் அல்லது பண்புப்பெயர்: அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!
  • தொழில் பெயர்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!
  • இறந்த காலப் பெயரெச்சம்: வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!
  • எதிர்காலப் பெயரெச்சம்: ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?
  • இடவாகுபெயர்: உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
  • எதிர்மறைப் பெயரெச்சம்: துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
  • குறிப்புப் பெயரெச்சம்: அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!
  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.
  • வன்றொடர்க் குற்றியலுகரம்: முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!
  • நெடிற்றொடர்க் குற்றியலுகரம்: நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
  • உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்: ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
  • இரண்டாம் வேற்றுமை உருபு: நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.
  • மூன்றாம் வேற்றுமை உருபு: உன்னால் முடியும் தம்பி! தம்பி!!
  • பெயர்ப் பயனிலை: காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்.
-முனைவர் மா. தியாகராஜன், சிங்கப்பூர்.

No comments:

Post a Comment