Search This Blog

Thursday, May 26, 2011

சிறுநீரக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் வெளிநாடு போகிறார்



 search
சிறுநீரக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் வெளிநாடு போகிறார்,சிறுநீரக சிகிச்சைக்காக, ரஜினிகாந்த் வெளிநாடு போகிறார். லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் ஒரு நாட்டுக்கு அவர் செல்வார் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 13-ந் தேதி ரஜினிகாந்த், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுக்குழாய் தொற்று மற்றும் குடல் நோய், சிறுநீரக கோளாறு ஆகியவை இருந்ததை டாக்டர்கள் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். அதற்காக, முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

கடந்த 18-ந் தேதி நள்ளிரவில், அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு `டயாலிசிஸ்' செய்யப்பட்டது.

ரஜினிகாந்துக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் உப்பு சத்து, பொட்டாசிய சத்து, கிரியாட்டினின் அளவுகள் அதிகமாக இருந்தன. இதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை தீர்மானிக்கும் `எரித்ரோபாய்ட்டின்' ஹார்மோன் உற்பத்தியில் பிரச்சினை ஏற்பட்டது.

சிறுநீரக செயல்பாடு பாதிப்பு காரணமாகவே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின், அவருடைய உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் வார்டுக்கு மாற்றப்பட்டார்.

சிறுநீரக பாதிப்பு காரணமாக ரஜினிகாந்துக்கு உப்பு, புரத சத்து குறைவான உணவு கொடுக்கப்படுகிறது. குளிர்பானம், பாதாம் பிஸ்தா, முந்திரி, கீரை ஆகியவைகளை சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அவருக்கு கொடுக்கப்படும் குடிநீரின் அளவுக்கும் கட்டுப்பாடு உள்ளது.

சிறுநீரக பாதிப்புக்கு மேலும் விரைவான சிகிச்சை பெறுவதற்காக ரஜினிகாந்த் லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்கிறார். அவர் எப்போது வெளிநாடு போகிறார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment