Search This Blog

Wednesday, April 27, 2011

குருப் பெயர்ச்சி பலன்கள் - 08 .05 .2011 - மே மாதம் ( மீனம் ராசியிலிருந்து மேஷம் ராசிக்கு )

குருப் பெயர்ச்சி பலன்கள் - 08 .05 .2011 - மே மாதம் ( மீனம் ராசியிலிருந்து மேஷம் ராசிக்கு )


இந்த வருட குருப் பெயர்ச்சி - இதோ வந்து விட்டது. பஞ்சாங்கப்படி - இந்த மே மாதம்   8 ஆம் தேதி (08 .05 .2011 )  மீன ராசியிலிருந்து , மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுமார் 14 மாதங்கள் அங்கு தங்கி - சிம்மம், துலாம், தனுசு ராசிகளை பார்வையிட விருக்கிறார். இந்த மூன்று ராசிகளுக்கும் , ராஜ யோகம் ஆரம்பிக்க விருக்கிறது.. இது நாள் வரை , சனியின் பார்வையில் இருந்ததால் முழுவதும் செயல்பட முடியாமல் , இருந்த சுப கிரகமான குரு பகவான் - சுமார் ஆறு மாதங்கள் , சனிப் பெயர்ச்சி நடக்கும் காலம் வரை , அள்ளி அள்ளி கொடுக்க விருக்கிறார் என்பது திண்ணம்.

பலன்கள் அபரிமிதமாக கிடைக்க , அனைத்து ராசிக்காரர்களும் - வியாழக் கிழமைகளில் - குரு பகவானை , முறைப்படி வழிபாடு செய்து வர , முறைகள் இந்த கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 
 http://mysteriesoccult.com/blog/wp-content/uploads/2009/06/Dakshinamurthy_guru.jpg

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் முடிய):

இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி உங்கள்ஜென்மராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார்.

விரய குருவை விட ஜென்ம குரு மோசமானவர் என்பது பொதுவான கருத்து. ஆனால், சில முக்கியமான விஷயங்களில் , நன்மைகள் நிறைய கிடைக்கும். . இதனால் உங்களுக்கு நல்ல காலம் தான்.

ஜென்மராசியில் உலாவும்போது புத்திர ஸ்தானம், களததிர ஸ்தானம், தந்தை ஸ்தானம் ஆகியவற்றை குருபகவான்புனிதப்படுத்துகிறார்.

இதனால் பெரும் லாபங்களை அடையப் போகிறீர்கள். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணமுயற்சிகள் இத்தனை காலம் இழுத்தடித்து வந்திருக்கும். இனி அந்த முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைக்கும்.திருமணம் தொடர்பாக நல்லதொரு விஷயம் நிச்சயம் நடக்கும்.

திருமணமானவர்களுக்கு குழந்தைப் பேறையும் தரப் போகிறார் குரு பகவான். லாட்டரி போன்ற அதிர்ஷ்டத்துக்கும்இடமுள்ளது. குருவின் அருட் பார்வையால் தன லாபம் அடையப் போகிறீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிச்சயம்உண்டு. கேட்டதைக் கொடுப்பார் குரு.

இதுவரை பணப் பஞ்சத்தால் விரக்தியின் எல்லைக்கே போன உங்களுக்கு இனி யோக காலம் தான்.

ஆனால், இந்த வருட இறுதியில்  உடல் நலம் பாதிக்கப்படலாம்.செய்யும் தொழிலில் ஏமாற்றங்களும் ஏற்படலாம். பணத் தட்டுப்பாடும் உருவாகும். ஆனால் ஒரு மூன்று மாதங்களில் , நிலைமைநல்லபடியாக மாறிவிடும். கவலை வேண்டாம்.
============================================

ரிஷபம் (கார்த்திகை 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதம் முடிய):

இதுவரை உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி 12ம் இடத்தில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

லாபஸ்தானஸ்தில் இருந்தவர் விரய ஸ்தானத்துக்கு போகிறார். இதனால் கவலையடைய வேண்டாம்.

ஆரம்பத்தில் பிரச்சனைகளைத் தந்தாலும் செப்டம்பர் மாதம் முதல் நீங்கள் நினைத்ததை விட மிக எளிதாகபிரச்சனைகள தீரும். குருவின் இந்தப் பெயர்ச்சியால் 4,6,8ம் இடங்களைப் பார்க்கப் போகிறார். 4ம் இடம்மனையைக் குறிக்கிறது. எனவே வீடு கட்டும் நல்ல யோகம் உங்களுக்கு வந்திருக்கிறது. 8ம் இடத்தைப் பார்ப்பதுநீங்கள் ரொம்ப லக்கி என்பதைத் தான் காட்டுகிறது. நீங்கள் கேட்கும்போது பணம் கிடைக்கும்.

வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைவிருக்காது. திருமணம் உள்பட பலவிதமான நல்ல நிகழ்ச்சிகள் நடக்கப்போகின்றன. இதனால் செலவுகளையும் சமாளித்தாக வேண்டும். அதே நேரம் பண வரவும் அதிகரிப்பதால் மிகமகிழ்ச்சியாய் செலவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தப் போகிறீர்கள். கடன்களை வாங்குவீர்கள், உடனேஅதை அடைத்தும் காட்டுவீர்கள்.

நீண்ட நாட்களாய் நினைத்திருந்த புனித பயணம் கைகூடும். உங்களது மதிப்பு கூடும் கால கட்டம் ஆரம்பமாகிறது.

சிலருடன் மோத வேண்டிய நிலையும் உருவாகும். குருவை வணங்கினால் அந்தத்தொல்லைகளை அவரே நீக்குவார்.
==============================================

மிதுனம் (மிருகசீரிஷம் 2,3ம் பாதம் முடிய, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம் வரை):

இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனிமேல் லாபஸ்தானமாகிய 11ம்இடத்துக்கு வருகிறார்.

உங்கள் ராசியில் 3,5,7ம் இடங்களை பார்க்கப் போகிறார். இதனால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்பொங்கும். குழந்தைகள் சாதனைகள் செய்வார்கள்.

இதனால் நிதி நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இந்தக் கால கட்டம் மிக அமோகமாக,அற்புதமாக இருக்கப் போகிறது.

ஜூலை முதலே பலவிதமான நல்ல திருப்பங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்க ஆரம்பித்துவிடும். ஊதியஉயர்வு, செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும்.

இதுவரை இருந்த நெருக்கடிகள் மறையும், வீடு, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு வாய்ப்புகள் உருவாகும்,திருமண நிகழ்ச்சிகள், குழந்தைப் பேறு என வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போகின்றன.

அலைகழிப்புகள், சிறிய தொல்லைகள் தொடர்ந்தாலும் அவற்றை இதுவரை இருந்தது மாதிரி இல்லாமல் மிகஈசியாக சமாளிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி குடியேறும்.

நீங்கள் கனவிலும் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். மிகச் சிறந்த கால கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறீர்கள். எந்தசந்தோஷத்திலும் இறைவனை மறக்க வேண்டாம்.
============================================================

கடகம் (புனப்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்):

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இனிமேல் 10ம் இடத்தில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.

10 இடத்தில் குரு வருவது உகந்தது அல்ல தான்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிற்சில பிரச்சனைகள் வரலாம் . தடைகளும் தாமதங்களும் எரிச்சலைத் தரலாம். இருக்கும் சில வசதிகளைப் பறிப்பார் குரு. கர்மஸ்தானத்தில் குரு இருப்பதால் பெற்றோருக்கு சிறிய பிரச்சனைகள் வந்து போகும்.

முதலீடுகளை யோசித்துச் செய்யவும். எந்த வேலையிலும் பலமுறை சிந்தித்து செயலில் இறங்கவும். உங்கள் ராசியில் 2,4,6 ஆகிய இடங்களைப் பார்க்கப்போகிறார் குரு பகவான்.

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உங்கள் பேச்சுக்கு மரியாதை இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் அடித்து பணத்தைக் கொட்ட வைக்கும். புதிய வாகனம்வாங்கவும் வாய்ப்புள்ளது. வீடு வாங்கும் அதிர்ஷ்டமும் உள்ளது. அதே நேரம் பணத்துக்காக கொஞ்சம் அலை கழிப்புகள், தடைகள், தாமதங்கள் ஏற்படும்.

டிசம்பர் 13ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை கொஞ்சம் ஜாக்கிரதை வேண்டும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குருவை வணங்கி வரவும்.
=====================================================================

சிம்மம் (மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம் முடிய):
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி 9ம் இடத்தில் சஞ்சாரிக்கப் போகிறார். எனவே, குரு உங்கள் வாழ்க்கையில் பல மிகப் பெரிய நல்ல மாறுதல்களைக் கொண்டு வரப் போகிறார்.

செல்வ வளம் கொட்டப் போகிறது. வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாகும். இதுவரை இருந்து வந்த பலவிதமான தடைகளும் காணாமல் போகப்போகின்றன. பல சந்தோஷமான தருணங்களில் மூழ்குவீர்கள்.

நீங்கள் எதைச் செய்தாலும் வெற்றி தான். மிகப் பெரிய திட்டங்களைப் போட்டு அவற்றை மிக எளிதாக வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். வீட்டில்ஒற்றுமை ஓங்கும். வீடு வாங்கும் வசதிகளும் தேடி வரும்.

செய்யும் வேலையில் பெரும் வெற்றிகளை அடைவீர்கள். ஊதிய உயர்வும், விரும்பிய இடமாற்றமும், உயர் பதவிகளும் தேடி வரும். பலவிதமானஅதிர்ஷ்டங்கள் காத்திருக்கின்றன. குழந்தைகளின் திருமண முயற்சிகள், உயர் கல்வி முயற்சிகள் எந்தவிதமான தடையும் இல்லாமல் நிறைவேறும்.

ராஜயோகமான கால கட்டத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறீர்கள். ஒளிமயமான வாழ்க்கை ஆரம்பமாகிறது. இறைவனை வணங்கிவெற்றிகரமான வாழ்க்கைக்காக நன்றி சொல்லுங்கள்.
=====================================================================

கன்னி (உத்திரம் 4ம் பாதம் முடிய, ஹஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை):

இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் இனிமேல் எட்டாம் இடத்துக்கு மாறுகிறார்.

உச்சத்தில் குரு பகவான் இருக்கப் போவதால் கிரக தோஷம் உங்களுக்கு இல்லை. இதனால் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. டென்சன்களைத்தருவார், சில சுகங்களைக் குறைப்பார். ஆனால், ஏடாகூடாமாக ஏதும் செய்துவிட மாட்டார். இதனால் கவலை வேண்டாம்.

அதே நேரத்தில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் எந்தச் செயலையும் செய்வது நல்லது.

எடுத்த காரியங்கள் முதலில் தடைபட்டாலும் பின்னர் நீங்கள் நினைப்பதைவிட எளிதாக, வேகமாக முடிந்துவிடும். ஏகப்பட்ட செலவுகள் ஏற்படும்.ஆனால், இவை சுபச் செலவு தான் என்பதால் கவலை வேண்டாம். பணத் தட்டுப்பாடு இருக்காது, செலவோடு சேர்ந்து வரவும் அதிகமாக இருக்கும்.

வீடு, வாகன சேர்க்கைக்கும் பெண்களுக்கு நகைகள் சேர்க்கவும் வாய்ப்புகளும் வசதிகளும் உருவாகும். உங்கள் பெயரில் அசையா சொத்தை வைப்பதைவிடவீட்டில் பிறரது பெயரில் பதிவு செய்யுங்கள். அது உங்களிடம் தங்கியிருக்கும்.

குரு 2,4,12ம் இடங்களைப் பார்ப்பதால் வீட்டில் மகிழ்ச்சி, செல்வத்துக்கு குறையிருக்காது. தாய் வழியில் நன்மைகள் உண்டாகும்.

குழந்தைகளின் சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். டிசம்பர்   வீட்டில் சிறியபிரச்சனைகள், உறவினர்களுடன் சண்டை வரலாம். அலுவலகத்திலும் திடீர் பிரச்சனைகள் வரலாம்.
================================================================================
துலாம் (சித்திரை 4ம் பாதம் முடிய, விசாகம் 3ம் பாதம் வரை):

இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனி 7ம் இடத்தில் சஞ்சாரிக்கப் போகிறார்.

கடந்த ஓராண்டாக 6ம் இடத்தில் இருந்த குருபகவான் பல துன்பங்களைத் தந்தார். வரவு குறைந்ததால் கடன்அதிகரித்து கரடுமுரடான வாழ்க்கையை அனுபவித்து வந்திருப்பீர்கள். நம்பிக்கைத் துரோகங்களால் வேதனைஅடைந்து வந்திருப்பீர்கள்.

இனி அந்தத் தொல்லைகளில் இருந்து தப்பிக்கப் போகிறீர்கள். குரு 7ம் இடத்துக்கு வருவதால் இனி அமர்களமான,அதிஷ்டகரமான வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறீர்கள். செல்வந்தர்களின் உதவி கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையை முன்னேற்றமான பாதையில் குருபகவான் திசை திருப்பி விடப் போவதால் நினைத்தகாரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

வீட்டில் இருந்த குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற கணவன்- மனைவி இடையிலான உறவி சீர்படும். திருமணமுயற்சிகள் பலன் தரும்.

குழந்தைகளின் உயர் கல்வி முயற்சிகள் நினைத்தடி நடந்தேறும்.

மிகச் சாதகமான கால கட்டத்தில் காலடி எடுத்து வைக்கிறீர்கள். பல அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. சொத்துக்கள்சேரும். வீடு கட்டும் முயற்சிகள் வெல்லும், பெண்கள் நகைகளைச் சேர்ப்பீர்கள்.

வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த காலகட்டமாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு முயற்சிசெய்தால் நிச்சயம் பலன் உண்டு.


மற்றபடி இந்த குருப் பெயர்ச்சியால் உங்களுக்கு ஆனந்தமான வாழ்வு காத்திருக்கிறது. இறைவனுக்கு நன்றிசொல்லி இந்த குருபெயர்ச்சியை வரவேற்று நலன் பெறுக.
===========================================================================================

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை):
இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி 6ம் இடத்தில் சஞ்சாரிக்கப் போகிறார்.5ம் இடத்தில் இருந்த குருவால் உங்கள் ராசிக்கு பலவிதமான பிரச்சனைகள் வந்திருக்கலாம்.

இது ரோகஸ்தானம் என்பதால் நோய்கள் தாக்கலாம் என்ற அச்சம் உங்களுக்கு ஏற்படும். ஆனால், தன் வீட்டைதானே குரு பார்க்கிறார். இது தோஷ நிவர்த்தியாகும். மேலும் இரண்டாம் இடத்தையும் அவர் பார்ப்பது உங்களுக்குதீமைகளைவிட நன்மைகளே அதிகம் உண்டாகும். நல்லதிலும் கெட்டது நடக்கும். கெட்டதிலும் நல்லது நடக்கும்.


வியாதிகள் நீங்கப் போகின்றன. பண வரவு அதிகரிப்பதால் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். குருஉங்கள் ராசியில் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். 10ம் இடத்தைப்பார்ப்பதால் தொழில் முயற்சிகள் வெல்லும், புதிய வேலைக்கு முயன்றால் வெற்றி கிடைப்பது நிச்சயம்.

பயணங்களும் வெற்றியைத் தரும். 12ம் இடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

அதே நேரத்தில்  வரவோடு சேர்ந்து செலவும் பலமடங்குஅதிகரிக்கும். பயணங்களில் தாமதங்களும், போன வேலை முடியாமலும் போகலாம்.

மற்றபடி பொதுவில் திருமண முயற்சிகள் வெல்லும். குழந்தைப் பேறு உண்டாகும். வேலை பார்ப்பவர்களுக்கு நல்லமுன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிலர் வெளியூர்களுக்கு அல்லதுஉள்ளூரிலேயே இடம் மாற வேண்டி வரலாம். அதுவும் நன்மைக்கே. வீடு, இடம் வாங்கும் யோகமும் இந்தராசிக்காரர்களுக்கு உருவாகும்.

ஆறாம் இடம் குருவுக்கு மிகவும் உகந்த இடமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால், எதைச்செய்தாலும் மிகவும் யோசித்து, நிதானமாக செய்யவும். அலைச்சல் அதிகமாகவே இருக்கும்.

தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.
================================================================================

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை):

இதுவரை 4ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்கு வருகிறார். அதிகமான நன்மைகள் உண்டாகப் போகின்றன. அங்கிருந்தபடி 9 மற்றும் 11ம்இடங்களைப் பார்க்கிறார். இதனால் உங்களுக்கு நல்லதொரு காலகட்டம் தொடங்குகிறது.

பிரமிக்கத்தக்க நல்ல மாறுதல்களுடன் கூடிய அற்புதமான திருப்பம் ஏற்படும். உங்கள் செல்வாக்கு, புகழ் உயரும்.

எடுத்த காரியங்கள் வெல்லும். தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். வீட்டில் லட்சுமி தாண்டவமாடும். இதுவரைஇருந்த தடுமாற்றங்கள் தவிடுபொடியாகும். நோய் நொடிகள் நீங்கும். இதுவரை இருந்த அலைகழிப்புகள்,தடங்கள் எல்லாம் விலகும்.

குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தைகளின் உயர் கல்வி திட்டமிட்டபாதையில் செல்லும். வேலை வாய்ப்புக்காக குழந்தைகள் வெளிநாடு செல்லவும் வாய்ப்பு உண்டாகும்.

அதே நேரம் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் சுமையும் கூடும். இருந்தாலும் யோகமான காலகட்டம்ஆரம்பிப்பதால் எல்லா பிரச்சனைகளையும் மிக எளிதாக சமாளித்து முன்னேறிவிடுவீர்கள்.

குருவை வணங்கி இந்த நல்ல காலத்தை அனுபவியுங்கள்.

========================================================================

மகரம் (உத்திராடம்  4ம் பாதம் , திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் முடிய):

இதுவரை உங்கள் ராசியில் 3ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது நான்காமிடத்துக்குச் செல்கிறார். நான்காம் இடத்தால் மிகப் பெரிய நன்மைகள்தரப் போவதில்லை என்பது உண்மை. ஆனால், 3ம் இடத்தை விட 4ம் இடம் பரவாயில்லை.

அதிர்ஷ்டம் என்பது அளவோடு இருக்கும். சிலருக்கு அதிரடி மாற்றங்கள் வரும். ஆனால், பெரும்பான்மையானவர்களுக்கு இயல்பான நிலை தான்இருக்கும்.

பணம் வருவது மிகப் பெரிய அளவில் அதிகரிக்காது. ஓரளவுக்கு தன லாபம் வந்தாலும் செலவுகளும் கூடலாம்.

குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில பிரச்சனை ஏறபடுவதால் வியாபாரத்தில் சிக்கல் உண்டாகும்.


உத்தியோகஸ்தர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. இட மாற்றம், தொழில் மாற்றங்களை சந்திப்பீர்கள். நீடித்து வரும் நோய்களில் இருந்து விடுதலைகிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும்.

வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
===================================================================

கும்பம் (அவிட்டம் 4ம் பாதம் , சதயம், பூரட்டாதி 3ம் பாதம் முடிய):

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் இப்போது மூன்றாம் இடத்துக்கு வருகிறார்.

இந்தப் பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது. தனஸ்தான குரு கடைசி நேரத்திலாவது பணத்தைக் காட்டிவிடுவார். இதனால், பெரியஅளவில் நிதிப் பிரச்சனைகள் எல்லாம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரப் போகிறார் குரு பகவான்.

திருமணம் நடப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் விலகப் போகின்றன. காதல் திருமணங்களுக்கும் இரு வீட்டாரும் அனுமதி தரும் நல்ல சூழ்நிலைகள் உருவாகும்.

11ம் இடமான லாபஸ்தானத்தை குரு பார்ப்பதாலும் சுக்கிரனின் ஆதிக்கத்தாலும் பணப் புழக்கம் அதிகரிப்பதோடு, சில அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கும்இடமுண்டு. ஏகபபட்ட பிரயாணமும் உண்டாகும்.


இவ்வளவு இருந்தாலும் குருவின் இடப் பெயர்ச்சி மனதில் தைரியத்தை அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகமும் உருவாகும். உல்லாசம், ஆடம்பரத்துக்கும்குறைவிருக்காது.

குருவுக்கு மூன்றாம் இடம் உகந்ததல்ல. ஆனாலும் அவர் ஒரு சுப கிரகம். எந்தவிதமான பெரும் தீங்குகளையும் தரவே மாட்டார். அவரை வணங்கிநலம் பெறுங்கள்.
================================================================================

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி):

இதுவரை உங்கள் ராசியில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனி உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்துக்கு மாறுகிறார். ஜென்ம ராசியில் இருந்தவரைஉங்களை முன்னாலும் போக விடாமல் பின்னுக்கும் வந்துவிடாமல் தடுமாற வைத்தார் குரு பகவான்.

இரண்டாவது இடத்துக்கு பிரவேசித்தன் மூலம் மிகப் பெரிய மாறுதல்களையும் தன லாபத்தையும் தரப் போகிறார் குரு பகவான். வருமானம் பெருகுவதுமட்டுமல்லாமல் பலவிதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரப் போகிறது.

தைரியமும் மன வலிமையும் பல மடங்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்ட வெற்றி களைக் குவிப்பீர்கள். தடைபட்ட திருமணங்கள் கைகூடும். பொன்,பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

தொழில்ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்களே வியக்கும் அளவுக்கு நல்ல பல விஷயங்கள் நடந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இனி நல்ல காலம்தான். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குழந்தைகள் பிறப்பு போன்ற ஆனந்த சம்பவங்களுக்கு நிறையவே சான்ஸ் உள்ளது.

பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் ஆகியவற்றுக்கு நிறைய வாய்ப்புண்டு. உயர் கல்விக்கும் நல்ல வாய்ப்புள்ளது.


குரு வாழ்க, குருவே துணை
=============================================================================

குருப் பெயர்ச்சி - 2011

கிரஹங்களிலேயே ஸ்ரீ குருகவான் சுபக் கிரஹம் ஆவார். பொன் கிரஹம். நல்லதையே செய்பவர்.

குருவின் ஸ்தலம்: ஆலங்குடி. தட்சிணாமூர்த்தியாக இங்கு எழுந்தருளியிருக்கிறார் குரு பகவான். இந்தத் தலம்தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இது ஒரு பரிகாரத் தலமாகும். இங்கு பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் இக்கோவிலை 24 முறை சுற்றி வரவேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு நெய் தீபம் ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் காலம் மாலை 4 மணிமுதல் மாலை 6 மணி வரை. குருபகவானின் மூல மந்திரம் 24 வார்த்தைகளைக் கொண்டது. இதனால் இந்தஆலயத்தில் எல்லாமே 24 முறைகள் செய்யப்படுகின்றன.

தனுர் ராசியம், மீன ராசியும் இவரது ராசிகள்.

குருவுக்கு வெண்மை நிறைந்த பசுவின் பால் மிகவும் பிடித்தமானது. பால், பால் கர்க்கரை கலந்த இனிப்புப்பொங்கல், தயிர் சாதம், வெள்ளை கொண்டைக் கடலை ஆகியவை இவருக்கு உரிய நிவேதனங்கள்.

பசும்பொன் வண்ணம் கொண்டவர். பணத்துக்கு நாயகனாக விளங்குபவர் குரு. மேஷம், சிம்மம், கன்னி,விருச்சிகம் ஆகியவை இவரது நட்பு ராசிகள்.

வழிபடும் முறை:

குருவை பெயர்ச்சிக்கு முன்னதாகவே வழிபட்டுவிட வேண்டும். குருப் பெயர்ச்சி ஹோமங்களில் பங்கேற்பது நலம்தரும்.

குரு பாமாலை:

குருவை வழிபட இந்தப் பாமாலையை மனம் ஒன்றி படியுங்கள். அவரது பூரண அருள் கிடைக்கும்.

பாமாலை:

வானவர் கரசே வளம் தரும் குருவே

காணா இன்பம் காணவைப் பவனே

பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்

உந்தனுக் களித்தால் உள்ளம் மகிழ்வாய்

சுண்டல் தான்யம் சொர்ணாபிஷேகமும்

கொண்டுனை வழிபட குறைகள் தீர்ப்பாய்

நாளைய பொழுதை நற்பொழு தாக்குவாய்

இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்

உள்ளத்தில் அமைதி உறைந்திடச் செய்வாய்

தலைமைப் பதவியும் தக்கதோர் புகழும்

நிலையாய்த் தந்தே நிம்மதி கொடுப்பாய்

தவப்பயனால் உன் தாளினைப் பணிந்தேன்

சிவப்பிரியா நீ திருவருள் தருவாய்

Read more: http://www.livingextra.com/2011/04/08-05-2011.html#ixzz1KiZEu9Pg

No comments:

Post a Comment