Search This Blog

Thursday, May 19, 2011

3500 ஆண்டுகளுக்கு முன்பே இதயநோய் தோன்றியது: ஆய்வில் தகவல்

ஆராய்சி செய்தி
3500 ஆண்டுகளுக்கு முன்பே இதயநோய் தோன்றியது: ஆய்வில் தகவல்

3500 ஆண்டுகளுக்கு முந்தய எகிப்து இளவரசி அக்மோஸ் மெர்யட் அமோன்க்கு இதய நோய் ஏற்பட்ட விவரத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.எகிப்தில் அரசக் குடும்பத்தினர் இறந்து போகும் போது அவர்களது உடல்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்தப்பட்டு புதைக்கப்படும். இவற்றுக்கு மம்மிக்கள் என்று பெயர். இந்த மம்மிக்களை மருத்துவர்கள் ஆய்வு செய்த போது 3500 ஆண்டுகள் முந்தய எகிப்து இளவரசி இதயநோயால் அவதிப்பட்டது தெரியவந்தது.
சிடி ஸ்கேன் எனப்படும் மனித குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ஆய்வு செய்த போது மம்மியாக புதைக்கப்பட்டிருந்த இளவரசிக்கு இதய நோய் இருப்பது தெரியவந்தது. இதய ஸ்கேனில் இளவரசிக்கு இதயம், மூளை, வயிறு மற்றும் கால்பகுதிகளுக்கு செல்லும் ரத்தக்குழாய் பகுதிகளில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எகிப்து இளவரசி இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் கூறினர். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைகழக நிபுணர்களுடன் அமெரிக்க இதய மருத்துவ நிபுணர்கள் 52 மம்மி உடல்களை ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் போது எகிப்து இளவரசிக்கு உள்ள நோய் விவரங்கள் தெரியவந்தன.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் தேசிய பழங்கால அருங்காட்சியகம் உள்ளது. அங்கு மம்மிக்கள் மீது முழு ஸ்கேன் செய்து நிபுணர்கள் பழங்காலத்திலேயே இதய நோய்த் தாக்கம் இருப்பதை உணர்த்தி உள்ளனர். ஆய்வு செய்த மம்மிக்களில் பாதி பேருக்கு இதய ரத்தக் குழாய்கள் தடித்து இருப்பது தெரியவந்தது.
இளவரசி அக்மோஸ் கிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகள் முன்பாக வாழ்ந்தவர். இந்த இளவரசி தனது 40 வயதில் மரணம் அடைந்துள்ளார். மிக சொகுசான வாழ்க்கை நடத்திய அந்த இளவரசி மிக சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தார்.
அந்த இளவரசி பழம், காய்கறிகள், மீன் வகைகளை அதிக அளவில் சாப்பிட்டு இருப்பார் என கலிபோர்னியா பல்கலைகழக ஆய்வாளர் மருத்துவர் கிரிகோரி தாமஸ் கூறினார்.

No comments:

Post a Comment