Search This Blog

Thursday, May 19, 2011

மௌனத்திற்கு காரணம் மரபணுக்களே: விஞ்ஞானிகள் தகவல்

ஆராய்சி செய்தி
மௌனத்திற்கு காரணம் மரபணுக்களே: விஞ்ஞானிகள் தகவல்

சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்னவென ஜப்பானிய மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆய்வார்கள் ஆராய்ந்துள்ளனர்.நபர் ஒருவரின் அமைதிக்கான காரணம் மரபணுக்களே என ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் சில குறிப்பிட்ட மரபணுக்கள் மட்டுமே அமைதியாக உள்ளன என்றும், ஏனையவை அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கான காரணம் குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பியானோவில் விசைக்கற்றைகள் அமைந்திருப்பது போல் DNA அனைத்து செல்களும் உற்பத்தி செய்யும் புரதங்களின் செயற்திட்டப் பிரிவாக செயற்படுகிறது. இது ஒரு பியானோ கலைஞர் இசையை வாசிப்பதுடன் ஒத்திருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் மரபணுக்களின் அமைதித் தன்மைக்கான முழுக் காரணங்களையும் கண்டறிவது மிகவும் கடினமானது என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிம்பொனியினை நாம் கேட்க மட்டுமே முடியும். ஆனால் நாம் எல்லா பாகங்களும் எவ்வாறு செயற்பட்டு இசையைக் கொடுக்கிறது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு தான் சில மரபணுக்களின் செயற்பாடுகள் கண்டறியப்படாதவை என மற்றுமொரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment