Search This Blog

Friday, May 27, 2011

ரசித்ததும் புசித்ததும்

" இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா ?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா ? "

மனநல மருத்துவர் ஒருவர் தனது நண்பரைப் பார்ப்பதற்கு அவருடைய வீட்டிற்குப் போகிறார். அங்கு அவரது தாயைச் சந்திக்கிறார். குசலம் விசாரிக்கிறார். 
" என்னம்மா, சௌக்கியமா இருக்கீங்களா ? மூத்த பொண்ணு வீட்டுக்குப் போயிட்டு வந்தீங்களாமே ? மக சவுக்கியமா இருக்காங்களா ? மருமகன் எப்படி இருக்காரு ? " 

" எம் மக ரொம்ப சந்தோஷமா இருக்கா தம்பி. மருமகனுக்குத் தங்கமான குணம். எம் பொண்ணு துணி துவைச்சா அவரு கொடியில காயப் போடுறாரு. சாயங்காலம் இவ காஞ்ச துணிய எடுத்தா அவரு சுத்தமா மடிச்சு அலமாரில வெச்சுடறாரு. இவ பாத்திரம் தேச்ச உடனேயே அவரு துணியால துடைச்சு வெக்கிராறு. ஞாயித்துக் கிழமை சமையல்ல பாதி அவருதான்....என் மகா ரொம்ப கொடுத்து வச்சவ, தம்பி "

ஆறு மாதம் கழிகிறது. அந்த மருத்துவர் அதே நண்பர் வீட்டிற்குப் போகிறார். அந்தத் தாயிடம் உரையாடுகிறார். 

" என்னமா... என்னிக்கு ஊரிலேந்து வந்தீங்க ?... ரெண்டாவது மகன் வீட்டுக்குப் போனதா இவன் சொன்னானே. மகன் மருமகள் எல்லோரும் சவுக்கியமா ? "

" என்னத்த சொல்லுவேன் தம்பி...மருமக துணி துவைச்ச உடனேயே கொடியில காயப் போட இவன் பக்கத்துலேயே பம்மிகிட்டு நிக்கிறான். அவ காஞ்ச துணிய எடுகறப்ப ஓடிப் போயி வாங்கி மடிச்சு அலமாரில வெக்கிறான். அவ பாத்திரம் தேச்சா இந்தப் பாவி "ஈ"ன்னு இளிச்சுகிட்டு அதைத் தொடச்சி வெக்கிறான். ஞாயித்துக் கிழமை ஆனா போதும்... கரண்டிய இவன் புடிச்சுகிட்டு " நீ நகரும்மா நா சமைக்கிறேன்" ன்னு கொஞ்சறான்... என்ன சொக்குப் பொடி போட்டாளோ தெரியலையே " 

இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியும் போலிருக்கிறதே !!!!
thanks to  Vetri Vidiyal Srinivasan

No comments:

Post a Comment