Search This Blog

Monday, May 16, 2011

கனவை அறிவோமா ? படித்தது

1)  சிலர் கனவை கறுப்புவெள்ளையில் மாத்திரமே காணமுடியும் தெரியுமா ?
அவர்கள்   கனவு காண்பதில் மட்டும்  வண்ணக் குருடு உள்ளவர்கள் 
சுமார் 12 % மக்கள் காணும்   கனவில்  வண்ணக்  குருடு  உள்ளவர்களாம் .
ஆனால் 1915 ---1950  வரை பெரும்பாலானவர்கள் கருப்பு வெள்ளையில் தான் கனவு கண்டனராம் .
அப்போது கலர் டீ வீ , மற்றும் கலர் படங்கள் இல்லாது தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறார்கள் .
வெளிப்புற நகழ்வுகள் எப்படி நம் கனவைப் பாதிக்கிறது பார்த்தீர்களா ?

நான் பெரும்பாலும்  படுத்துக்கொண்டே படித்துக் கொண்டு அப்படியே சிறிது நேரம் தூங்குவேன் ,
பிறகு மீண்டும் படிப்பேன் அப்போதெல்லாம் மூக்குக் கண்ணாடியை கழற்றாமலே
தூங்குவதைப் பார்த்து என்மனைவி வினவும்( அதட்டும்  )  போதெல்லாம் ,கண்ணாடி  இல்லாமல் காணும் கனவெல்லாம்
தெளிவாகத் தெரிய மாடேன் என்கிறது என்று நகைச்சுவை
அடிப்பதுண்டு .ஆனால் அதிலும் ஒரு உண்மை இருக்கிறது

2)  நாம் காணும் கனவில் வரும் நபர்கள் எல்லாம் நிஜ மனிதர்களாம் .என்றோ நாம் நேரில்  கண்டவர்களைத்தான் நமது கனவிலும் வரமுடியுமாம் .
நமது மூளைக்கு புதியமுகங்களைக் கனவுக்காக உருவாக்க முடியாதாம் .
எனவே பார்க்கும் நபர்கள் உங்கள் நண்பர்களோ அல்லாது அறிமுகம் இல்லாதவர்களோ இருக்கலாம் .
சிலரை நேற்று பார்த்திருக்கலாம் சிலரை பத்தாண்டுக்கு முன் கூடப் பார்த்திருக்கலாம் .
ஆனால் அவர்கள் கலவையாக ஒன்றாக வருவார்கள் .ஆனால் அனைவரும் நிஜ முகமே .

3) நாம் காணும் கனவில் பெரும்பாலானவை நமக்கு நினைவில் இருப்பதில்லை .
சுமார் 95 %  கனவுகள் நமக்கு மறந்து போகின்றன . நாம் கனவு காணும் போது நமது மூலையில் நினைவுகளை நீண்டகால நினைவுகளாக மாற்றக்கூடிய ரசாயனம் சுரப்பதில்லை . குறுகியகால நினைவு மட்டுமே சாத்தியம் .ஆனாலும் சிலகனவுகள்  தப்பிப  பிழைத்து விடுகின்றன . ஆனாலும் அவை பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை . அதை சேமிக்க ஒரே வழி ,விழித்த உடனேயே எதிலாவது எழுதி வைத்து விடுவதுதான் .

4) ஆண்கள் காணும் கனவுகளில் பெரும்பாலும் ஆண்களே அதிகம் வருவார்களாம்
அவர்களின்  கனவுகளில்   70 %     ஆண்களே இடம் பெறுகிறார்களாம் .பெண்களின் கனவுகளில் சரிசமமாக ஆண்களும் பெண்களும் இடம் பெறுகிறார்களாம் .இவ்வாறு சொல்லப்படுகிறது. மெய்யான்னு  சொன்னாத்தான் தெரியும்


5) கனவு காண தூக்கம் அவசியமா என்றால் இல்லை .
நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை.
நம்மை மறந்து ஓய்வு நிலையில்  சிறிதளவு விழிப்புடன் இருக்கும்போதுகூட
ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.  கனவு என்று கூறுவதா காட்சி என்று கூறுவதா ?

6) தூங்கும் போது இரண்டு மணி நேரமாவது அயர்ந்து தூங்கும் போது கனவு காண்கிறோம் .
அதில் நாலு முதல் ஏழு கனவுகள் நிச்சயம் உண்டு ஆனால் மூலையில் நினைவுக்கு வேண்டிய ரசாயனம் சுரக்காததால் நாம்   கலப்படமாக குழப்பமாக நினைவு கூறுகிறோம் .

7) கனவில் காட்சிகள் மாத்திரம் நடப்பதில்லை கூடவே உணர்ச்சிகளும் கலந்தே நிகழ்கின்றன
காட்சிகளுடன் உணர்வும் சேர்வதால் ஒரு த்ரீ டீ படம் பார்த்தது போல் மனம்
தடுமாறுகிறது .

8) சங்கக் காலத்தில் இருந்து பாடல்களில் கனவு பற்றி குறிப்பு இருக்கிறது அதை பற்றி தமிழர்கள்  நுணுக்கி ஆய்ந்திருக்கிறார்கள் .

ஒன்று மட்டும் நிச்சயம் நான் காணும் அத்தனை கனவுகளிலும் நாம் தான் கதாநாயகன்
நம்மைப்பற்றியே ,நம்மை சுற்றியே  அத்தனையும்.

கனவுகளுடன்
ஜெ. ஸ்டாலின்

No comments:

Post a Comment